பக் கோதுமை (பேகோபைரம் எளிகுலண்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பக் கோதுமை[தொகு]

இது ஒரு தானியப் பயிர். உணவுக்காகவும், களைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய போர்வைப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இது ஒரு கோதுவை இன வகையைச் சார்ந்தது. ( பேஃகோபைரம் டாடாரிக்கம்). இது புல்வகையும் அல்ல. ஆதே சமயத்தில் வழக்கமான கோதுமையை சார்ந்ததும் அல்ல. இது களைச் செடியைப் போன்றது. (ளுடிசசநன) அதிக மக்களால உண்ணப்படுகிறது. ஏனெனில் இதன் விதைகளில் அதிகமான கூட்டுப்புரதங்கள் அடங்கி உள்ளன. இதன் விதைகள் முக்கோண வடிவத்தில் இருக்கும். கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன்பே தென்கிழக்கு ஆசியாவில் சாகுபடி கொண்டுவரப்பட்டது. ஜப்பானில் கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பரவல் 2006 ஆண்டுகள் முடிந்துவிட்டதாக அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் மாவானது நவராத்திரி விழாக் காலங்களில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து பல்வேறு உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன. இது குறைந்த மண்வளம், அமிலத்தன்மை கொண்ட மண்ணில் குறுகிய காலங்களில் நன்றாக வளர்கிறது. இது ஒரு குளிர்காலப் பயிர், பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெற்று அதிக மகசூலைத் தருகிறது. இது மண் அரிப்பை தடுப்பதற்கும், பசுந்தாள் உரங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.