உள்ளடக்கத்துக்குச் செல்

பச்காவன் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்காவன் போர்
Battle of Pachgaon
நாள் 26 சனவரி 1775
இடம் பச்காவன், மகாராட்டிரம், இந்தியா
முதோச்சி போன்சுலே வெற்றி
பிரிவினர்
சபாச்சி போன்சுலே முதோச்சி போன்சுலே
தளபதிகள், தலைவர்கள்
சபாச்சி போன்சுலே முதோச்சி போன்சுலே

முகமது யூசுப் கார்டி

இழப்புகள்
அறியப்படவில்லை அறியப்படவில்லை

பச்காவன் போர் (Battle of Pachgaon) என்பது 1775 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியன்று மத்திய இந்தியாவில் இருந்த நாக்பூர் இராச்சியத்தின் அரியணை உரிமையைப் பெறுவதற்காக நடைபெற்ற போராகும். இந்தப் போரில் முதோச்சி போன்சுலே தனது சகோதரரும் அரியணைப் போட்டியாளருமான சபாச்சியைக் கொன்றார். இதன் மூலம், முதோச்சியின் இளம் வயது மகனான இரண்டாம் ராகோச்சிக்காக அவர் எந்த எதிர்ப்பும் இல்லாத பதிலாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.[1][2]

இப்போர், இன்றைய இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூருக்கு தெற்கே சுமார் ஆறு மைல் தொலைவில் நடைபெற்றது. போரின் ஆரம்ப கட்டத்தில் வெற்றி சபாச்சி பக்கம் சாய்ந்தது. அவரது படைகள் முதோச்சியை முற்றுகையிட்டிருந்தன. போரின் உற்சாகத்தாலும், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையாலும் ஊக்கமடைந்த சபாச்சி, தனது யானையை முதோச்சியின் யானையை நோக்கிச் செலுத்தி, அவரை சரணடையுமாறு அழைத்தார். அதற்கு பதிலாக முதோச்சி, துப்பாக்கியால் சுட்டு சபாச்சியைக் கொன்றார். இதன் மூலம், தனது இளம் வயது மகனான, இயானோச்சி போன்சுலே தத்தெடுத்த வாரிசு இரண்டாம் ராகோச்சி சார்பில் எதிர்ப்பற்ற பதிலாட்சி அதிகாரத்தைப் பெற்றார். மேலும், சேனா துரந்தர் என்ற பட்டத்தையும் பெற்றார்.[3][4][5]

1773 ஆம் ஆண்டில் பேசுவா நாராயணராவின் தலைமைக் கொலையாளியான முகமது யூசுப் கார்டி, முதோச்சிக்காகப் போரிட்டார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Maharashtra State Gazetteers: Bhandara (in ஆங்கிலம்). Directorate of Government Print., Stationery and Publications, Maharashtra State. 1979. p. 123.
  2. ↑ Jaques, Tony (2006-11-30). Dictionary of Battles and Sieges: A Guide to 8,500 Battles from Antiquity through the Twenty-first Century [3 volumes] (in ஆங்கிலம்). Bloomsbury Publishing USA. p. 773. ISBN 978-0-313-02799-4.
  3. ↑ Sir Richard Jenkins, p. 51
  4. ↑ Duff, James Grant (1826). History Of Marathas, Vol II (in English). London: Longman, Rees, Orme, Brown, and Green. p. 36.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. ↑ Central Provinces District Gazetteers - Nagpur, Volume A (Ebook ed.). Mumbai: Gazetteers Department, Government of Maharashtra. 2006.
  6. ↑ Sen, Sailendra N. (1994). Anglo-Maratha relations during the administration of Warren Hastings 1772-1785 (in ஆங்கிலம்). Popular Prakashan. ISBN 978-81-7154-578-0.

28°18′52″N 76°53′53″E / 28.314357°N 76.898037°E / 28.314357; 76.898037

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்காவன்_போர்&oldid=4620228" இலிருந்து மீள்விக்கப்பட்டது