பங்சாமோரா
பங்சாமோரா Bangsamoro | |
|---|---|
| Bangsamoro Autonomous Region in Muslim Mindanao | |
|
இடமிருந்து வலமாக: மராவி பெரிய மசூதி; பங்குவான் தீவு; பொல்லோக் துறைமுகம்; பாராங்; கோட்டாபடோ பெரிய மசூதி; லனாவோ ஏரி; பி.சி குன்று; கொடபடோ நகரம் | |
பிலிப்பீன்சில் பங்சாமோரா அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 7°13′N 124°15′E / 7.217°N 124.250°E | |
| நாடு | பிலிப்பீன்சு |
| 2019 உருவாக்கம் | சனவரி 21, 2019 |
| அரசு பதவியேற்பு | மார்ச் 29, 2019 |
| தலைநகரம் | கொடபடோ நகரம் |
| அரசு | |
| • நிர்வாகம் | பங்சாமோரா நிருவாகம் |
| • தலைவர் | கலீபா நண்டோ |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 56,91,583 (2,024) |
| இனம் | பங்சாமோரா |
| மொழிகள் | |
| இணையதளம் | bangsamoro |
பங்சாமோரா அல்லது முசுலீம் மிண்டனாவோவின் பங்சாமோரோ தன்னாட்சி பிராந்தியம் (ஆங்கிலம்: Bangsamoro; Bangsamoro Autonomous Region in Muslim Mindanao (BARMM); தகலாகு: Rehiyong Awtonomo ng Bangsamoro sa Muslim Mindanao; அரபு:منطقة بانجسامورو ذاتية الحكم في مينداناو المسلمة; Minṭaqah Banjisāmūrū dhātiyyah al-ḥukm fī Mīndānāw al-muslimah) என்பது பிலிப்பீன்சு, தென்மேற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பிராந்தியமாகும்.
முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதிக்கு (Autonomous Region in Muslim Mindanao) (ARMM) பதிலாக,[1] சனவரி 21 மற்றும் பெப்ரவரி 6, 2019 ஆகிய தேதிகளில் மேற்கு மிண்டனாவோவில் இரண்டு கட்ட பொதுவாக்கெடுப்புகள் நடைபெற்றன. அவற்றைத் தொடர்ந்து, அந்தத் தன்னாட்சிப் பகுதியின் அடிப்படைச் சட்டமான பாங்சாமோரோ அடிப்படைச் சட்டம் (Bangsamoro Organic Law) நிறைவேற்றப்பட்டது.[2] அதன் பின்னர் பங்சாமோரா (BARMM) எனும் முசுலீம் மிண்டனாவோவின் பங்சாமோரோ தன்னாட்சி பிராந்தியம் உருவாக்கப்பட்டது.[3] இந்தத் தன்னாட்சிப் பகுதி உருவாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சனவரி 25 அன்று பிலிப்பீன்சு தேர்தல் ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.
பொது
[தொகு]பங்சாமோரோவின் உருவாக்கம் என்பது பிலிப்பீன்சு அரசாங்கத்திற்கும் பல தன்னாட்சிக் குழுக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளின் உச்சக் கட்டமாகும். குறிப்பாக, முசுலிம் மிண்டனாவோவில் உள்ள முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பிராந்தியத்தின் (ARMM) செல்லுபடியாகும் தன்மையை நிராகரித்த மோரோ இசுலாமிய விடுதலை முன்னணி (MILF), பிலிப்பீன்சு அரசாங்கத்திடமிருந்து கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஒரு பிராந்தியத்தை உருவாக்கும் கோரிக்கையை முன்வைத்தது.
2014-இல் பிலிப்பீன்சு அரசாங்கத்திற்கும் மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிக்கும் இடையே 'பங்சாமோரோ மீதான விரிவான ஒப்பந்தம்' (Comprehensive Agreement on the Bangsamoro) என்று அழைக்கப்படும் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தம் இறுதியாக உறுதி செய்யப்பட்டது.[4] சில விதிகள் குறித்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள்; மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பிறகு, பிலிப்பீன்சு நாடாளுமன்றம் (Congress of the Philippines) அந்தப் பிராந்தியத்திற்கான அடிப்படைச் சட்டவரைவை உருவாக்கி அதற்கு ஒப்புதல் வழங்கியது.[5] தற்போது அந்தச் சட்டவரைவு, பங்சாமோரோ அடிப்படைச் சட்டம் (Bangsamoro Organic Law) என்று அழைக்கப்படுகிறது.[6] அந்தச் சட்டவரைவு சூலை 26, 2018 அன்று சட்டமாகக் கையெழுத்தானது.[7][8]
செப்டம்பர் 9, 2024 அன்று, பிலிப்பீன்சு உச்ச நீதிமன்றம், பங்சாமோரோ அடிப்படைச் சட்டம் அரசியலமைப்பின் கீழ் செல்லுபடியாகும் என ஒருமனதாக வாக்களித்து உறுதிப்படுத்தியது. ஆனால் சுலு மாகாணம் இந்த தன்னாட்சிப் பிராந்தியத்தின் ஒரு பகுதி அல்ல என்றும்[9] அறிவித்தது. செப்டம்பர் 17, 2022 அன்று நடைபெற்ற ஒரு பொதுவாக்கெடுப்பைத் தொடர்ந்து, மகுயின்டானோ இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன; அவை மகுயின்டானோ டெல் சுர் (Maguindanao del Sur) மற்றும் மகுயின்டானோ டெல் நோர்டே (Maguindanao del Norte) ஆகும்.
நிருவாகப் பிரிவுகள்
[தொகு]மாகாணங்கள்
[தொகு]பங்சாமோரோ 5 மாகாணங்கள்,[10] 3 உறுப்பிய நகரங்கள், 105 நகராட்சிகள் மற்றும் 2,135 பாரங்கே (Barangays)[11] கிராமப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இசபெலா (Isabela) நகரம், பசிலான் மாகாணத்தின் (Basilan) ஒரு பகுதியாக இருந்தபோதிலும், தன்னாட்சி பிராந்தியத்தின் நிர்வாக அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல.
கூடுதலாக, சூலு (Sulu) மாகாணம் 2019 முதல் 2024 வரை நடைமுறையில் பங்சாமோரோவின் ஒரு பகுதியாக இருந்தது.

நிருவாக அமைப்பு
[தொகு]- † பிராந்திய மையம்
| மாகாணம் | தலைநகரம் | மக்கள் தொகை (2020)A |
பரப்பளவு[12] | அடர்த்தி | பெரு நகரங்கள் |
நகராட்சி. | பாரங்கே. | ||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கிமீ2 | ச.மைல் | /கிமீ2 | /ச.மைல் | ||||||||
| பசிலான் | இலமித்தான்ன் | 10.8% | 4,26,207 | 1,103.50 | 426.06 | 390 | 1,000 | 1 | 11 | 165 | |
| லனாவோ டெல் சுர் | மராவி | 30.3% | 11,95,518 | 3,872.89 | 1,495.33 | 310 | 800 | 1 | 39 | 1,159 | |
| மகுயிண்டானோ டெல் நோர்த்தே | டத்து ஓடின் சின்சுவாட் | 23.9% | 9,43,500 | 3,988.82 | 1,540.09 | 240 | 620 | 1 | 12 | 258 | |
| மகுயிண்டானோ டெல் சுர் | புலுவான் | 18.8% | 7,41,221 | 4,973.48 | 1,920.27 | 150 | 390 | 0 | 24 | 287 | |
| தாவி-தாவி | பொங்காவோ | 11.2% | 4,40,276 | 1,087.40 | 419.85 | 400 | 1,000 | 0 | 11 | 203 | |
| சிறப்பு புவியியல் பகுதி | † | — | 5.5% | 2,15,433 | 824.31 | 318.27 | 260 | 670 | 0 | 8 | 63 |
| மொத்தம் | 3,944,692 | 11,935.7 | 4,608.40 | 330 | 850 | 3 | 105 | 2,135 | |||
மக்கள் தொகையியல்
[தொகு]| ஆண்டு | ம.தொ. | ±% |
|---|---|---|
| 1918 | 3,08,024 | — |
| 1939 | 5,17,695 | +68.1% |
| 1948 | 6,77,520 | +30.9% |
| 1960 | 11,67,928 | +72.4% |
| 1970 | 14,66,414 | +25.6% |
| 1975 | 14,84,424 | +1.2% |
| 1980 | 16,48,272 | +11.0% |
| 1990 | 22,34,781 | +35.6% |
| 1995 | 25,09,079 | +12.3% |
| 2000 | 29,66,894 | +18.2% |
| 2007 | 43,79,948 | +47.6% |
| 2010 | 35,27,926 | −19.5% |
| 2015 | 40,80,825 | +15.7% |
| 2020 | 49,44,800 | +21.2% |
| 2024 | 56,91,583 | +15.1% |
மோரோ மக்கள்[13] என்பது முக்கியமாக முசுலிம்களாக இருக்கும் பல்வேறு இனக் குழுக்களுக்கான ஒரு பொதுவான பெயராகும். இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் மரனவு மக்கள் மற்றும் இரானுன் மக்கள் பெரும் பகுதியை வகிக்கின்றனர். சொக்ஸ்சர்ஜென் பிராந்தியத்தின் கொட்டபாட்டோ மாகாணத்தில் உள்ள பங்சாமோரோவின் சிறப்பு புவியியல் பகுதியில் மகுயின்டானோ மக்கள் (Maguindanao people) முதன்மை மக்கள் தொகையாக உள்ளனர். சுலு தீவுக்கூட்டத்தில் தவுசுக் மக்கள், யக்கான் மக்கள் (Yakan people) மற்றும் பஜாவு மக்கள் மக்கள் முக்கிய குழுக்களாக உள்ளனர்.
மொழிகள்
[தொகு]மோரோ மக்கள் மற்றும் லுமாட் மக்கள் தங்களின் சொந்த மொழிகளைப் பேசுகிறார்கள். இவர்கள் பேசும் பிற மொழிகளில் இலோகானோ மொழி, சவகான மொழி, இலிகய்னொன் மொழி, செபுவான மொழி மற்றும் தகலாகு மொழி ஆகியவையும் அடங்கும். இவற்றில் செபுவான மொழி மற்றும் தகலாகு மொழி ஆகிய இரண்டும் பொது மொழிகளாக விளங்குகின்றன.
செபுவானோ மக்கள் பெருமளவில் மிண்டனாவோவிற்கு வந்து குடியேறியதால் அங்கு செபுவான மொழி இத்தகைய நிலையைப் பெற்றுள்ளது. தவுசுக் மொழி மற்றும் செபுவான மொழி ஆகிய இரு மொழிகளுமே விசயன் மொழிக்குடும்பத்தைச் (Visayan languages) சேர்ந்தவை என்பதால், தவுசுக் மக்கள் செபுவான மொழியை மிக எளிதாகப் பேசுகின்றனர். சுலு தீவுக்கூட்டத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கு, தகலாகு மொழியுடன் சேர்ந்து சவகான மொழியும் பொது மொழியாக இருக்கலாம். ஆனால் பசிலான் தீவில் சபகானோ மொழியே முதன்மையான பொது மொழியாக உள்ளது. மேலும், சுலு தீவுக்கூட்டத்தில் உள்ள பல உள்ளூர் மக்களும் பண்டமாற்று வணிகர்களும் சபா மலாய் மொழியையும் பேசக் கூடியவர்களாக உள்ளனர்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ "Philippines". The World Factbook. Central Intelligence Agency. May 16, 2006. Archived from the original on May 28, 2006. Retrieved May 29, 2006.
- ↑ Villamor, Felipe (July 26, 2018). "Duterte Signs Law Giving More Autonomy to Muslims in Southern Philippines". New York Times. https://www.nytimes.com/2018/07/26/world/asia/philippines-rodrigo-duterte-marawi.html.
- ↑ "Moro Islamic Liberation Front". GlobalSecurity.org. Archived from the original on August 21, 2010. Retrieved June 4, 2010.
- ↑ "Philippines Reach Landmark Peace Deal with MILF". Conciliation Resources. March 2014. Retrieved June 27, 2022.
- ↑ Macasalong, Marjanie Salic (2013). "Mindanao Conflict and Islamic Revivalism: The Moro Islamic Liberation Front's Approach". ICR Journal 4 (2): 250–278. doi:10.52282/icr.v4i2.476.
- ↑ Kapahi, Anushka D.; Tañada, Gabrielle (2018). "The Bangsamoro Identity Struggle and the Bangsamoro Basic Law as the Path to Peace". Counter Terrorist Trends and Analyses 10 (7): 1–7.
- ↑ Fonbuena, Carmela (February 8, 2019). "63 out of 67 barangays in Cotabato to join Bangsamoro region". Rappler.
- ↑ Sarmiento, Bong S. (February 7, 2019). "21 of 67 villages in North Cotabato join BARMM". newsinfo.inquirer.net.
- ↑ "SC Upholds Validity of Bangsamoro Organic Law; Declares Sulu not Part of Bangsamoro Region". Supreme Court of the Philippines. 9 September 2024. https://sc.judiciary.gov.ph/sc-upholds-validity-of-bangsamoro-organic-law-declares-sulu-not-part-of-bangsamoro-region/.
- ↑ Arguilas, Carolyn (February 8, 2019). "Pikit's fate: 20 barangays remain with North Cotabato, 22 joining BARMM". Minda News. https://www.mindanews.com/peace-process/2019/02/pikits-fate-20-barangays-remain-with-north-cotabato-22-joining-barmm/.
- ↑ Bolledo, Jairo (13 April 2024). "BARMM residents approve creation of 8 more towns". Rappler. https://www.rappler.com/philippines/mindanao/barmm-residents-approve-creation-municipalities-plebiscite-april-2024/.
- ↑ "Environment and Natural Resources" (PDF). Bangsamoro Development Plan Integrative Report. Bangsamoro Development Agency. 2015. Archived from the original (PDF) on March 4, 2016. Retrieved May 31, 2016.
- ↑ Bajo, Anna Felicia; Masino, Dona (31 January 2021). "Paghubog: Mga Kuwentong Bangsamoro" (in fil, en). GMA News. https://www.gmanetwork.com/news/specials/content/181/paghubog-mga-kuwentong-bangsamoro/.
நூல்கள்
[தொகு]- Agoncillo, Teodoro A. (1990) [1960]. History of the Filipino People (Eighth ed.). Quezon City: Garotech Publishing. ISBN 978-9718711064.
மேலும் படிக்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் பங்சாமோரா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கிமூலத்தில் பங்சாமோரா பற்றிய ஆக்கங்கள்- Bangsamoro Transition Commission பரணிடப்பட்டது நவம்பர் 18, 2020 at the வந்தவழி இயந்திரம்
- Bangsamoro Basic Law in draft form
- OpenBangsamoro பரணிடப்பட்டது நவம்பர் 12, 2020 at the வந்தவழி இயந்திரம்