பசுந்தாவரக் கிளை
| பசுந்தாவரக் கிளை புதைப்படிவ காலம்:Stenian[1] – Present | |
|---|---|
| தலோபீற்றா, தைவான் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உயிரிக்கிளை: | |
| உயிரிக்கிளை: | |
| உயிரிக்கிளை: | |
| (வகைப்படுத்தா): | கேவலியர்-சுமித், 1981
|
| Subgroups | |
| வேறு பெயர்கள் | |
| |
பசுந்தாவரக் கிளை (Viridiplantae) என்பது பச்சைப்பாசிகளையும், நிலத்தாவரங்களையும் உள்ளடக்கியதொரு பெரும் உயிரினக் கிளையாகும். இது ஏறத்தாழ 4,50,000 முதல் 5,00,000 வரையிலான மெய்க்கருவுயிரி சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இவை சூரியஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை மூலம் தங்களுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன. நிலப்பரப்பு, நீர்வாழ் சூழல் மண்டலங்களில், இக்கிளையின் இனங்கள் முதன்மை உற்பத்தியாளர்களாகத் திகழ்கின்றன.
வகைப்பாடு
[தொகு]பசுந்தாவரங்கள் பிரதானமாக இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன:
- குளோரோபைட்டா : இதில் பெரும்பாலான நீர்வாழ் பச்சைப்பாசிகள் அடங்கும்.
- நில, நன்னீர் தாவரம் (Streptophyta): இதில் சில மேம்பட்ட பச்சைப்பாசிகளும், அனைத்து நிலத்தாவரங்களும் அடங்கும்.
முன்பு பச்சைப்பாசிகள் தனியாகவும், நிலத்தாவரங்கள் தனியாகவும் வகைப்படுத்தப்பட்டன. ஆனால் நவீன மரபணு ஆய்வுகள் நிலத்தாவரங்கள் பச்சைப்பாசிகளிலிருந்தே தோன்றியவை என்பதை உறுதிப்படுத்தியதால், இவை அனைத்தும் இப்போது இந்த உயிரிக்கிளையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள.
உயிரிக்கிளைப் படம்
[தொகு]2019 ஆம் ஆண்டில், 1,153 தாவர இனங்களின் மரபணுக்களையும், டிரான்ஸ்கிரிப்டோம்களையும்(transcriptomes) அடிப்படையாகக் கொண்ட ஒரு இனவழி உறவுமுறை முன்மொழியப்பட்டது.[7]மரபு அடிப்படை ஆய்வுகளில் பாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இரண்டு பெரும் உட்பிரிவுகள் கிளைப்படத்தில் இணைக்கப்பட்டது [8][9]
| முற்கால கனிகத்தாவரம் |
|
"குளோரோபைட்டா பாசிகள்" "செட்ரெப்டோபைட்டா பாசிகள்" | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பச்சைப்பாசிகளின் மூதாதையர்கள், முன்பு கசையிழைகளைப் பெற்றிருந்தன.[10]
பரிணாம வளர்ச்சி
[தொகு]இக்கிளையின் பசுந்தாவரங்கள், சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாகக் கருதப்படுகிறது. இவை முதலில் கடலிலும் நன்னீரிலும் பாசிகளாகத் தோன்றி, பின்னர் சுமார் 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பில் வாழத் தொடங்கின. நிலத்தாவரங்களின் தோற்றம் பூமியின் வளிமண்டலத்தில் உயிர்வளி அளவு அதிகரிக்கவும், ஓசோன் படலம் உருவாகவும் முக்கிய காரணமாக அமைந்தது.
சிறப்பம்சங்கள்
[தொகு]இக்குழுவில் உள்ள உயிரினங்களின் செல் சுவர்கள் செல்லுலோஸால் ஆனவை. இவை பச்சையம் ஏ (Chlorophyll a), பச்சையம் பி (Chlorophyll b) ஆகிய நிறமிகளைக் கொண்ட கணிகங்களைக் கொண்டுள்ளன. தாவரங்கள் தங்களின் உணவை மாப்பொருள் வடிவில் கணிகங்களுக்குள்ளேயே சேமித்து வைக்கின்றன.
முக்கியத்துவம்
[தொகு]இவை புவியின் கார்பன் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மனிதர்களுக்குத் தேவையான உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் எனப் பல தேவைகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. உலகளாவிய உயிரின பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவதில் பசுந்தாவரங்களின் பங்கு ஈடுஇணையற்றது ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tang, Qing (24 February 2020). "A one-billion-year-old multicellular chlorophyte". Nature Ecology and Evolution 4 (5): 543–549. doi:10.1038/s41559-020-1122-9. பப்மெட்:32094536. Bibcode: 2020NatEE...4..543T.
- ↑ Copeland, Herbert F. (1938). "The kingdoms of organisms". The Quarterly Review of Biology 13 (4): 383–420. doi:10.1086/394568.
- ↑ Copeland, H.F. (1956). The Classification of Lower Organisms. Palo Alto: Pacific Books. p. 6.
- ↑ Whittaker, R.H. (January 1969). "New concepts of kingdoms or organisms. Evolutionary relations are better represented by new classifications than by the traditional two kingdoms". Science 163 (3863): 150–60. doi:10.1126/science.163.3863.150. பப்மெட்:5762760. https://www.ib.usp.br/inter/0410113/downloads/Whittaker_1969.pdf. பார்த்த நாள்: 2015-01-31.
- ↑ van den Hoek, C.; Jahns, H.M. (1978). Einführung in die Phykologie (in ஜெர்மன்). Stuttgart: Georg Thieme Verlag. ISBN 978-3-13-551101-6.
- ↑ Tom Cavalier-Smith (1981). "Eukaryote kingdoms: seven or nine?". Bio Systems 14 (3–4): 461–481. doi:10.1016/0303-2647(81)90050-2. பப்மெட்:7337818. Bibcode: 1981BiSys..14..461C.
- ↑ Leebens-Mack, M.; Barker, M.; Carpenter, E. et al. (2019). "One thousand plant transcriptomes and the phylogenomics of green plants". Nature 574 (7780): 679–685. doi:10.1038/s41586-019-1693-2. பப்மெட்:31645766.
- ↑ Liang, Zhe (2019). "Mesostigma viride Genome and Transcriptome Provide Insights into the Origin and Evolution of Streptophyta". Advanced Science 7 (1). doi:10.1002/advs.201901850. பப்மெட்:31921561.
- ↑ Wang, Sibo (2020). "Genomes of early-diverging streptophyte algae shed light on plant terrestrialization". Nature Plants 6 (2): 95–106. doi:10.1038/s41477-019-0560-3. பப்மெட்:31844283. Bibcode: 2020NatPl...6...95W.
- ↑ Leliaert, Frederik; Smith, David R.; Moreau, Hervé; Herron, Matthew D.; Verbruggen, Heroen; Delwiche, Charles F.; De Clerck, Olivier (2012). "Phylogeny and molecular evolution of the green algae". Critical Reviews in Plant Sciences 31 (1): 1–46. doi:10.1080/07352689.2011.615705. Bibcode: 2012CRvPS..31....1L. https://hal.archives-ouvertes.fr/hal-01590252/file/article.pdf.
