பசும் நூல்கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசும் நூல்கோல்
இலைகளுடன் கூடிய நூல்கோல் தண்டு
இலைகளுடன் கூடிய நூல்கோல் தண்டு
இனம்
பிராசிக்கா ஒலராசியே
பயிரிடும்வகைப் பிரிவு
காங்கிலேடெசு குழு
பல; see text.
Kohlrabi, raw
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
6.2 g
சீனி2.6 g
நார்ப்பொருள்3.6 g
0.1 g
புரதம்
1.7 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(0%)
2 μg
தயமின் (B1)
(4%)
0.05 mg
ரிபோஃபிளாவின் (B2)
(2%)
0.02 mg
நியாசின் (B3)
(3%)
0.4 mg
(3%)
0.165 mg
உயிர்ச்சத்து பி6
(12%)
0.15 mg
இலைக்காடி (B9)
(4%)
16 μg
உயிர்ச்சத்து பி12
(0%)
0 μg
உயிர்ச்சத்து சி
(75%)
62 mg
உயிர்ச்சத்து டி
(0%)
0 μg
உயிர்ச்சத்து ஈ
(3%)
0.48 mg
உயிர்ச்சத்து கே
(0%)
0.1 μg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(2%)
24 mg
இரும்பு
(3%)
0.4 mg
மக்னீசியம்
(5%)
19 mg
மாங்கனீசு
(7%)
0.139 mg
பாசுபரசு
(7%)
46 mg
பொட்டாசியம்
(7%)
350 mg
சோடியம்
(1%)
20 mg
Other constituents
நீர்91.00 g

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

'பசும் நூல்கோல் (Kohlrabi) (செருமானிய மொழியில் முட்டைக்கோசு நூல்கோல்; பிராசிக்கா ஒலெராசியே காங்கிலோடெசு குழு), அல்லது செருமானிய நூல்கோல், ஆண்டுக்கு இருமுறைக் காய்கறிப் பயிராகும். இது காட்டு முட்டைக்கோசின் மென்தடிப்புப் பயிரிடும்வகை ஆகும். இது முட்டைக்கோசு, பசும் பூக்கோசு, பூக்கோசு, கேல்கோசு, பிரசல்சு முளைக்கீரை, கல்லார்டுவகை கீரை, சவாய் முட்டைக்கோசு, கைலான் அமைந்த அதே குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

இதைப் பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடலாம். இதன் தண்டும் கீரையும் உண்ணத்தக்கவை. பெயரை தவிர இது நூல்கோல் தாவர இனத்தைச் சேர்ந்த பயிரன்று.

வேர்ச்சொல்லியல்[தொகு]

செருமானிய மொழியில் கோகில் என்றால் முட்டைக்கோசு என்று பொருள்படும்.ஊருபே, இராபி என்றால் நூல்கோல் எனப் பொருள்படும். எனவே கோல்ராபி எனும் ஆங்கிலப்பெயர் இந்த இருசொற்களின் இணைவால் உருவாகியுள்ளது.[1] இது செருமானிய மொழி பேசும் நாடுகளிலும் அமெரிக்காவில் விசுகான்சினில் உள்ள செருமானிய மொழி பேசும் மக்களும் பசும் நூல்கோலை விரும்பி உண்கின்றனர். வடக்கு வியட்நாமில் இது சு காவோ (su hào) எனப்படுகிறது. இந்தியாவின் கிழக்கில் மேற்கு வங்கத்திலும் வங்கதேசத்திலும் இது ஓல்கோல் ( 'Ol Kopi') எனப்படுகிறது.[2][3]இது காசுமீரப் பள்ளத்தாக்கில் மோஞ்சு ஆக்கு எனப்படுகிறது;[4] அதாவது, இதன் தண்டு மோஞ்சு ( 'monj') எனவும் கீரை, ஆக்கு ( 'hakh') எனவும் அழைக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் நோல்கோல் ( 'Nol Khol' ) எனப்படுகிறது;[5] மராட்டியத்தில் 'நவல்கோல்' , தமிழில் Noolkol (நூல்கோல்) , கன்னடத்தில் நவிலு கோசு 'Navilu Kosu')[6] சிறிலங்காவில் நோல்கோல் ( 'Nol col' ) (நூல்கோல் முட்டைக்கோசு) எனப்படுகிறது.[7] இது சிப்ரசையும் தாயகமாகக் கொண்டது. அங்கு இது கவுலவும்பிரா ( 'kouloumpra') ("κουλούμπρα") எனப்படுகிறது.[8] இது செக் நாட்டில் விரும்பி உண்ணப்படுகிறது. இது செக் குடியரசில் கெதுலுபென்( 'kedluben') அல்லது கெதுலூபினா( 'kedlubna') எனவும் சுலோவேனிய மொழியில் கேலராபு( 'kaleráb') எனவும் வழங்குகிறது.

விவரிப்பு[தொகு]

பசும் நூல்கோல் செயற்கைத் தேர்வால் பக்கவாட்டுப் புடைப்பு வளர்ச்சிக்காக ( பருத்த ஓரளவு கோள வடிவம் பெற) உருவாக்கப்பட்டதாகும்; இது இயற்கையில் முட்டைக்கோசு, பசும் பூக்கோசு, பூக்கோசு, கேல்கோசு, பிரசல்சு முளைக்கீரை, கல்லார்டுவகை கீரை, சவாய் முட்டைக்கோசு போலவே தோன்றியதாகும்; இவை அனைத்துமே தெரிவுமுறை வளர்ப்பினல் காட்டுவகை முட்டைக் கோசான பிராசிக்கா ஒலெராசியாவில் இருந்து பெறப்பட்டனவே ஆகும்.

பசும் நூல்கோல் சுவையும் யாப்பும் பச்சைப் பூக்கோசு தண்டினைப் போலவும் முட்டைக்கோசுவின் இதயப்பகுதி போலவும் ஆனால் மென்மையாகவும் இனிப்பாகவும் கூடுதலான சதை-தோல் விகிதத்துடன் அமைகின்றன. இதன் இளந்தண்டு ஆப்பிளைப் போல முற்முறுப்பாகவும் சாற்றுடனும் ஆனால் கொஞ்சம் குறைந்த இனிப்போடு உள்ளது.[9]

பசும் நூல்கோல் கூடை

கிகாந்தே பயிரிடும்வகையைத் தவிர, இலவேனிற் காலத்தில் வளரும் பசும் நூல்கோலின் அளவு 5 செமீ உருவளவு கொண்டதாகும். இது 19 செமீ வரை வளரும் பசும் நூல்கோலைப் போலவே கறித்த்ன்மை பெற்றுள்ளது; உண்ணும் தரம் குறையாமல், கிகாந்தே பயீரிடும்வகை மேலும் கூடுத்லான உருவளவில் வளரக்கூடியதாகும்.[10] தாவரம் விதைப்புக்குப் பின் 55-60 நாட்களில் முதிர்கிறது, முதிர்ந்த பிறகு 30 நட்கள் வரை ந்ன்கு நிமிர்ந்து நிற்க வல்லது. அண்ணளவான எடை 150 கிராம் ஆகும்.

ந்தொட்டியில் வளர்ந்த பசும் நூல்கோல், இங்கிலாந்து
இரண்டாம் ஆண்டில் பூக்கும் தாவரம்

வெண்வியன்னாவகை உட்பட, வழக்கத்தில் பசும் நூல்கோலி[11] ' ஊதா வியன்னா', ' பேரரசன்', ( " மீசரச் சுச்மெல்சு" எனவும் வழங்கும்) 'கிகாந்தே', ' ஊதா டான்யூபு', 'வெண் டான்யூபு' எனப் பல வகைமைகள் உள்ளன. ஊதாவண்ணங்கள் மேலோட்டமானவையேஉண்பகுதிகள் வெளிரிய மஞ்சள் நிறம் கொண்டவையே . இதன் கீரையையும் உண்ணலாம். மிக மெல்லிய தண்டுடன் இலைகள் மட்டும் அமைய, வளரும் வகைமை ஆக்கு எனப்படுகிறது. ஆக்கும் (இலையும்) மோஞ்சும்j (தண்டும்) சிறப்புக் காசுமீர உணவுகளாகும். இரண்டாம் ஆண்டில் இந்தத் தாவரம் பூத்து விதைகளை உருவாக்கும். பசும் நூல்கோல் வெண்மை, ஊதா, வெளிர்பச்சை என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

சமையல் ஆயத்தமும் பயன்பாடும்[தொகு]

சமைக்கும்போது மென்மையுறாத இரு நாரிழை அடுக்குகள் பசும் நூல்கோலின் தண்டின் மேற்பகுதியில் அமைகின்றன. இந்த அடுக்குகள் சமைக்கும் முன்பும் பச்சையாக உண்ணவும் உரித்து எடுக்கப்படுகின்றன; எனவே தன்டின் உண்பகுதி மிகவும் குறைந்து விடுகிறது.

இதன் கீரை உண்ணத்தக்கதே. இதை கொல்லார்டு, கேல் கீறைகளுடன் மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம்.

சிப்ரசில் உப்பும் எலுமிச்சம் சாறும் தெளித்துக் கலந்து செரிப்பியாகப் பயன்படுகிறது.

சில வகைகள் கால்நடைகளுக்குத் தீவனமாக வளர்க்கப்படுகின்றன.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Vegetable Dictionary - Kohlrabi". extension.illinois.edu. 2019-05-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-05-09 அன்று பார்க்கப்பட்டது.
 2. Ghosh, Ushnish. "OL KOPI (Nool Kol, Ganth Gobi, Kadam, Kohlrabi) WITH GREEN and PANEER (PUNJABI & KASHMIRI)". 8 December 2010. ushnish.blogspot.co.uk. 11 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
 3. "OL KOPI – KHOLRABI TORKARI". masalatize.com. 27 மார்ச் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
 4. Pandita, Anjali. "Monji Hakh". 22 December 2012. kashmirifood.com. 16 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Knol Khol F1 Hybrid - Seeds". nurserylive.com. 11 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Kohlrabi recipes - knolkohl bhaji - Navalkol subji, navilkosu palya". vegetarian Cooking Recipes Tips.
 7. John Whitchurch Bennett வார்ப்புரு:Googlebooks
 8. "Κουλούμπρα, Κούρβουλα". Cyprus Food Museum. 2019-07-29 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 9. "Kohlrabi Is Weird! And Here's What You Can Do With It — Ingredient Spotlight". The Kitchn. 2016-05-09 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Growing Kohlrabi - Bonnie Plants". Bonnie Plants (ஆங்கிலம்). 2016-05-09 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Early White Vienna Kohlrabi". rareseeds.com. 5 ஜனவரி 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
 12. Bailey, L. H., (1912, republished in 1975). Kohlrabi for stock-feeding. In Cyclopedia of American Agriculture: Vol. II--crops. Macmillan Publishing, New York. p. 389-390. ISBN 0-405-06762-3. Google Book Search. Retrieved on June 15, 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசும்_நூல்கோல்&oldid=3713846" இருந்து மீள்விக்கப்பட்டது