பங்கங்கா நதி
பாணகங்கா ஆறு (Banganga River) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் பாயும் காம்பிர் ஆற்றின் துணை ஆறாகும். 240 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஆறு செய்ப்பூர் பகுதியில் உள்ள அரன்சர் மற்றும் பைரத் (விராட் நகர்) மலைகளில் இருந்து உருவாகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் பதேகாபாத்து அருகே யமுனை ஆற்றுடன் இணைகிறது.[1][2] வலது கரையில் கும்தி நல்லா மற்றும் சூரி ஆறும், இடது கரையில் சன்வான் மற்றும் பலசான் ஆறுககும் இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.[2] பாண்கங்காவின் துணை ஆறான சன்வான், டில்டா நதியுடன் இணைந்து பிறகு பாணகங்கா ஆற்றுடன் இணைகிறது. அதன் பின்னர் இது கம்பீர் ஆற்றுடன் சேர்ந்து உத்தரபிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் யமுனையுடன் சேர்கிறது. இறுதியாக, பிரயாக்ராச்சில் உள்ள திரிவேணி சங்கமத்தில் யமுனை, கங்கை ஆற்றுடன் சங்கமிக்கிறது.[3][4][5]
ஆற்றுப் படுகையில் 596 மிமீ மழைவீழ்ச்சி உள்ளது. இதில் 95% மழை சூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு பருவமழை மாதங்களில் விழுகிறது.[2]
ஆற்றுப் பள்ளத்தாக்கு
[தொகு]இராசத்தானின் அல்வர், செய்ப்பூர், தௌசா, சவாய் மாதோபூர் மற்றும் பரத்பூர் மாவட்டங்களில் உள்ள 2,473 நகரங்கள் மற்றும் கிராமங்களைக் கொண்ட 30 சமூக மேம்பாட்டுத் தொகுதிகளை இதன் வடிகால் பகுதி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உள்ளடக்கியுள்ளது. பாணகங்கா ஆறானது கும்தி நாலா, சூரி ஆறு, பலசான் மற்றும் சன்வான் ஆகிய துணை ஆறுகளையும் கொண்டுள்ளது. செய்ப்பூரில் இந்த ஆற்றின் குறுக்கே ஜம்வா ராம்கர் அணை கட்டப்பட்டுள்ளது.[1]
முக்கிய துணை ஆறுகள்
[தொகு]வலது கரை துணை ஆறுகள்
[தொகு]- கும்டி நல்லா
அட்சரேகைகள் 25°00'30" மற்றும் 25°53' மற்றும் தீர்க்கரேகைகள் 75°52' மற்றும் 76°01' என்ற புவியியல் அடையாளக் கூறுகளில் செய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பைம்புரா கிராமத்திற்கு அருகில் கும்டி நல்லா உருவாகி தாலோ கிராமத்திற்கு அருகில் பாணகங்காவுடன் சங்கமிக்கிறது. 24 கிமீ நீளம் கொண்ட இத்துணை நதி 102 சதுர கிமீ நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது.[2]
- சூரி ஆறு
அட்சரேகைகள் 26°44' மற்றும் 26°53' மற்றும் தீர்க்கரேகைகள் 76°25' மற்றும் 76°30' என்ற புவியியல் அடையாளக் கூறுகளில் தௌசா மாவட்டத்தின் கான்சிட்டு கிராமத்தின் மலைகளில் உருவாகிறது. வடக்கே 18 கி.மீ பாய்ந்து பின்னர் வடகிழக்கில் மேலும் 10 கி.மீ அங்கு பாணகங்கா கயிலையுடன் சங்கமிக்கிறது.[2]
இடது கரை துணை ஆறுகள்
[தொகு]- சன்வான் ஆறு
அட்சரேகைகள் 26°59' மற்றும் 27°22' மற்றும் தீர்க்கரேகைகள் 76°16' மற்றும் 76° 46' என்ற புவியியல் அடையாளக் கூறுகளில் ஆல்வார் மாவட்டத்தின் ஆங்கிரி கிராமத்தின் மலைகளுக்கு அருகில் உருவாகி 29 கிமீ தெற்கே சிர்சா தேவி பண்ட் வரை பாய்கிறது. பின்னர் 66 கிமீ கிழக்கில் பாய்ந்து பாணகங்காவுடன் சங்கமிக்கிறது.[2]
- பலாசான் நதி
அட்சரேகைகள் 27°02' மற்றும் 27°18' மற்றும் தீர்க்கரேகைகள் 76°25' மற்றும் 76°49' என்ற புவியியல் அடையாளக் கூறுகளில் அல்வார் மாவட்டத்தின் ராச்புரா கிராமத்தின் மலைகளில் உருவாகிறது. தென்கிழக்கில் 24 கிமீ தொலைவும் கிழக்கில் மற்றொரு 24 கிமீ தொலைவும் பாய்கிறது. பின்னர் இந்தியானா கிராமத்திற்கு அருகில் பாணகங்காவுடன் சங்கமிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Banganga River basin, PHED Rahasthan, accessed 22 July 2021.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Banganga River bin Rajasthan, Gangakosh, accessed 22 July 2021.
- ↑ Tiwari, Arun (2006). Arvari Sansad. Tarun Bharat Sangh (TBS).
- ↑ Singh, Rajendra (2014). Sikhti Sikhati Arvari Nadi. TBS.
- ↑ Patel, Jashbhai (1997). STORY OF RIVULET ARVARI (From DEATH TO REBIRTH). TBS.