பக்ரா யூனுசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்ரா யூனுசு (Fakhra Younus) அமிலத் தாக்குதலுக்கு பலியான பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணாவார். இத்தாக்குதலின் விளைவாக இவரது முகம் கடுமையான காயங்களுக்கு உட்பட்டது. 10 ஆண்டு கால, காலப்பகுதியில் இவர் 39 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். 1979 ஆம் ஆண்டு பிறந்த இவர் 33 வயதில் 2012 ஆம் ஆண்டு ஆண்டு மார்ச்சு மாதம் 17 ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார்.

சுயசரிதை[தொகு]

பாக்கித்தானில் ஒரு சிவப்பு விளக்கு மாவட்டத்தில் பக்ரா யூனுசு ஒரு நடனக் கலைஞராக இருந்தார் [1] தனது வருங்கால கணவரும் குலாம் முசுதபா காரின் மகனுமான பிலால் காரைச் சந்தித்தார். அவர் பாக்கித்தானின் மிகப்பெரிய மாகாணமான பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் முதல்வருமாவார். இவர்கள் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன போது கணவர் தன்னை உடல் ரீதியாகவும் வாய்மொழியாகவும் துன்புறுத்தியதாக கூறி பக்ரா யூனுசு அவரை விட்டு வெளியேறினார். பின்னர் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் தன்னைச் சந்திக்க வந்து தனது 5 வயது மகனின் முன்னிலையில் அமிலத்தை முகத்தின் மேலே ஊற்றினார் என்று புகார் கூறினார்.

பக்ரா யூனுசை தாக்கியவர் தானல்ல என்றும் தனது பெயருடன் வேறு யாரோ வந்து தாக்கியுள்ளார் என்றும் பிலால் கார் மறுத்துக் கூறினார். இந்த சம்பவத்தின் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் பிலால் விடுவிக்கப்பட்டார். பிலால் காரின் மாற்றாந்தாய் தெக்மினா துராணி பக்ரா யூனுசை சிகிச்சைக்காக இத்தாலியின் ரோம் நகருக்கு அனுப்பி வைத்தார். [2] ஆரம்பத்தில் பக்ரா யூனுசுக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால் மக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இத்தாலிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். துராணி பக்ரா யூனுசுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு இத்தாலிய ஒப்பனை நிறுவனமான புனித ஏஞ்சலிக் மற்றும் இத்தாலிய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டார். சிதைந்த பெண்களின் பராமரிப்பிற்கு உதவுவதற்காக கிளாரிசு பெல்லியின் என்ற இத்தாலிய அரசு சாரா நிறுவனத் தலைவர் பாக்கித்தானுக்குள் நுழைந்தார். [3]

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து பக்ரா யூனுசு தற்கொலை செய்து கொண்டார். உடல் துராணியால் பாக்கித்தானுக்குக் கொண்டு வரப்பட்டது. இத்தாலிய மற்றும் பாக்கித்தான் கொடிகளால் இவர் உடல் போர்த்தப்பட்டது. யூனுசின் இறுதிப் பிரார்த்தனை கரடாரில் உள்ள எத்கி இல்லத்தில் நடைபெற்றது. பாக்கித்தானின் கராச்சியில் [4] இருக்கும் பாதுகாப்பு பகுதியில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். [5]

விளைவு[தொகு]

இவரது தாக்குதல், விசாரணை மற்றும் தற்கொலை செயல்பாடுகள் சர்வதேச நாடுகளின் கவனத்தைப் பெற்றது. மேலும் பாக்கித்தானில் அமிலத் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் அவல நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தது. 2007 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நாட்டில் 1,375 அமிலத் தாக்குதல்கள் நடந்தன; [6] அல்லது ஆண்டுக்கு 153 தாக்குதல்கள் என்றும் கூறலாம். இருப்பினும் 56% மட்டுமே உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களாவர். ஆண்டுக்குகு 85 பெண்கள் என்றும் இதை கூறலாம். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 2012 ஆம் ஆண்டு ஆவணப்படமான சேவிங் பேசு பட்டத்தில் இவர் நடித்தார், தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நாட்டின் முதல் ஆசுகார் விருதை இவர் பெற்றார். [1] [7] [8] [9] பக்ரா யூனுசு எழுப்பிய விழிப்புணர்வின் விளைவாக, அமிலத் தாக்குதல்கள் தொடர்ந்து சிறிது சிறிதாக வீழ்ச்சியடைந்தன. [10]

"2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 71 அமிலத் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அமிலம் வீசுதல் தொடர்பாக 62 வழக்குகள் போடப்பட்டன.[10] கூடுதலாக, பெண்களுக்கு சமீபத்திய பாதுகாப்பு வசதிக்காக பாதுகாப்பு மற்றும் எரிதல் குற்ற மசோதா உட்பட பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் உடல் மற்றும் உளவியல் குறைபாடுகளை எதிர்கொள்ளும் பெண்கள் இதனால் பயனடைகின்றனர்.[10] பக்ரா யூனுசு பங்கேற்று நடித்த திரைப்படம் அத்தகைய சட்டத்தை முன்வைத்துதான் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Pakistani former dancing girl who was attacked with acid commits suicide". 28 March 2012."Pakistani former dancing girl who was attacked with acid commits suicide". 28 March 2012.
  2. Lahore, HANNAH BLOCH (20 August 2001). "The Evil That Men Do". Archived from the original on May 5, 2007 – via www.time.com.
  3. Fakhra: shunned in life, embraced in death பரணிடப்பட்டது மார்ச்சு 26, 2012 at the வந்தவழி இயந்திரம்
  4. Amnesty International Document – Pakistan: Insufficient protection of women
  5. "The News International: Latest News Breaking, Pakistan News". Archived from the original on 2012-03-25.
  6. Hassan Abbas (February 28th, 2018). In Pakistan, Acid Attacks Decrease But Challenges Remain. Media Matters for Democracy. Archived. Retrieved February 18th, 2020.
  7. "Fakhra Younus Dead: Pakistani Acid Victim Commits Suicide", Sebastian Abbot, Huffington Post, March 28 2012
  8. ""Prominent Pakistani Acid Victim Commits Suicide", National Public Radio/The Associated Press, March 28, 2012". Archived from the original on மார்ச் 29, 2012. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 8, 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  9. ""Prominent Pakistani acid victim Fakhra Younus commits suicide"".
  10. 10.0 10.1 10.2 10.3 Pakistan: Cases of acid attacks on women drop by half. August 4th, 2019. Gulf News. Archived. Retrieved February 18th, 2020.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்ரா_யூனுசு&oldid=3561357" இலிருந்து மீள்விக்கப்பட்டது