பங்குடைமை ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பங்குடமை ஓப்பந்தம் (Partnership agreement) எனப்படுவது, ஒத்த தொழில் ஒன்றைக் கொண்டு நடாத்துவதற்காக (பங்குடமை வணிகத்தில்) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பங்காளர்களுக்கிடையே மனமுவந்து ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடு ஆகும். அந்தந்த நாடுகளிலுள்ள பங்குடமைச் சட்டங்களை பின்பற்ற விரும்பாதவர்கள் இவ்வாறான ஒப்பந்தத்தினை மேற்கொள்ளுவர். இவ்வொப்பந்தத்தில் பங்காளர்களின் மூலதனம், இலாப நட்ட பிரிப்பு, தொழிலில் பங்குபற்றுவது தொடர்பிலான விடயங்கள் அடங்கியிருக்கும். ஒப்பந்தத்திலிருந்து ஒரு பங்காளர் விலகுவாராயின் ஒப்பந்தம் கலைக்கப்படும், பின் புதிதாக எழுதப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்குடைமை_ஒப்பந்தம்&oldid=1916241" இருந்து மீள்விக்கப்பட்டது