பசந்தி பிஷ்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசந்தி பிஷ்டு
தாய்மொழியில் பெயர்बसंती बिष्ट
பிறப்பு1953
தேசியம்இந்தியன்
செயற்பாட்டுக்
காலம்
1998- தற்சமயம் வரை
அறியப்படுவதுஉத்தராகண்ட மாநில நாட்டுப்புற பாடகி
சொந்த ஊர்லுவானி, தெவால் தெஹ்சில், சமோலி, உத்தராகண்ட்
விருதுகள்பத்மசிறீ (2017), ராஷ்டிரிய மத்தோசிறீ தேவி அகில்யா சம்மன்

பசந்தி பிஷ்டு (பிறப்பு: 1953) என்பவர் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் நன்கு அறியப்பட்ட நாட்டுப்புற பாடகி ஆவார். இவர் உத்தரகண்டின் ஜாகர் நாட்டுப்புற வடிவத்தின் முதல் பெண் பாடகியாக புகழ் பெற்றவர். ஜாகர் நாட்டுப்புற பாடல் வடிவம் தெய்வங்களை துதிக்கும்  வடிவமாகும். ஜாகர் வடிவம் பாரம்பரியமாக ஆண்களால் பாடப்பட்டது. எனினும் பசந்தி பிஷ்டு இந்த நடைமுறையை மாற்றினார். இன்று நன்கு அறியப்பட்ட இவரது குரல் பாரம்பரிய வடிவிலான ஜாகர் நாட்டுப்புற பாடலைப் பாதுகாக்க முயற்சிக்கிறது. பசாந்தி பிஷ்டுக்கு 2017 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.[1][2]

வாழ்க்கை[தொகு]

பசந்தி பிஷ்டு 1953 ஆம் ஆண்டில் உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலியில் உள்ள லுவானி கிராமத்தில் பிறந்தார். இவர் தனது 15 வயதில் ஒரு கணையெக்கி வீரரை மணந்தார். இல்லத்தரசியாக வாழ்வின் பெரும்பகுதியை கழித்த இவர்   தொழில்முறை பாடலை 40 வயதிற்கு பின்னர் பஞ்சாபின் ஜலந்தரில் தொடங்கினார்.

இருப்பினும் பசந்தி சிறுவயதில் இருந்தே அவர் தனது தாயின் ஜாகர் பாடல்களைக் கேட்டு வளர்ந்ததாக  கூறுகிறார்.

"நான் எப்போதும் என் அம்மாவுடன் சேர்ந்து பாடினேன். அவர் வேலைகளைச் செய்யும்போது பாடினார். கிராமத்தில் நடந்த பல கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் இந்த வகையான இசை மீதான என் அன்பை ஆழமாக்கின. ”

- பசாந்தி பிஷ்டு

பசாந்தி தனது கிராமத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள உள்ளூர் கிராமப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். ஆனால் மேல்நிலைப் பள்ளி தனது வீட்டிலிருந்து மேலும் தொலைவில் இருந்ததால் கல்வியை தொடர முடியவில்லை.[3]

இசை வாழ்க்கை[தொகு]

அதுவரை தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்த பசந்தியின் பணி வாழ்க்கை அவரது நாற்பது வயதுகளில் ஆரம்பமாகியது. பசந்தி தனது கணவருடன் ஜலந்தருக்குச் சென்ற பிறகு ஜலந்தரில் உள்ள பிரச்சீன் கலா கேந்திரத்தில் இசை கற்க ஆர்வம் கொண்டிருந்தார். அங்கு இளவயது மாணவர்களுடன் தாம் இசை கற்க வெட்கப்பட்டார். தனது மகளின் ஆசிரியரிடம் ஆர்மோனியம் வாசிக்க கற்கத் தொடங்கிய போது ​தொழில்முறை இசை பயிற்சிக்கு முதலடி எடுத்து வைத்தார். [3]பின்னர் பஜனைகள், திரைப்படப் பாடல்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு பொது நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினார். அவரது கணவர் ஓய்வு பெற்ற பிறகு பசாந்தி பிஷ்ட் டெஹ்ராடூனில் குடியேறினார். 1996 ஆம் ஆண்டில் நஜிபாபாத்தில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் சேர்ந்தார். இவர் ஆகாஷ்வானியின் முதல்தர கலைஞராவார்.

பசந்தி அவருடைய குழந்தைப் பருவத்தில் தான் தாயிடம் இருந்தும், பிற கிராம பெரியவர்களிடம் இருந்தும் தாம் கற்றுணர்ந்த தெய்வத்தை துதி செய்யும் ஜாகர் எனும் நாட்டுப்புற பாடல் வடிவத்தை பாடத் தொடங்கினார். ஜாகரின் மறைந்த பல பாடல்களை அதே பழைய தாளங்களில் பாடினார். பசந்தி பிஷ்டின் குரல் வளம், பாடல் பாணி, தாளம் என்பன உத்தரகண்டின் பஹாடி பாடும் பாணிக்கு பொதுவானவை.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவரது கணவர் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மகன் இந்திய விமானப்படையில் பணி புரிகிறார்.

விருதுகள்[தொகு]

அஹில்யா தேவி சம்மன் மத்திய பிரதேச அரசு (2016-2017)

பத்மஸ்ரீ (2017)

உத்தரகண்ட் அரசால் நாரி சக்தி தீலு ரவுத்தேலி

சான்றுகள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "The hindu". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. 3.0 3.1 "Basanti Bisht gets candid on her musical journey". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்தி_பிஷ்டு&oldid=2957552" இலிருந்து மீள்விக்கப்பட்டது