பங்கால் பினாங்கு
பங்கால் பினாங்கு | |
---|---|
Pin-kong Pangkalpinang Kota Pangkalpinang | |
பங்கால் பினாங்கு ஃபக் தேட் சே கோயில் வில்கெல்மினா பூங்கா எமாஸ் பாலம் ரனிர் மின் உற்பத்தி நிலையம் பத்து போலோங் கடற்கரை | |
ஆள்கூறுகள்: 2°8′S 106°7′E / 2.133°S 106.117°E | |
நாடு | ![]() |
பகுதி | சுமாத்திரா |
மாநிலம் | பாங்கா பெலிடுங் தீவுகள் |
நிறுவல் | 17 செப்டம்பர் 1757 |
அரசு | |
• மேயர் | மவுலான் அக்லில் |
பரப்பளவு | |
• மொத்தம் | 104.54 km2 (40.36 sq mi) |
ஏற்றம் | 0−13 m (−43 ft) |
மக்கள்தொகை (2022)[1] | |
• மொத்தம் | 2,26,297 |
• அடர்த்தி | 2,200/km2 (5,600/sq mi) |
மக்கள்தொகை | |
• இனக்குழுக்கள் | பாங்கா மலாயர் ஜாவானியர் பத்தாக் மக்கள், சீன மக்கள் பூகிஸ் மக்கள்[2] |
• சமயம் | இசுலாம் 83.77% பௌத்தம் 5.54% கிறிஸ்தவர் 3.90% கன்பூசியம் 3,57% கத்தோலிக்க திருச்சபை 3.18% இந்து சமயம் 0.03% வேறு 0.01%[3] |
• மொழிகள் | இந்தோனேசிய மொழி சீன மொழி மலாய் மொழி ஆங்கிலம் |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +7 |
தொலைபேசி | (+62) 717 |
வாகனப் பதிவெண்கள் | BN |
இணையதளம் | pangkalpinangkota.go.id |
பங்கால் பினாங்கு (ஆங்கிலம்: Pangkalpinang; இந்தோனேசியம்: Kota Pangkalpinang) என்பது இந்தோனேசியா, பாங்கா பெலிடுங் தீவுகள் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். பேச்சுவழக்கில் பங்கால் பினாங் என்று அழைக்கப்படுகிறது, அக்காசியா மொழியில் பின்-காங் (Pin-kong) என்றும் அழைக்கப்படுகிறது. பாங்கா பெலிடுங் தீவுகள் மாநிலத்தில் இதுவே பெரிய நகரமாகவும் அறியப்படுகிறது.
இந்த நகரம் பங்கா தீவுகளின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது; மற்றும் ஏழு மாவட்டங்களாக (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது; மற்றும் 42 கிராமங்களைக் கொண்டுள்ளது (Kelurahan).
இந்தோனேசிய மொழியில் கெச்சமத்தான் (Kecamatan) என்றால் மாவட்டம் என்று பொருள்படும்; கெலுரகான் (Kelurahan) என்றால் கிராமம் என்று பொருள்படும்.[4]
பங்கால் பினாங்கு 89.40 கிமீ2 (34.52 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது; மேலும் இதன் மக்கள் தொகை; 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 174,838 ஆகவும்;[5] 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 218,568 ஆகவும் இருந்தது;[6] 2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 226,297 ஆக இருந்தது.[1]
பொது
[தொகு]2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பங்கால் பினாங்கு நகரத்தின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி; ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 2,165 ஆக இருந்தது. ரங்குய் ஆறு இந்த நகரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. மேலும் மெர்டேகா சாலை அதன் புவியியல் மையமாக உள்ளது.
பங்கால் பினாங்கு நகரத்தின் மக்கள் தொகையில் பெரும்பாலோர் மலாய் இனத்தவர்களும்; ஹக்கா சீன மக்களும் ஆவார்கள். பத்தாக் மக்கள், பூகிஸ் மக்கள், மினாங்கபாவு மக்கள் போன்ற பிற இனக்குழுக்களின் சிறிய சமூகங்களும் உள்ளன.
வரலாறு
[தொகு]சிறீ விஜயத்தின் ஒரு பகுதியாக இருந்த போது பாங்கா பெலிடுங் தீவுகளில், இந்து மக்கள் அதிகமாக வசித்து வந்தனர். பாங்கா பெலிடுங் தீவுகள், சிறீ விஜயத்தின் ஒரு பகுதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல்; மஜபாகித் மற்றும் மாதரம் இராச்சியத்தின் ஆட்சிப் பகுதியாகவும் இருந்தது.
பன்னாட்டுக் கப்பல் வழித்தடங்களுக்கு அருகாமையில் இருந்தபோதிலும்; மற்றும் மூன்று இராச்சியங்களின் ஆளுமையின் கீழ் இருந்தபோதிலும், பங்கால் பினாங்கு நகரம், சிறிய அளவிலான கவனத்தையே பெற்றது. மேலும் ஒரு காலக் கட்டத்தில், தென் சீனக் கடலில் கப்பல்களைச் சூறையாடும் கடற்கொள்ளையர்களுக்கு மறைவிடமாகவும் மாறியது.[7]
கடல் கொள்ளை
[தொகு]மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள கப்பல் வழித்தடங்களைப் பாதுகாக்க, ஜொகூர் சுல்தானகம் பங்கால் பினாங்கிற்கு தன்னுடைய படைகளை அனுப்பியது. அங்கு ஒரு காவல்படையை நிறுவி, அப்பகுதியில் இசுலாத்தைப் பரப்பத் தொடங்கியது. இருப்பினும், கடற்கொள்ளையர்கள் விரைவில் செயல்படத் தொடங்கினர்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, கடற்கொள்ளையர்களிடம் இருந்து அந்தப் பகுதியை விடுவிக்கும் மற்றொரு முயற்சியாக, பண்டென் சுல்தான், பாங்கா பெலிடுங் தீவுகளின் கடற்கொள்ளையர்களை ஒழிக்க ஒரு பிரதிநிதியை அனுப்பினார். பண்டென் சுல்தான் அங்கு கட்டுப்பாட்டை நிலைநிறுத்தி, அவர் இறக்கும் வரை ஆட்சி செய்தார். அவர் இறந்த பின்னர், அவரின் ஒரே மகள் பாங்கா பெலிடுங் தீவுகளை ஆட்சி செய்தார்.
புவியியல்
[தொகு]பங்கால் பினாங்கு நகரத்தின் நிலப்பரப்பு; பொதுவாக மேடு பள்ளமாகவும், மலைப்பாங்கான பகுதிகளாகவும், கடல் மட்டத்தில் இருந்து 20–50 மீட்டர் (66–164 அடி) உயரத்திலும் உள்ளது. மலைப்பாங்கான பகுதிகள் முதன்மையாக மேற்கு மற்றும் தெற்கில் உள்ளன. அவற்றுள் கிரிமாயா மலை (Mount Girimaya), கடல் மட்டத்திலிருந்து 50 மீட்டர் உயரத்தில் உள்ளது; மற்றும் கோபுரக் குன்று எனும் மலைக்குன்றும் உள்ளது.
பங்கால் பினாங்கு நகரத்தின் பழைய கிராமப் பகுதியில் 290 எக்டேர் (720 ஏக்கர்) நகர்ப்புற காடு உள்ளது. உணவுப் பயிர்கள், மீன்பிடித்தல் மற்றும் வனவியல் ஆகியவற்றிற்காக 1,562 எக்டேர் (3,860 ஏக்கர்) பரப்பளவு ஒதுக்கப்பட்டு உள்ளது. தரிசு நிலம் 1,163 எக்டேர் (2,870 ஏக்கர்); மற்றும் 4,130 எக்டேர் (10,200 ஏக்கர்) நிலம் பயன்படுத்தப் படாமலும் உள்ளது. மீதமுள்ள 2,085 எக்டேர் (5,150 ஏக்கர்) சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகள் ஆகும்.
பொருளாதாரம்
[தொகு]நகரத்தின் பொருளாதாரம் வேளாண்மை பொருட்களை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலும் உணவுப் பயிர்கள், கால்நடைகள், கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்தல் மற்றும் சிறிய தோட்டங்கள் (ரப்பர், மிளகு மற்றும் தேங்காய்) அடங்கும். பங்கால் பினாங்கில் ஓர் அழகிய கடற்கரையும் உள்ளது.
காட்சியகம்
[தொகு]- பங்கால் பினாங்கு காட்சிப் படங்கள்
மேலும் காண்க
[தொகு]- இந்தோனேசிய நகரங்களின் பட்டியல்
- இந்தோனேசியாவின் பிராந்தியங்கள்
- இந்தோனேசிய நிலப் பகுதிகள்
- இந்தோனேசியாவின் மாகாணங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 2023, Kota Pangkalpinang Dalam Angka 2023 (Katalog-BPS 1102001.1971)
- ↑ Aris Ananta; Evi Nurvidya Arifin; M. Sairi Hasbullah; Nur Budi Handayani; dan Agus Pramono (2015). Demography of Indonesia's Ethnicity. Institute of Southeast Asian Studies dan BPS – Statistics Indonesia.
- ↑ "Data Penduduk Kota Pangkalpinang Berdasarkan Agama Per Semester II Tahun 2020" (pdf). www.disdukcapil.pangkalpinangkota.go.id. Archived (PDF) from the original on 2021-05-26. Retrieved 26 May 2021.
- ↑ Statistik Indonesia 2024 [Statistical Yearbook of Indonesia 2024]. Statistics Indonesia. 28 February 2024. p. 80. ISSN 0126-2912.
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ "sejarah". setdako.pangkalpinangkota.go.id. Retrieved 14 March 2025.