பச்சியம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒண்டிப்பனை பச்சியம்மன் கோயில் (Ondipanai Pachiyamman Temple) சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் அ.புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பழைமையான கோயில். இதன் அருகில் வாகைமரத்து ஐய்யனாரப்பன் கோயில், பெரியாண்டிச்சி அம்மன் கோயில் என்று இரண்டு கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில் ஆடி மாதத்தில் பெரியக்கரை, சிறியக்கரை என்று இரண்டு நாட்கள் பண்டிகை நடைபெறும். இந்தப் பண்டிகையில் ஏராளமான மக்கள் பொங்கல் வைத்து சாமியை தரிசனம் செய்வர். மேலும் ஆடுகளை பழிகொடுத்து நேர்த்திக்கடன் செய்வர். இந்த கோயிலை ஆயி கோயில் என்றும் அழைப்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சியம்மன்_கோவில்&oldid=2257891" இலிருந்து மீள்விக்கப்பட்டது