உள்ளடக்கத்துக்குச் செல்

பசார் செனி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KJ14   KG16  பசார் செனி
| எல்ஆர்டி
Pasar Seni LRT Station
பொது தகவல்கள்
அமைவிடம்பசார் செனி, கோலாலம்பூர்
உரிமம் பிரசரானா (LRT)
எம்ஆர்டி நிறுவனம் (MRT)
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
நடைமேடை1 தீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள் KA02  கோலாலம்பூர் தொடருந்து நிலையம்; கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter); கேடிஎம் இடிஎஸ் (KTM ETS)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை KJ14  உயர்த்தப்பட்ட நிலையம்
 KG16  நிலத்தடி
தரிப்பிடம்இல்லை
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KJ14   KG16 
வரலாறு
திறக்கப்பட்டதுசெப்டம்பர் 1, 1998
Services
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
மஸ்ஜித் ஜமெயிக்
கோம்பாக்
 
கிளானா ஜெயா வழித்தடம்
 
கோலாலம்பூர் சென்ட்ரல்
புத்ரா அயிட்ஸ்

பசார் செனி நிலையம் அல்லது பசார் செனி எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Pasar Seni station அல்லது Pasar Seni LRT station மலாய்: Stesen Pasar Seni அல்லது LRT Pasar Seni சீனம்: 中央艺术坊站) என்பது கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் இலகுத் தொடருந்து நிலையமாகும்.[2]

பசார் செனி என்பது முன்பு கோலாலம்பூர் மத்தியச் சந்தை (Central Market) என்று அழைக்கப்பட்டது. பெட்டாலிங் சாலைக்கு (Petaling Street) மிக அருகில் இந்த நிலையம் உள்ளது. 1985-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மத்தியச் சந்தை புனரமைப்பு செய்யப்பட்டு பசார் செனி எனும் கைவினைப் பொருட்கள் விற்பனை மையமாக மாற்றப் பட்டது.

இதே இடத்தில் தான் பசார் செனி எல்ஆர்டி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையத்தை கிளானா ஜெயா வழித்தடம் (Kelana Jaya Line); காஜாங் வழித்தடம் (Kajang Line) ஆகிய இரு தடங்கள் இணைக்கின்றன.[3]

பொது

[தொகு]

கிளானா ஜெயா வழித்தடம் வழியாக செப்டம்பர் 1, 1998-இல் சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையத்திற்கும் பசார் செனி நிலையத்திற்கும் இடையே சேவை தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 1999-இல் பசார் செனி நிலையத்திலிருந்து புத்ரா முனையத்திற்கு விரிவாக்கப்பட்டது. புத்ரா முனையம் தற்போது கோம்பாக் எல்ஆர்டி நிலையம் என அறியப்படுகின்றது.

இந்த தொடருந்து நிலையத்திலிருந்து கோலாலம்பூர் தொடருந்து நிலையம் 400 மீட்டர் தொலைவில் நடைத் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் முதன்மையான பேருந்து முனையங்கள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. Retrieved 15 November 2024.
  2. "Najib launches Phase 2 of Sungai Buloh-Kajang MRT line" (in en). Thestar.com.my. 2017-07-17. https://www.thestar.com.my/news/nation/2017/07/17/najib-launches-phase-2-of-sungai-buloh-kajang-mrt-line/. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசார்_செனி_நிலையம்&oldid=4205113" இலிருந்து மீள்விக்கப்பட்டது