பசுமைக் கரங்கள் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பசுமைக் கரங்கள் திட்டம் (Project Green Hands (PGH) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஈஷா யோக மையத்தினால் துவங்கப்பட்ட ஒரு அடிப்படை சூழல் சார் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் நோக்கம் தமிழ்நாடு முழுவதிலும் 114 மில்லியன் மரங்களை கூடிய விரைவில் நடச்செய்து காடு வளர்ப்பினை 33 விழுக்காடு அதிகரிக்கச் செய்வதே ஆகும்.[1][2] இந்தத் திட்டத்தின் துவக்க காலத்திலிருந்து தற்போதுவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலும் சுமார் 2 மில்லியன் மக்களின் மூலம் 27 மில்லியன் மரங்கள் நடப்பட்டுள்ளன. .[3][4][5]

வரலாறு[தொகு]

பசுமைக் கரங்கள் திட்டமானது ஜூன் 2004 உலக சுற்றுச்சூழல் வாரத்தின் போது ஜக்கி வாசுதேவால் துவங்கப்பட்டது. பசுமைக் கரங்கள் திட்டத்தின் முதல் மரங்கள் நடும் மாரத்தான் ஓட்டமானது அக்டோபர் 17, 2006 இல் துவங்கப்பட்டது. இந்த மாரத்தானை அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. கருணாநிதி கொடி அசைத்துத் துவங்கி வைத்தார். அதில் முதல் மரக்கன்றைத் தனது கோபாலபுரம் இல்லத்தில் நட்டு வைத்துத் துவக்கினார்.[6] மேலும் அதன் கடைசிச் செடியை ராஜ்பவனில் அன்றைய தமிழக ஆளுநர் சுர்சித் சிங் பர்னாலா நட்டு வைத்தார்.[7] இந்த மாரத்தானில் மொத்தம் 852,587 மரக் கன்றுகளை தமிழகத்தின் இருபத்தி ஏழு மாவட்டங்களில் உள்ள 6284 பகுதிகளில் 256,289 தன்னார்வலர்கள் மூலம் நடப்பட்டன.இந்த நிகழ்வின் மூலம் மூன்று நாட்களில் அதிக மரக் கன்றுகள் நடப்பட்டதற்கான கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்தது.[8][9][10]

உடனுழைப்பு[தொகு]

வணிக நிறுவனங்கள்[தொகு]

பசுமைக் கரங்கள் திட்டம் "தெ யுவ்ஸ் ரோச்சர் குழுமம்" உட்பட சில நிறுவனங்களுடன் இணைந்து உடனிணைவு செய்கிறது. 2007 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து "தெ யுவ்ஸ் ரோச்சர் குழுமம்" செயற்படுகிறது. ரோச்சர் நிறுவனம் 2007 முதல் 2009 வரையிலான மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 1 மில்லியன் மரக் கன்றுளைக் வழங்கியுள்ளது.[11][12] இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்,ஸ்கோப் இண்டர்நேஷனல்,[13][14] சுஸ்லான் [15], பிரான்சு நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏர்பஸ் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் [16] ஆகிய நிறுவனங்களோடு, பசுமைக் கரங்கள் திட்டம் உடனிணைவு கொண்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுடன்[தொகு]

பசுமைக் கரங்கள் திட்டம் தமிழ்நாடு முழுவதும் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்களின் மூலமாக மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டது. தேசிய பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி,[17] பாரதிதாசன் பல்கலைக்கழகம்,[18] குமரகுரு பொறியியல் கல்லூரி [19] மற்றும் சேலம் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் மூலம் பரப்புரை செய்யப்பட்டது.[20]

தொண்டு நிறுவனங்களுடன்[தொகு]

பசுமைக் கரங்கள் திட்டம் தமிழ்நாடு கரிம வேளாண்மை இயக்கம், சர்வதேச கரிம வேளாண்மை மேம்பாட்டு அமைப்பு, தேசிய விவசாயிகள் வேளாண்மை விழிப்புணர்வு இயக்கம்,தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்கம் ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உடனுழைப்பில் ஈடுபட்டது.

நகர்ப்புற பசுமை முயற்சிகள்[தொகு]

பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம் பசுமைச் சூழல் அமைப்பை அதிகரிப்பதற்கான பல முயற்சிகள் பல நகரங்களில் மேற்கொள்ளப்பட்டன. அதில் முதல் நகரம் திருப்பூர். பசுமை திருப்பூர் இயக்கம் ஆகஸ்டு 23, 2009 இல் அன்றைய துணை தமிழக முதலமைச்சரான மு. க. ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த இயக்கம் டவுன் ஹாலில் அருங்காட்சியகத்தோடு துவங்கப்பட்டது. திருப்பூர் நகரம் முழுவதும் சுமார் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.[21] பின் பசுமை கரூர் இயக்கம் ஜனவரி 10,2010 இல் கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. செப்டம்பர் 26, 2010 இல் பசுமை மதுரை இயக்கம் துவங்கப்பட்டது. இதன் முதல் மரக்கன்றை ஜக்கி வாசுதேவிடமிருந்து அன்றைய மதுரை மேயர் ஜி. தேன்மொழி பெற்றுக்கொண்டார். சுமார் 20,000 மரக் கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.[22]

சான்றுகள்[தொகு]

 1. Target: 114 million trees in 10 years, The Hindu, September 02, 2006, Retrieved on June 6, 2010
 2. Stated Goal of the Organisation
 3. Corporates partners with Isha foundation to support Project GreenHands, Business Standard, June 06, 2010, Retrieved on June 6, 2010
 4. Award for Project Green Hands , The Hindu, June 08, 2010, Retrieved on June 8, 2010
 5. Cranenburgh, Craig. "Here’s the 10th and final list of speakers announced for Jaipur Literature Festival". The Plunge Daily. https://mybigplunge.com/culture/books-and-authors/jaipur-literature-festival-anniversary-list-speakers-announced/. 
 6. Karunanidhi for planting more saplings, தி இந்து, October 16, 2007, Retrieved on June 6, 2010
 7. In Chennai Today, தி இந்து, October 17, 2007, Retrieved on June 11, 2010
 8. Award for Project Green Hands , தி இந்து, June 08, 2010, Retrieved on June 8, 2010
 9. Extending a green hand, தி இந்து, September 22, 2007, Retrieved on June 6, 2010
 10. Documentation of the World Record effort, Retrieved on September 29, 2010
 11. Plant for the Planet: The Billion Tree Campaign, p 48, UNEP/Earthprint (2008), ISBN 978-92-807-2896-5
 12. La reforestation de la planète gagne du terrain, Les Echos, December 13, 2007, Retrieved on June 8, 2010
 13. Scope International Events
 14. Join hands for the future, தி இந்து, April 04, 2008, Retrieved on June 11, 2010
 15. Corporates partners with Isha foundation to support Project GreenHands, Business Standard, June 06, 2010, Retrieved on June 6, 2010
 16. Saplings to be given free of cost at HPCL outlets, தி இந்து, December 12, 2007, Retrieved on June 11, 2010
 17. "Mass tree planting marks Martyrs’ Day at NIT-T". தி இந்து (October 22, 2008). பார்த்த நாள் June 22, 2010.
 18. "One lakh saplings planted". தி இந்து (January 31, 2008). பார்த்த நாள் June 22, 2010.
 19. "KCT joins Project Green Hands". தி இந்து (October 18, 2006). பார்த்த நாள் June 22, 2010.
 20. "Accent on planting saplings to increase green cover in city". தி இந்து (June 6, 2010). பார்த்த நாள் June 22, 2010.
 21. "Stalin inaugurates Green Tirupur Movement". தி இந்து (August 25, 2009). பார்த்த நாள் September 28, 2010.
 22. "Plan to increase green cover". தி இந்து (September 27, 2010). பார்த்த நாள் September 28, 2010.

வெளியிணைப்புகள்[தொகு]

பசுமைக் கரங்கள் திட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்