உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சையரத்த அரணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பச்சையரத்த அரணை
உயிரியல் வகைப்பாடு e
இனம்:
P. 
இருசொற் பெயரீடு
Prasinohaema
Allen Eddy Greer, 1974


பச்சையரத்த அரணை (Prasinohaema) என்பது பச்சையான அரத்தம் கொண்ட ஓர் அரணைப் பேரினம். இந்த அரணைப்பேரினம் நியூகினியிலும் சாலமன் தீவுகளிலும் வாழ்கின்ற ஓர் பேரினம். இதன் அறிவியல் உயிரினப்பெயரில் உள்ள பிரசினோ (Prasino, Πράσινο) என்பது பச்சை என்னும் பொருள் கொண்ட கிரேக்கச்சொல். அறிவியற் பெயரின் பின்பகுதியாக உள்ள haema என்பது சிவப்பு என்னும் பொருள்தரும் அரத்தத்தைக் குறிக்கும் கிரேக்கச்சொல். இந்தப் பச்சையரணையின் அரத்தம் பச்சை நிறமாக இருப்பதற்குக்காரணம் இதன் அரத்தத்தில் பிலிவெர்டின் என்னும் பித்தநீர்ப்பொருள் இருப்பதால்[1] . மாந்தர்களுக்கு ஏற்படும் மஞ்சள்காமாலை நோய் இருக்கும் பொழுதும் இந்தப் பித்தப்பொருள் உடலில் கூடுதலாக இருக்கும். மஞ்சக்காமாலை இருக்குபொழுது இருக்கும் பித்தத்தைப் போல 40 மடங்கு அதிகமானதாக இருக்கும் இந்த அரணையில். பச்சையான அரத்தம் உள்ள மீனின் அரத்தத்தைப் போல 1.5 முதல் 30 மடங்கு கூடுதலாகப் பித்தப்பொருள் இருக்கும். ஏன் இப்படி அதிகமாக பிலிவெர்டின் இருக்கின்றது என்று தெரியவில்லை, ஆனால் மலேரியாவைத் தடுப்பதற்காக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது[2][3]. இதன் நாக்கும் எலும்பும், தசைகளும் கூட பச்சை நிறமாக இருக்கும்[4] .

நிலப்பரம்பல்

[தொகு]

இந்தப் பச்சையரத்த அரணைகள் நியூகினியிலும் சாலமன் தீவுகளிலும் காணப்படுகின்றன[5].

இனங்கள்

[தொகு]

இந்தப் பச்சையரத்த அரணைப் பேரினத்தில் ஐந்து இனங்கள் உள்ளன:[5]

  • Prasinohaema flavipes (Parker, 1936) – பொது மரம்வாழ் பச்சையரணை
  • Prasinohaema parkeri (M.A. Smith, 1937) – பார்க்கரின் மரம்வாழ் பச்சையரணை
  • Prasinohaema prehensicauda (Loveridge, 1945) – பற்றுவால் மரம்வாழ் பச்சையரணை
  • Prasinohaema semoni (Oudemans, 1894) – செமோன் பச்சையரணை
  • Prasinohaema virens (W. Peters, 1881) - பைம் பச்சையரணை

குறிப்புதவி: பிறைக்குறிகளுக்குள் காட்டப்படும் உயிரின வகைப்பாட்டுப்பெயர் முன்னர் இந்தப் பச்சையரணைப் பேரினத்தின் கீழ் குறிக்கப்பெறாதவை.

சொற்பெயர்

[தொகு]

இருபெயரொட்டுப் பெயர்களில் பார்க்கரி (parkeri) என்பதும் செமோனி (semoni) என்பதும் முறையே ஆங்கில பாம்பியல் அறிவியலாளர் ஆம்டன் (Hampton Wildman Parker), இடாய்ச்சுலாந்திய விலங்கியல் அறிவியலாளர் இரிச்சேரடு உவுல்வுகங்கு செமோன் (Richard Wolfgang Semon) என்பவர் பெயராலும் அமைந்தது [6]

உசாத்துணை

[தொகு]
  1. Austin, Christopher C.; Jessing, Kevin W. (1994). "Green-blood pigmentation in lizards". Comparative Biochemistry and Physiology Part A: Physiology 109 (3): 619–626. doi:10.1016/0300-9629(94)90201-1. https://archive.org/details/sim_comparative-biochemistry-and-physiology-part-a-physiology_1994-11_109a_3/page/619. 
  2. Grens, Kerry (2018-05-16). "Lizards' Green Blood Evolved Four Times". The Scientist. பார்க்கப்பட்ட நாள் 2018-05-18.
  3. Malhotra, Anita (23 May 2018). "Some lizards have green blood that should kill them – and scientists can't work out why". The Independent.
  4. https://www.dogonews.com/2016/9/15/these-mysterious-lizards-bleed-green
  5. 5.0 5.1 Genus Prasinohaema at The Reptile Database. www.reptile-database.org.
  6. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Prasinohaema parkeri, p. 200; P. semoni, p. 240).

மேலும் படிக்க

[தொகு]
  • Greer AE (1974). "The genetic relationships of the Scincid lizard genus Leiolopisma and its relatives". Australian J. Zool. Supplementary Series 22 (31): 1-67. (Prasinohaema, new genus, p. 12).

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சையரத்த_அரணை&oldid=3624389" இலிருந்து மீள்விக்கப்பட்டது