பங்களோ தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பங்களோ தீவு வடக்கு போஹோல் கடல் பகுதியில் உள்ள ஒரு தீவு ஆகும்.மத்திய தெற்கு பிலிப்பைன்ஸ் சார்ந்த விசயன் தீவு கூட்டத்தில் மத்திய விசய பகுதியில் அமைந்துள்ளது .

பங்களோ தீவு
பங்களோ தீவு
Philippines relief location map (square).svg

பிலிப்பீன்சுக்குள் தீவுகளின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்9°36′N 123°49′E / 9.6°N 123.82°E / 9.6; 123.82ஆள்கூறுகள்: 9°36′N 123°49′E / 9.6°N 123.82°E / 9.6; 123.82
தீவுக்கூட்டம்பிலிப்பீன்சு
பரப்பளவு94.53 km2 (36.50 sq mi)
நிர்வாகம்
பிலிப்பீன்சு
மக்கள்
மக்கள்தொகை79,216
அடர்த்தி840 /km2 (2,180 /sq mi)


புவியியல்[தொகு]

இந்த தீவின் பரப்பளவு 94.53 சதுர கிலோ மீட்டர் .போஹோல் மாகாணத்தின் இரண்டு நகராட்சியை கொண்டுஉள்ளது அவை டேவிஸ் மற்றும் பங்களோ நகராட்சிகள்.தீவின் நிலப்பகுதி சமவெளி மற்றும் மலைகளை கொண்டு இருக்கிறது.மாறிபோஜா வகை சுண்ணாம்புக்கற்கள் இங்கு காணப்படுகிறது போஹோல் பகுதியின் மேற்கு திசையில் இளைய சுண்ணாம்புக்கற்கள் அமைந்து இருக்கிறது .இங்கு காணப்பட்ட சுண்ணாம்புக்கற்கள் பொதிவு மற்றும் முருகையுருப்பிராணி சுண்ணாம்புக்கற்கள் கரையத்தக்க தன்மை உள்ளவை ஆகையால் குகைகள் மற்றும் சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளம் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளமையால் இங்கு அமையவிருந்த விமான நிலையம் சார்ந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தீவின் மக்கள் தொகை 79,2016 ஆகும். இந்த தீவு பிலிப்பைன்ஸ் நாட்டின் உள்ள ஒரு பிரபலமான பயண இலக்கு ஆகும் .மேலும் கட்-அங், போண்டோட், பாலிகாசாகி போன்ற குருந்தீவுகளை கொண்டுள்ளது.மேலும் இங்கு ஒரு சுவாரிஸ்யமான புவிசார் சிறப்பியல்பு இங்குள்ள ஹினக்தானேன் குகை அங்குல நீராதாரம் நிலமட்டத்திற்கு கீழே அமைந்துள்ளது.இந்த தீவில் ஆறு மற்றும் குளங்கள் இல்லாததால் இக்குகையின் நீராதாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

வரலாறு[தொகு]

பங்களோ தீவு சீன ,மலாய் ,சியாம் மற்றும் இந்தோனேசியா வர்த்தகர்கள் வாணிபம் செய்த பகுதிகளில் ஒன்று ஆகும் .உலகளவில் தலைசிறந்த குடற்காலி இங்கு காணப்படுகிறது .

பல்லுயிர்ப்பெருக்கம்[தொகு]

2004ஆம் ஆண்டு பங்களோ கடல்வாழ் பல்லுயிர்பெருக்கம் திட்டம் தொடங்கப்பட்டது.இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 250 வகையான ஓடுடைய இனங்கள் இவை மிகவும் கடினமான ஓட்டை தமது புறவன்கூடாகக் கொண்ட, கணுக்காலிகளாகும்.மேலும் 2500 வகையான மெல்லுடலிகள் எனப்படும் மிக மெலிதான ஓடுகளைக் கொண்ட விலங்கினங்கள் கண்டறியப்பட்டன.ஜப்பான் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை விட அதிகளவிலான கடல்வாழ் பல்லுயிர்பெருக்கம் இங்கு காணப்படுகிறது.

சுற்றுலா[தொகு]

பங்களோ தீவு , பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு முக்கிய சுற்றுலா இலக்கு ஆகும் . இங்கு உள்ள அலோனா கடற்கரை அதன் மிக அழகான வெள்ளை மணல் மற்றும் தெளிந்த நீரும் சுற்றுலா பயணியர் வருகைக்கான முக்கிய காரணங்கள் ஆகும்.இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நீரசாகச விளையாட்டு உபகரணங்கள் ,மீன் பிடித்தல் ,அலைச்சறுக்கு,மூச்சுவிடு அமைப்புடன் நீரில்குதித்தல்,நீரடி காற்றுவழங்கி துணைகொண்டு கடலாழத்தில் உள்ள உயிரினங்களை ரசிக்கலாம், ஒவாய் கடற்பன்றி அருகில் பார்க்கும் வாய்ப்பும் உள்ளது .

பொருளாதாரம்[தொகு]

இந்த தீவு அதிகஅளவில் மணற்பரப்பை கொண்டு உள்ளபோதும் இங்குள்ள மக்கள் சிறிய அளவிலான பண்ணைகளை உருவாக்கி உள்ளனர் .இங்கு தென்னை ,சோளம், வாழை , மாமரம் மற்றும் கோழிகளை வளர்க்கின்றனர் இவற்றை அருகில் உள்ள நகரங்களில் விற்று தங்கள் வருமானத்தை பெருகுகின்றன .மேலும் இந்த தீவு அமைந்து இருக்கும் கடற்பகுதி சிறந்த மீன் பிடி பகுதியாக திகழ்கிறது .

போக்குவரத்து[தொகு]

இந்த தீவில் 2018 ஆம் ஆண்டு முதல் ஒரு சர்வதேச விமான நிலைய செயல் பட உள்ளது .

மதம்[தொகு]

இங்கு இருக்கும் மக்களில் பெரும் பகுதியானவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தை பின்பற்றுகின்றனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்களோ_தீவு&oldid=3290946" இருந்து மீள்விக்கப்பட்டது