உள்ளடக்கத்துக்குச் செல்

பங்கு (நிதி மற்றும் வணிகவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பங்கு (Share) என்பது, நிதிச் சந்தைகளில் இணையுதவி நிதி, வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளில் பயன்படுத்தப்படும் ஓர் அலகு ஆகும். [1]பங்குகளின் உரிமையாளர்  அப்பங்குகளை விற்ற நிறுவனத்தின் பங்குதாரர்  ஆவார்.[2] ஒரு பங்கு என்பது முதலின் (முதலீட்டின்) ஒரு பிரிக்க முடியாத அலகு ஆகும். இது நிறுவனத்திற்கும் பங்குதாரருக்கும் இடையிலான உரிமை உறவை வெளிப்படுத்துகிறது. ஒரு பங்கின் மதிப்பிடப்பட்ட மதிப்பு (denominated Value) என்பது முக மதிப்பு (face value) மற்றும் வழங்கப்பட்ட பங்குகளின் முக மதிப்பின் மொத்தம் ஆகும். இது ஒரு நிறுவனத்தின் மூலதனத்தைக் குறிக்கிறது.[3] இது அந்தப் பங்குகளின் சந்தை மதிப்பைப் பிரதிபலிக்காது.

பங்குகளின் உரிமையாளர் தன்னுடைய பங்கின்  உரிமைக்காகக் பெறுகின்ற  வருமானம்  ஈவுத்தொகை என்று அழைக்கப்படுகிறது. பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும் செயல்முறை பெரும்பாலும்  நடுத்தர மனிதரான ஒரு பங்கு தரகர் வழியாகவே நிகழ்கின்றன.[4]ஒப்புப் பங்கு, சலுகைப்பங்கு, ஊக்கப் பங்குகள்  போன்ற பல்வேறு வகையான பங்குகள் உள்ளன.

மதிப்பீடு

[தொகு]

வெவ்வேறு சந்தைகளில் உள்ள பல்வேறு கொள்கைகளின்படி பங்குகள் மதிப்பிடப்படுகின்றன. ஆனால் ஒரு அடிப்படை முன்மாதிரி என்னவென்றால், ஒரு பங்கு ஒரு பரிவர்த்தனை ஏற்படக்கூடிய விலைக்கு மதிப்புள்ளது எனில் அது விற்கப்பட வேண்டிய பங்கு.  ஒரு  சந்தையின் பணப்புழக்கத்தை வைத்தே  பங்கை  எந்த நேரத்திலும் விற்க முடியுமா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. வாங்குபவருக்கும் விற்பனையாளருக்கும் இடையிலான பங்குகளின் விற்பனை பரிவர்த்தனையின் மதிப்பீடு வழக்கமாக அந்த  நேரத்தில் பங்குகளின் "உண்மையான மதிப்பு" என்னவோ அதை வைத்தே இருக்கும்.

பங்குகள் சார்ந்த கலைச் சொற்கள்:

நிலுவையில் உள்ள பங்குகள் (Share Outstanding) என்பது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவை, நிறுவனத்தால் வழங்கப்பட்டவை மற்றும் மூன்றாம் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பங்குகள் ஆகும்.  நிலுவையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கை  நிறுவனத்திற்குச் சந்தை  மூலதன மதிப்பு  ஆக்கத்தை(Market Capitalization) அளிக்கிறது.

கருவூலப் பங்குகள் (Treasury shares) நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் பங்குகள்

வழங்கப்பட்ட பங்குகள் ( Issued Shares) என்பது நிலுவையிலுள்ளப் பங்குகள் மற்றும் கருவூலப் பங்குகளின் தொகை ஆகும்.

அங்கீகரிக்கப்பட்டப் பங்குகள் வழங்கப்பட்ட மற்றும் வெளியிடப்படாத பங்குகள் ஆகும். மேலும் இவை நிறுவனத்தின் அமைப்பு ஆவணங்களால் அங்கீகரிக்கப்பட்டவை.

பங்குகள் மீதான ஈவுத்தொகைக்கான வருமான வரி பிடித்தம்

[தொகு]

இந்தியாவில் பங்கு ஈவுத் தொகைகள் பங்குதாரரின் கைகளில் ரூ.10 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் முந்தைய ஆண்டிள் ஈவுத்தொகையைச் செலுத்தும் நிறுவனம், ஈவுத்தொகை விநியோக வரியை 12.5% அரசுக்குச் ​​செலுத்த வேண்டும் என்பது 1 ஏப்ரல் 2020 முதல் மாற்றப்பட்டு, ஈவுத்தொகை பெறுபவரே வருமான வரி செலுத்த வேண்டும். [5] [6]

பங்குச் சான்றிதழ்

[தொகு]

முதலீட்டாளர்களுக்குப் பங்குகளின் உரிமையின் சான்றாகப் பங்குச்  சான்றிதழ்கள் முன்பு வழங்கப்பட்டன. ஆனால் தற்போதுள்ள கணினி மயமாக்கப்பட்ட உலகில் சான்றிதழ்கள்  வழங்கப்படாது CREST அல்லது DTCC  போன்ற மத்திய பத்திர வைப்புகளில் பதியப்படுகிறது.

மேற்கோள்கள்:

[தொகு]
  1. "Share (finance) - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  2. "Share (finance) - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  3. "Share (finance) - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  4. "Share (finance) - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  5. TAX TREATMENT OF DIVIDEND RECEIVED FROM COMPANY
  6. How dividend income is taxed in India now – All you need to know