பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது ஒரு தமிழ்ப் பழமொழியாகும். பசியால் வாடுபவர் பல சிறப்புகளை இழக்க நேரிடும் என்பதை இப்பழமொழி குறிக்கிறது. அதாவது பசிவந்து அந்த பசியை தீர்க்க உணவு கிடைக்காத மனிதன் தன்னிடமுள்ள மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, காமம் ஆகியவற்றை இழந்துவிடுவர் என்பது பொருள்.[1][2]


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின்

கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம்

மேற்கோள்[தொகு]

  1. சு.ப.அருளானந்தம் எழுதிய தமிழ் எளிது ப.எண்.515
  2. "பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து?". ஈகரை தமிழ் களஞ்சியம். பார்த்த நாள் 6 ஆகத்து 2017.