பசீன் உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பசீன் உடன்படிக்கை((Treaty of Bassein) என்பது 1802ம் ஆண்டு பூனா யுத்தத்திற்கு பிறகு, பேஷ்வா இரண்டாம் பாஜிராவுக்கும், ஆங்கிலேய கிழக்கிந்திய வணிக குழுவிற்கும் இடையில் கையெழுத்தான உடன்படிக்கை ஆகும்.இது ஒரு துணைப் படை திட்ட ஒப்பந்தம் ஆகும்.இவ்வுடன்படிக்கைப்படி, மராட்டியரின் வெளியுறவுக் கொள்கை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் விடப் பட்டது. இந்த உடன்பட்டிக்கையால் மராட்டியர்களின் கூட்டிணைவு மேலும் வீழ்ச்சியடைந்தது.ஆங்கிலேயரின் விரிவாக்கக் கொள்கை மேலும் வலுவடைந்தது.

மராட்டியர்களின் உட்பூசல்[தொகு]

மராட்டியர்களின் முக்கியத் தலைவரான நானா பட்னாவிஸ் 1800ம் ஆண்டு மறைந்தார். இதன் பிறகு, பிற மராட்டியத் தலைவர்களுக்கிடையே உட்பூசல் நிலவியது. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் சிந்தியாவை ஆதரித்ததால், கோபமடைந்த ஹோல்கர் பேஷ்வாவின் பூனா மீது படையெடுத்தார். இப்போரில் பேஷ்வாவும், சிந்தியாவும் தோல்வி அடைந்தனர். பூனாவை கைப்பற்றிய ஹோல்கர் அந்நகரை சூறையாடி, பெரும் கொள்ளை பொருளுடன் தனது தலைநகருக்குத் திரும்பினார். பீதியடைந்த பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் பசீன் என்ற இடத்துக்கு தப்பியோடினார். இந்த நிலையை சாதகமாக பயன்படுத்த நினைத்த வெல்லெஸ்லி பேஷ்வாவுக்கு ஆதரவு தந்தார்.

உடன்படிக்கை கையெழுத்தான நாள்[தொகு]

டிசம்பர் 31, 1802 அன்று வெல்லெஸ்லியின் துணைப் படைத் திட்ட உடன்படிக்கையில், பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் கையெழுத்திட்டார்.இதன் விளைவாக, ஆங்கிலேய படைகள் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் பூனாவிற்கு சென்று,மே 13, 1803 அன்று இரண்டாம் பாஜிராவை பேஷ்வா பதவியில் அமர்த்தியது. ஹோல்கர் பூனாவில் இருந்து தப்பி ஓடினார்.

உடன்படிக்கையின் சாராம்சங்கள்[தொகு]

  • 6000 பேர் கொண்ட ஆங்கிலேயப் படையை பேஷ்வா பராமரிக்க வேண்டும்.
  • 2.6 மில்லியன் ரூபாயை ஆங்கிலேய வணிகக் குழுவிற்கு வழங்க வேண்டும்.
  • பேஷ்வா வணிகக் குழுவின் அனுமதியின்றி யாருடனும் போர் செய்யக் கூடாது.
  • பேஷ்வா வேறு எந்த ஐரோப்பியருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

மதிப்பீடு[தொகு]

  • பசீன் உடன்படிக்கை வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தின் மணிமகுடம் எனப் படுகிறது.
  • மராட்டியர்கள் இந்த உடன்படிக்கையை அடிமை சாசனம் என்று குறிப்பிட்டனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசீன்_உடன்படிக்கை&oldid=2314705" இருந்து மீள்விக்கப்பட்டது