உள்ளடக்கத்துக்குச் செல்

பசவான் சிங் (சின்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2000இல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் முத்திரையில் பசவான் சிங்

பசவான் சிங் (Basawon Singh) அல்லது பசவோன் சின்கா என்றும் அழைக்கப்படுகின்ற, (இறப்பு:1989 ஏப்ரல் 7) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும் மற்றும் வாடுகின்ற, தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஒரு போராடுபவராகவும் இருந்தார். சுதந்திரத்திற்கான போராட்டத்தின் காரணமாக இவர் பிரிட்டிசு இந்தியாவின் சிறைகளில் மொத்தம் 18 1/2 ஆண்டுகள் கழித்தார். மேலும் இவர் ஜனநாயக சோசலிசத்திற்கு உறுதியளித்தார். யோகேந்திர சுக்லாவுடன், பீகாரில் காங்கிரஸ் சோசலிச கட்சியின் நிறுவன உறுப்பினராக இருந்தார். இவர் மிகவும் உயரமானவர் என்பதால் இவரது புரட்சிகர சகாக்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் லம்பாட் என்று அழைக்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பசவான் சிங் 1909 மார்ச் 23 அன்று ஹாஜிப்பூரில் உள்ள ஜமல்பூரில் (சுபாய்) ஒரு சிறு விவசாயியின் குடும்பத்தில் பிறந்தார். [1] ஒரே மகனான இவர், தனது எட்டு வயதில் தந்தையை இழந்தார். தனது பத்து வயதில் மகாத்மா காந்தியைப் பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் ஹாஜிபூருக்குச் சென்றார். ஒரு சிறந்த மாணவரான் இவர் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உதவித்தொகையை பெற்ரு படித்தார். அதன்பிறகு திகி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். தனது உணவுக்கும் மற்றும் உறைவிடத்திற்காகவும் சிறுவர்களுக்கு கற்பித்தல் பணியில் ஈடுபட்டார். இவரது மற்ற பள்ளி செலவுகளைச் சமாளிக்க இவரது தாயார் ஒவ்வொரு மாதமும் இரண்டு ரூபாய்க்கு ஒரு மூங்கிலை விற்று இவருக்கு அனுப்பினார். [2] சிங் 1926 ஆம் ஆண்டில் உயர் முதல் பிரிவுடன் மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர், ஜிபிபி கல்லூரியில் படிப்பைத் தொடங்கினார்.

புரட்சிகர நடவடிக்கைகள்

[தொகு]

பள்ளியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் சிங் புரட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பின் தலைவரான யோகேந்திர சுக்லா இவரது வழிகாட்டியாக இருந்தார். 1925 ஆம் ஆண்டில் அந்த அமைப்பில் சேர்ந்தவுடன், இவரது கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர், இவர் பாட்னாவில் உள்ள சதகத் ஆசிரமத்தில் பீகார் வித்யாபீடத்துடன் தொடர்பு கொண்டார். அங்கு இவர் ஒரு சிறிய குழு இளைஞர்களுடன் தீவிர இராணுவப் பயிற்சியை மேற்கொண்டார். [3]

லாகூர் சதி வழக்குக்குப் பின்னர் 1929 இல் சிங் தலைமறைவாகிவிட்டார். பூசாவல், ககோரி, திருகத் மற்றும் தெலுவா சதி வழக்குகளிலிலும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் கேசவ் சந்திர சக்ரவர்த்தியுடன் இயக்கத்தை மேற்கொண்டார். இவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு 1930 சூனில் பாங்கிபூர் மத்திய சிறையில் இருந்து தப்பினார். இவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பாகல்பூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.  

பாகல்பூரில் இருந்தபோது, சிறையில் நிலவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளை எதிர்த்து சிங் உண்ணாவிரதன் மேற்கொண்டார். நோன்பின் 12 வது நாளில் இவர் கயா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், இவர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு கட்டாயமாக உணவளிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. அப்போதைய பீகார் அமைச்சராக இருந்த சர் கணேஷ் தத், சிங்கின் தாயார் தௌலத் கெர் என்பவரிடம், இவரது நோன்பை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். இவரது தாயார், உண்ணாவிரதத்தின் 50 வது நாளில், இவரைச் சந்தித்து இவரை ஆசீர்வதித்தார்.

இவர் இறக்க நேரிட்டால் இவரது உடலைப் பெற மக்கள் சிறை வாசலில் தினமும் காத்திருந்தனர். சிறையில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளும் கடந்த சில நாட்களாக இவருடன் ஒற்றுமையுடன் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் 58 வது நாளில் இவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக காந்தியால் தெரிவிக்கப்பட்ட பின்னர் இவர் உண்ணாவிரதத்தை முறித்துக் கொண்டார். உடல்நிலை சரியில்லாததால் இவர் 1936 சூன் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவரது இயக்கத்தை தடை செய்ய முயன்ற்போது, இவர் கட்டுப்பாடுகளை மீறியதால் மீண்டும் கைது செய்யப்பட்டார். [4]

சிங் தனது சிறைவாசத்தின் போது வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், தத்துவம், சமூக அறிவியல் மற்றும் இயற்கை அறிவியல் போன்ற பாடங்களைப் படித்தார். இவருக்கு புகைப்பட ஆர்வமும் இருந்தது. [5]

அரசியல் மற்றும் தொழிற்சங்கப் பணிகள்

[தொகு]

சிங் 1936 முதல் 1989 இல் தான் இறக்கும் வரை தொழிற்சங்க இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். 1936 திசம்பரில் காங்கிரச் சோசலிச கட்சியில் சேர்ந்த இவர் அதன் தொழிலாளர் செயலாளராக நியமிக்கப்பட்டார். பீகார் நிலக்கரி வயல்கள், சர்க்கரை ஆலைகள், மைக்கா சுரங்கங்கள் மற்றும் இரயில்வேயி போன்றவற்றில் தொழிற்சங்கங்களை நிறுவினார். இவர் 1937 ஆம் ஆண்டில் ஜப்லா தொழிலாளர் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தினார்.

சுதந்திர இந்தியாவில்

[தொகு]

இவர் சோசலிசக் கட்சியின் தேசிய நிர்வாக உறுப்பினராக இருந்தார். சோசலிசவாதிகளுடன் இணைந்த ஆறு தேசிய கூட்டமைப்புகளில் ஒன்றான இந்து தொழிலாளர் சங்கத்தின் நிறுவனர் ஆவார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி 1965 ல் கோமியா வேலைநிறுத்தத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார்.  

1977 ஆம் ஆண்டில் இவர் தெக்ரி-ஆன்-சோன் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத்தின் ஜனதா கட்சி அரசாங்கத்தில் தொழிலாளர், திட்டமிடல் மற்றும் தொழில்துறை அமைச்சரவை அமைச்சரானார். இவர் 1989 ஏப்ரல் 7, அன்று இறந்தார்.

வெளிநாடு பயணம்

[தொகு]

பசவோன் சிங் பரந்த அறிவைக் கொண்டிருந்தார். மேலும் இந்திய சுதந்திர இயக்க ஆர்வலர்கள் மத்தியில் புலமைப்பரிசிலுக்கு பெயர் பெற்றவர். இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினார். முதல்முறையாக இவர் 1950இல் யங்கோனுக்கு சென்றார். 1951 இல், யாங்கோனில் நடைபெற்ற முதல் ஆசிய சோசலிச மாநாட்டிற்கு இவர் ஒரு பிரதிநிதியாக இருந்தார். 1954 ஆம் ஆண்டில், இவர் சீனாவுக்குச் சென்றார். மே தின கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்திய தூதுக்குழுவை வழிநடத்தினார். 1956 ஆம் ஆண்டில், தோமியில் நடந்த ஜப்பான் தொழிற்சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் இவர் இந்து தொழிலாளர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். அதே ஆண்டில், இவர் சோவியத் ஒன்றியத்துக்குச் சென்று, மே தின கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்திய தூதுக்குழுவை வழிநடத்தினார். தொழில்துறை தொழிலாளர் அமைப்பின் அமெரிக்க தொழிலாளர் காங்கிரசின் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் இவர் 1984 இல் அமெரிக்காவிற்கு சென்று வந்தார்.  

மனைவி

[தொகு]

இவரது மனைவி கமலா சின்கா ஜன சங்க நிறுவனரும்,இந்திய அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரியுமான சியாமா பிரசாத் முகர்ஜி என்பவரின் பேத்தியாவார். கமலா 1990 முதல் 2000 வரை இருமுறை மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் சுரிநாம் மற்றும் பார்படோசின் தூதராக பணியாற்றினார். ஐ.கே. குஜ்ராலின் அமைச்சரவையில் வெளிவிவகாரங்களுக்கான முதல் பெண் மத்திய வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார்.. [6]

அங்கீகாரம்

[தொகு]

2000 மார்ச் 23 அன்று இந்திய அரசு இவரது நினைவாக அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. பீகாரில் ஹாஜிபூர் நகரில் பசவோன் சிங் உட்புற விளையாட்டு அரங்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. [7] [8]

குறிப்புகள்

[தொகு]
  1. Lalit, Kumar (2000). Shramikon Ke Hitaishi Neta, Itihas Purush: Basawon Singh (in Hindi). Patna: Bihar Hindi Granth Academy.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Jha, Sureshwar. Gems of Mithila. Mithila Sanskrit Post Graduate Study & Research Institute (Publication Director – Dev Narain Yadav).
  3. Jha, Sureshwar. Gems of Mithila (2014 ed.). Mithila Sanskrit Post Graduate Study & Research Institute (Publication Director – Dev Narain Yadav). p. 480 (at pages 439–445). இணையக் கணினி நூலக மைய எண் 895247051.
  4. Jha, Sureshwar. Gems of Mithila (2014 ed.). Mithila Sanskrit Post Graduate Study & Research Institute (Publication Director – Dev Narain Yadav). p. 480 (at pages 439–445). இணையக் கணினி நூலக மைய எண் 895247051.
  5. Jha, Sureshwar. Gems of Mithila (2014 ed.). Mithila Sanskrit Post Graduate Study & Research Institute (Publication Director – Dev Narain Yadav). p. 480 (at pages 439–445). இணையக் கணினி நூலக மைய எண் 895247051.
  6. "Former union minister Kamla Sinha dies in US away". Times of India. 1 January 2015. பார்க்கப்பட்ட நாள் 1 January 2015.
  7. "I am not corrupt, says Paswan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 March 2002 இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020042620/http://articles.timesofindia.indiatimes.com/2002-03-17/patna/27131235_1_paswan-gsi-hajipur. பார்த்த நாள்: 3 April 2008. 
  8. "Free-for-all at joint meeting of RJD, LJP". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 June 2009 இம் மூலத்தில் இருந்து 24 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024015543/http://articles.timesofindia.indiatimes.com/2009-06-08/patna/28158401_1_ljp-workers-rjd-ljp-alliance-munshi-lal-rai. பார்த்த நாள்: 8 June 2009. 

மேலும் படிக்க

[தொகு]

முதன்மை

[தொகு]
  • Vijoy Kumar (ed.), Bihar Vidhanmandal Mein Basawan Singh ke Sambhashan, Patna: Bihar Rajya Abhilekhagar Nideshalaya, Government of Bihar, 2017.
  • Mahendra Pal (ed.), Basawan Singh in the records of Bihar State Archives, Patna: Bihar Rajya Abhilekhagar Nideshalaya, Government of Bihar, 2019.

இரண்டாம் நிலை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசவான்_சிங்_(சின்கா)&oldid=3661933" இலிருந்து மீள்விக்கப்பட்டது