பசிலிக்கா
பசிலிக்கா அல்லது பெருங்கோவில் (Basilica) எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. கிரேக்க மொழியில் அதன் பொருள் "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களை குறிக்க பயன்பட்டது. திருத்தந்தையின் ஆணையால் மட்டுமே ஆலயங்கள் பெருங்கோவில்களாக உயர்த்தப்பட முடியும். கட்டிட வடிவமைப்புப் பாணியில் மத்திய குழிசியையும் வழிநடையையும் கொண்ட கட்டிடங்களைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை புரியும் திருப்பயண இடங்களாகவும் பெருங்கோவில்கள் அமைந்துள்ளன.[1][2] இவ்வகை திருப்பயணியருக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Sacred Travels by Lester Meera 2011 ISBN 1-4405-2489-0 page 53
- ↑ "Eternal Word Television Network, Global Catholic Network". Ewtn.com. 1999-06-13. 2016-05-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-17 அன்று பார்க்கப்பட்டது.