பச்சைக் கொண்டை கிளிஞ்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Bolbometopon|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பச்சைக் கொண்டை கிளிஞ்சான்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Bolbometopon
இனம்:
இருசொற் பெயரீடு
Bolbometopon muricatum
(Valenciennes, 1840)
வேறு பெயர்கள் [2]
  • Scarus muricatus Valenciennes, 1840
  • Bolbometopon muricatus (Valenciennes, 1840)
  • Callyodon muricatus (Valenciennes, 1840)

பச்சைக் கொண்டை கிளிஞ்சான் (Bolbometopon muricatum) என்பது மிகப்பெரிய கிளிஞ்சான் மீன் இனமாகும். இது 1.5 m (4.9 அடி) நீளம் வரையும், 75 kg (165 lb) எடை வரை எட்டும்.  

இது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் மேற்கில் செங்கடல் முதல் கிழக்கில் சமோவா வரையிலும், வடக்கில் யயமா தீவுகளில் இருந்து தெற்கில் ஆத்திரேலியாவின், பெருந் தடுப்புப் பவளத்திட்டு வரை பவளப் படிப்பாறை பகுதிகளில் காணப்படுகிறது. [2]

இதன் மற்ற பொதுப் பெயர்களாக பம்ப்ஹெட் கிளி மீன், ஹம்ப்ஹெட் கிளி மீன், இரட்டை தலை கிளி மீன், எருமை கிளி மீன், மாபெரும் கிளி மீன் போன்றவை உள்ளன.

இது போல்போமெடோபோன் என்ற பேரினத்தில் உள்ள ஒரே இன மீனாகும். இது பவளப்பாறைகளில் வாழும் மிகப்பெரிய தாவர உண்ணி மீன் ஆகும். [3]

இனங்கள் விளக்கம்[தொகு]

இந்த மீனின் முதன்மை அடையாளமாக, இதன் செங்குத்து தலையில் உள்ள புடைப்பு போன்ற வீக்கம் உள்ளது. மற்ற கிளிமீன்களைப் போலல்லாமல் இதன் தலையின் முன் முனை தவிர உடலானது செதில்களால் ஒரே மாதிரியாக மூடப்பட்டிருக்கும். இந்த மீன்கள் பெரும்பாலும் வெளிர் பச்சை முதல் இளஞ்சிவப்பு நிறம் வரை இருக்கும். இந்த இனத்தின் நிற வேறுபாடு பாலினத்துடன் தொடர்புடையதாக இருக்காது. இதில் இளம் வயது மீன்களுக்கு நெற்றியில் புடைப்பு வீக்கம் இருக்காது. வளர்ந்த பிறகே இவ்வாறான புடைப்பு உருவாகிறது. இவற்றின் தட்டுபோன்ற பற்கள் நன்கு தெரியக்கூடியதாக இருக்கும். அந்தப் பற்களை இவற்றின் உதடுகள் ஓரளவு மூடியபடி இருக்கும். இந்த இன மீன்கள் மெதுவாக வளரக்கூடியன. இவை நீண்ட காலம் (40 ஆண்டுகள் வரை) வாழக்கூடியன. இவை தாமதமாக இனப்பெருக்கம் செய்வதால் குறைந்த விகிதத்திலேயே இவற்றின் எண்ணிக்கை கூடுகிறது.

இந்த இனம் அளவில் பெரியது. இது பொதுவாக சிறிய கூட்டமாக திரியக்கூடியது. ஒரு குழுவில் ஏறத்தாழ 75 மீன்கள் இருக்கும்.

இனப்பெருக்கம்[தொகு]

பச்சை கொண்டை கிளிஞ்சான் மீன்களுக்கு, பாலியல் ரீதியாக நிற வேறுபாடு அற்றவை. [4] பெண் மீன்கள் பொதுவாக நிலவு சுழற்சியின் போது வெளிப்புற திட்டுச் சரிவுக்கு அருகில் அல்லது வாய்களுக்கு அருகில் முட்டையிடுகிறது, பொதுவாக அமாவாசைக்கு சற்று முன்பு முட்டையிடுகிறது. [5]

வேக் தீவுக்கு அருகில் ஆண் கொண்டை கிளிஞ்சான்கள் தலைகளை முட்டி சண்டையிடும் காணொளி

சூழலியல்[தொகு]

புதிய இளம் குஞ்சுகள், பவளப் பாறை வாழ்விடங்களில் (முதன்மையாக அக்ரோபோரா ) அடைக்கலமாகின்றன. [6] சற்று வளர்ந்த பச்சை கொண்டை கிளிஞ்சான் கடற்காயல்களில், பெரும்பாலும் கடற் புல் படுகைகளில் காணப்படுகின்றன. பெரிய வளர்ந்த மீன்கள் பெரிய வெளிப்புற கடற்காயல்களிலும், பாறைகள் கொண்ட கடல் பகுதியில் 30 மீட்டர் ஆழம் வரை காணப்படுகின்றன. இவை பெந்திக் பாசி மற்றும் உயிருள்ள பவளப்பாறை குருத்துகளை உண்கின்றன. [7]

வயது வந்த பச்சை கொண்டை கிளிஞ்சான் தன் உணவுக்காக தன் தலையால் பவளப்பாறைகளை மோதி இடித்து உடைந்த துண்டுகளை உணவாக்கிக் கொள்ளும். வயது வந்த ஒவ்வொரு மீனும் வருடத்திற்கு ஐந்து டன் உயிருள்ள பவளப்பாறை துண்டுகளை உட்கொள்கிறது. இந்த மீன்கள் பவளப்பாறைகள், குகைகள், மூழ்கிய கப்பல்கள் போன்றவற்றில் இரவில் கூட்டமாக தூங்குகின்றன. இந்த மீன்களில் ஆண் மீன்கள் ஆடுகள் போல தலை முட்டி சண்டையிடுவதும் உண்டு.

பாதுகாப்பு[தொகு]

இந்த இனம் பெரிய அளவுவும், மெதுவான வளர்ச்சியும் கொண்டவை. இவை கூட்டமாக திரியும் பண்பு கொண்டுள்ளதால் அதிகப்படியான மீன்பிடித்தலுக்கு உள்ளாகின்றன. [5] இந்த இன மீன்கள் வாழும் எல்லை முழுவதும் மீனவர்களால் அதிகம் தேடப்படுகின்றன, மேலும் இவை அதிக மீன்பிடித்தலால் அருகிவருகின்றன. [8] . குத்தீட்டி மீன்பிடிப்பாளர் மற்றும் வலைவீசி மீன்பிடிப்பவர்களால் இந்த மீன்கள் கூட்டமாக இரவில் தூங்கும்போது குறிவைக்கின்றன. [9] இந்த இனம் 2004 இல் NOAA/NMFS ஆல் கவலைக்குரிய இனமாக அடையாளம் காணப்பட்டது. [10] அதாவது இந்த இனங்கள் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனமாக கருதப்படுகிறது. ஆனால் அழிந்து வரும் இனங்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பட்டியலில் சேர்க்க போதுமான தரவுகள் இல்லை. [11] [12]

இவற்றின் வாழ்விட சீரழிவு இவற்றின் வீழ்ச்சியை துரிதப்படுத்தியுள்ளன. நீரின் மோசமான தரத்தால் இளம் குஞ்சுகளின் வாழ்விடங்கள் சீரழிந்துபோயுள்ளன. [6]

இசுகூபா மூழ்கலின் போது ஈட்டி மீன்பிடித்தல் அமெரிக்க சமோவாவில் 2001 இல் தடை செய்யப்பட்டது. [13] வேக் தீவு, ஜான்ஸ்டன் பவளத்தீவு, பால்மைரா பவளத்தீவு ஆகியவற்றைச் சுற்றியுள்ள கடலோர நீர்நிலைகளில் இருந்து 50 பதொம்கள் (91 m) குறைந்த பயன்பாட்டு கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதாவது இந்த மீனைப் பிடிக்க அமெரிக்காவின் எந்தவொரு நபரும் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்த பிராந்தியங்களைச் சுற்றியுள்ள அமெரிக்க பிரத்தியேக பொருளாதார மண்டல நீர்நிலைகளில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இசுகூபா மூழ்கலில் ஈட்டி மீன் பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. பலாவில் உள்ள மீன்கள் இப்போது ஏற்றுமதி தடை மூலம் பாதுகாக்கப்படுகிறது. [14]

குறிப்புகள்[தொகு]

 

  1. Chan, T.; Sadovy, Y.; Donaldson, T.J. (2012). "Bolbometopon muricatum". IUCN Red List of Threatened Species 2012: e.T63571A17894276. doi:10.2305/IUCN.UK.2012.RLTS.T63571A17894276.en. https://www.iucnredlist.org/species/63571/17894276. பார்த்த நாள்: 8 February 2020. 
  2. 2.0 2.1 "Bolbometopon muricatum". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. March 2006 version. N.p.: FishBase, 2006.
  3. Muñoz, Roldan C.; Zgliczynski, Brian J.; Laughlin, Joseph L.; Teer, Bradford Z. (2012-06-06). Steinke, Dirk. ed. "Extraordinary Aggressive Behavior from the Giant Coral Reef Fish, Bolbometopon muricatum, in a Remote Marine Reserve" (in en). PLOS ONE 7 (6): e38120. doi:10.1371/journal.pone.0038120. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:22701606. Bibcode: 2012PLoSO...738120M. 
  4. D.R. Bellwood. "Scaridae" (PDF). FAO. பார்க்கப்பட்ட நாள் 8 February 2020.
  5. 5.0 5.1 Taylor, Brett M.; Hamilton, Richard J.; Almany, Glenn R.; Howard Choat, J. (30 July 2018). "The world's largest parrotfish has slow growth and a complex reproductive ecology". Coral Reefs 37 (4): 1197–1208. doi:10.1007/s00338-018-1723-9. Bibcode: 2018CorRe..37.1197T. Taylor, Brett M.; Hamilton, Richard J.; Almany, Glenn R.; Howard Choat, J. (30 July 2018).
  6. 6.0 6.1 Hamilton, Richard J.; Almany, Glenn R.; Brown, Christopher J.; Pita, John; Peterson, Nathan A.; Howard Choat, J. (June 2017). "Logging degrades nursery habitat for an iconic coral reef fish". Biological Conservation 210: 273–280. doi:10.1016/j.biocon.2017.04.024. Hamilton, Richard J.; Almany, Glenn R.; Brown, Christopher J.; Pita, John; Peterson, Nathan A.; Howard Choat, J. (June 2017).
  7. Aquatic Life of the World. Marshall Cavendish. https://books.google.com/books?id=T2qZHTpbiowC&pg=PA411. 
  8. "Bumphead Parrotfish". fiji.wcs.org. Archived from the original on 2019-03-30. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
  9. Patankar, Vardhan; Wagh, Tanmay; Marathe, Aniruddha (2019-02-28). "Protected areas and benthic characteristics influence the distribution of the Vulnerable bumphead parrotfish Bolbometopon muricatum in the Andaman and Nicobar Islands, India" (in en). Oryx 54 (4): 564–571. doi:10.1017/S0030605318000376. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-6053. 
  10. "Species of Concern - Bumphead Parrotfish - fpir.noaa.gov" (PDF).
  11. Fisheries, NOAA. "Proactive Conservation Program: Species of Concern :: NOAA Fisheries". www.nmfs.noaa.gov.
  12. "77 FR 66799 - Endangered and Threatened Wildlife and Plants: Notice of 12-Month Finding on a Petition To List the Bumphead Parrotfish as Threatened or Endangered Under the Endangered Species Act (ESA)". www.govinfo.gov. November 7, 2012. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
  13. Fishery Management Plan for Coral Reef Ecosystems of the Western Pacific Region: Environmental Impact Statement. https://books.google.com/books?id=XOc3AQAAMAAJ&pg=PA281. 
  14. Fish Conservation: A Guide to Understanding and Restoring Global Aquatic Biodiversity and Fishery Resources. https://books.google.com/books?id=eGGqGYEQXDkC&pg=PA359. 

வெளி இணைப்புகள்[தொகு]