பங்கேற்பு மக்களாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பங்கேற்பு மக்களாட்சி (Participatory democracy) என்பது, அரசியல் முறைமையின் செயல்பாட்டிலும் அதனை வழிநடத்துவதிலும் மக்களின் பரவலான பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் ஒரு மக்களாட்சி முறை ஆகும். நேரடி மக்களாட்சி இதன் ஒரு துணை வகை எனலாம். "மக்களாட்சி" என்பதன் பொருளே மக்களின் ஆட்சி என்பதாக இருப்பினும், வழமையான சார்பாண்மை மக்களாட்சியில் மக்களின் பங்கேற்பை வாக்களிப்பதுடன் மட்டுப்படுத்திவிட்டு உண்மையான ஆட்சிப்பொறுப்பை அரசியல்வாதிகளிடம் விட்டுவிடுவதாகவே உள்ளது.

பங்கேற்பு மக்களாட்சியில், அரசியல் குழுக்களின் எல்லா உறுப்பினரும் முடிவு எடுப்பதில் கூடிய பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு முயல்கிறது. அத்துடன் இவ்வாறான வாய்ப்புக்களைப் பரவலாகப் பல்வேறு தரப்பு மக்களுக்கும் கிடைக்கும்படி செய்வதும் இதன் நோக்கமாகும்.