உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சைப் பச்சோந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ParaHoxozoa
பச்சைப் பச்சோந்தி
ஆண்
உயிரியல் வகைப்பாடு e
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
செதிலுடைய ஊர்வன
Suborder:
இகுவானோமோர்பா
குடும்பம்:
பச்சோந்தி
பேரினம்:
பர்சிபர்
இனம்:
F. viridis
இருசொற் பெயரீடு
Furcifer viridis
புளோரியோ மற்றும் பலர், 2012

பச்சைப் பச்சோந்தி (Furcifer viridis)(பர்சிபர் விரிடிசு), மேற்கு மற்றும் வடக்கு மடகாசுகரில் உள்ள காடுகள், புதர்கள் மற்றும் புல்வெளிகளில் பரவலாகக் காணப்படும் பச்சோந்தி சிற்றினமாகும்.[1] பெண் பச்சோந்தி 19 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. பொதுவாக இது இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் மச்சம் அல்லது பட்டையுடன் கூடியது. , ஆண் பச்சோந்தி 28 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. பெரும்பாலும் இது பச்சை நிறத்தில் காணப்படும். பொதுவாக இவற்றின் வாயில் வெளிறிய விளிம்புகள் மற்றும் இவற்றின் உடலின் நடுவில் காணப்படும் வெளிறிய கிடைமட்ட பட்டைகளுடன் காணப்படும். இது முன்பு ப. லேட்டரலிசின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது, ஆனால் 2012-ல் ஒரு தனி சிற்றினமாக அங்கீகரிக்கப்பட்டது.[2][3]

இவற்றின் காலின் ஒரு பக்கத்தில் மூன்று கால்விரல்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கின்றன, மறுபுறம், இரண்டு ஒன்றாக ஒட்டிக்கொண்ட கால்விரல்கள் காணப்படுகின்றன. நீண்ட ஒட்டும் நாக்குடன் உணவைப் பிடிக்க இவை உருமறைப்பை நம்பியுள்ளன. பர்சிபர் பேரினத்தைச் சேர்ந்த மற்ற பச்சோந்திகளைப் போலவே இவற்றின் வால் சுழல் போலச் சுருண்டு மரக்கிளைகளில் தொங்கப் பயன்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Raxworthy, C.J.; Jenkins, R.K.B. (2014). "Furcifer viridis". IUCN Red List of Threatened Species 2014: e.T42695980A42695984. doi:10.2305/IUCN.UK.2014-3.RLTS.T42695980A42695984.en. https://www.iucnredlist.org/species/42695980/42695984. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Florio, A.M.; Ingram, C.M.; Rakotondravony, H.A.; Louis, E.E.; Raxworthy, C.J. (2012). "Detecting cryptic speciation in the widespread and morphologically conservative carpet chameleon (Furcifer lateralis) of Madagascar". Evolutionary Biology 25 (7): 1399–1414. doi:10.1111/j.1420-9101.2012.02528.x. பப்மெட்:22686488. 
  3. "Furcifer viridis". madcham.de. 5 September 2014. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.
  4. Furcifer viridis at the Reptarium.cz Reptile Database. Accessed 2018-10-31.
  • Chameleons, by Chris Mattison & Nick Garbutt
  • What Reptile? A Buyer’s Guide For Reptiles And Amphibians, by Chris Mattison
  • Reptile Magazine
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சைப்_பச்சோந்தி&oldid=4047706" இலிருந்து மீள்விக்கப்பட்டது