பசுமைவழிச் சாலை தொடருந்து நிலையம்
பசுமைவழிச் சாலை தொடருந்து நிலையம் பசுமைவழிச் சாலை | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பொது தகவல்கள் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 13°01′14″N 80°15′07″E / 13.020666°N 80.252005°E | ||||||||||||||
| நடைமேடை | பக்க நடைமேடை நடைமேடை-1 → வேளச்சேரி ** நடைமேடை-2 → சென்னைக் கடற்கரை ** (எதிர்கால விரிவாக்கம் பரங்கிமலை) (280 m) | ||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||
| கட்டமைப்பு | |||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட | ||||||||||||||
| வரலாறு | |||||||||||||||
| திறக்கப்பட்டது | 26 சனவரி 2004 | ||||||||||||||
| சேவைகள் | |||||||||||||||
| |||||||||||||||
| |||||||||||||||
பசுமைவழிச் சாலை தொடருந்து நிலையம் (Greenways Road railway station) என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னையில் பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள பிரத்தியேகமாக சென்னை பறக்கும் தொடருந்து திட்ட சேவை நிலையமாகும்.
வரலாறு
[தொகு]சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தின் வலையமைப்பில் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக பசுமைவழிச் சாலை நிலையம் 26 சனவரி 2004 அன்று திறக்கப்பட்டது.
அமைப்பு
[தொகு]பசுமைவழிச் சாலை தொடருந்து நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இது பக்கிங்காம் கால்வாயின் கிழக்குக் கரையில் பக்கிங்காம் கால்வாய் அடையாறு நதியுடன் இணைவதற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டப் பாதையில் உள்ள மற்ற நிலையங்களைப் போலவே, பசுமைவழிச் சாலையிலும் 2 பக்க நடைமேடைகள் உள்ளன. ஒவ்வொரு தளத்தின் நீளமும் 280 மீட்டர் ஆகும்.[1] நிலைய கட்டிடம் அதன் அடித்தளத்தில் 3,300 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்துடன் உள்ளது.[2]
நிலைய அமைப்பு
[தொகு]
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| G | தெரு மட்டம் | வெளியேறு/நுழைவு |
| எல்1 | இடைமாடி | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய பயணச்சீட்டு நிலையங்கள், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் |
| எல்2 | பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் | |
| நடைமேடை 2 வடக்கு நோக்கி |
→ சென்னைக் கடற்கரை நோக்கி அடுத்த நிலையம் மந்தைவெளி | |
| நடைமேடை 1 தெற்கு நோக்கி |
← வேளச்சேரி நோக்கி அடுத்த நிலையம் கோட்டூர்புரம் (எதிர்கால விரிவாக்க இணைப்பு பரங்கிமலை) | |
| பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் | ||
| L2 | ||
வரிசை
[தொகு]வேளச்சேரி செல்லும் பறக்கும் தொடருந்துத் திட்டப் பாதையில் பசுமைவழிச் சாலை பத்தாவது நிலையமாகும். வேளச்சேரியிலிருந்து திரும்பும் திசையில், இது தற்போது சென்னை கடற்கரை நிலையத்தை நோக்கிய எட்டு நிலையமாக உள்ளது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MRTS Phase-II Extension". Development of MRTS in Chennai. CMDA. Archived from the original on 15 August 2014. Retrieved 20 Aug 2012.
- ↑ R.Ramanathan. "Presentation on MRTS & Rail facilities in and around Chennai" (PDF). Traffic Transportation and Parking – Session 2. CMDA, Chennai. Retrieved 19 August 2012.
- ↑ "Chennai Beach – Velachery – Chennai Beach Week days service" (PDF). Southern Railways. Archived from the original (PDF) on 6 செப்டெம்பர் 2012. Retrieved 18 ஆகத்து 2012.
