பச்சைக்கண் புதர் தவளை
| பச்சைக்கண் புதர் தவளை | |
|---|---|
| பச்சைக்கண் புதர் தவளை | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| வேறு பெயர்கள் | |
| |
பச்சைக்கண் புதர் தவளை (Raorchestes chlorosomma) என்பது இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்நில வாழ்விடத்தில் வாழும் அகணிய உயிரி ஆகும்.[2] விலங்கியல் வகைப்பாட்டியல்படி, இந்த இனத்தின் தவளை, இராகோபோரிடே என்ற குடும்பத்தின் கீழுள்ள, இராவோர்செசுடெசு என்ற பேரினத்தில் அமைந்துள்ளது. இதன் மாதிரி சோலைக்காடுகளில் எடுக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் மட்டுமே காணப்படும், உயரமான பசுமைமாறாக் காடுகள் பகுதிகளில் அறியப்பட்டது. இந்த இனம், மிகக் கனமழைக்குப் பிறகு, தரையிலிருந்து சுமார் 1 மீட்டர் உயரத்திலிருந்து, இரண்டாம் நிலைக் காடுகள், தேயிலை, யூகலிப்டஸ் தோட்டங்களுக்கு அருகிலும் காணப்பட்டுள்ளது.[1]
செம்பட்டியல் நிலை
[தொகு]இவை தீவிர அழிவின் விளிம்பில் உள்ள இனமாகக் கருதப்படுகின்றன; ஏனெனில், தேயிலை, யூகலிப்டஸ், வாட்டில் (அக்கேசியா) போன்ற பயிர்களுக்கான பரந்த அளவிலான தோட்டங்களால், இவற்றின் வாழ்விடமும் அவை காணப்படும் பகுதியும் சிதைக்கப்பட்டு வருகின்றன. இவை வாழும் பகுதியில், சுற்றுலாத் துறை சார்ந்த பெருமளவிலான வளர்ச்சிப் பணிகளும் நடைபெற்று வருகின்றன; இதுவும் இவ்வினத்திற்கு, சாத்தியமான அச்சுறுத்தலாக அமையக்கூடும். இவ்வினம் சூழலுக்கு ஏற்ப, தகவமைத்துக்கொள்ளும் திறன் கொண்டதாகத் தோன்றினாலும், வாழ்விடத்தில் இடையூறுகள் ஏற்படும்போது அவற்றால் எவ்வளவு தூரம் அந்த மாற்றங்களைத் தாங்கிக்கொள்ள முடியும் என்பது குறித்த தெளிவான புரிதல் இன்னும் இல்லை.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 IUCN SSC Amphibian Specialist Group (2022). "Raorchestes chlorosomma". IUCN Red List of Threatened Species 2022. https://www.iucnredlist.org/species/186159/166114730. பார்த்த நாள்: 26 December 2022.
- ↑ Frost, Darrel R. (2013). "Raorchestes chlorosomma (Biju and Bossuyt, 2009)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. Retrieved 15 July 2013.
வெளியிணைப்புகள்
[தொகு]
விக்கியினங்களில் Raorchestes chlorosomma பற்றிய தரவுகள்