பங்குகளை வட்டத்தில் வெளியிடல்
பங்குகளை வட்டத்தில் வெளியிடல்
[தொகு]பங்குகளை அவற்றின் முக மதிப்பிற்கும் குறைத்து வெளியிடப்படுதல், பங்குகளை வட்டத்திற்கு வெளியிடுதல் என்று கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டு
[தொகு]பங்கொன்றின் முகமதிப்பு ரூ.10 எனவும், அது ரூ.8க்கு வெளியிடப்படுவதாகவும் கொண்டால், பங்கு வெளியீட்டுத் தள்ளுபடி ரூ.2 ஆகும். அதாவது வெளியீட்டு விலையினின்று முக மதிப்பைக் கழித்தால் கிடைக்கும் தொகையே பங்கொன்றின் வட்டம் அல்லது தள்ளுபடி என்பதை உணரலாம்.
பங்குகளை வட்டத்தில் வெளியிட சில நிபந்தனைகள்
[தொகு]- வட்டத்திற்கு வெளியிடவுள்ள பங்குகள் முன்னரே வெளியிட்ட பங்கு வகையைச்
சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆக, முதன்முதலில் வெளியிடும்பொழுதே ஒரு நிறுமம் தன் பங்குகளை வட்டத்தில் வெளியிடக்கூடாது. கூடுதல் முதல் திரட்ட மறுபடியும் அதே வகைப் பங்குகளை வெளியிடும்போது வட்டத்தில் வெளியிடலாம்.
- சாதாரண தீர்மானத்தின் மூலம் இதற்கு (இவ்வாறு பங்குகளை வட்டத்தில் வெளியிட)
அதிகாரம் தந்திருக்க வேண்டும்.
- இதற்கு மைய அரசின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
- நிறுமம் நிறைவேற்றிய தீர்மானத்தில் உயர்ந்தளவு தள்ளுபடி வீதம் எவ்வளவில் இருக்க
வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். பங்கு ஒன்றின் முகமதிப்பில் 10 விழுக்காடுக்கு இது மிகக் கூடாது. சில சிறப்பான சூடிநநிலைகளில், மைய அரசு இதை விடக் கூடுதல் வீதத்தில் வட்டம் அல்லது தள்ளுபடி இருக்க அனுமதி வழங்கும்.
- நிறுமம் தொழில் தொடங்க உரிமை கிடைத்த நாளிலிருந்து குறைந்தது ஓராண்டாவது
சென்றிருக்க வேண்டும்.
- மைய அரசு அனுமதித்த நாளிலிருந்து இரு மாதங்களுக்குள் பங்குளை வட்டத்தில்
வெளியிட வேண்டும்.