பக்த நந்தனார் (1935 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்த நந்தனார்
இயக்கம்மணிக்லால் டாண்டன்
தயாரிப்புஹசன்தாஸ் கிளாசிக்கல் டாக்கீஸ்
நடிப்புகே. பி. சுந்தராம்பாள்
மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
வெளியீடு1935
நாடு இந்தியா
மொழிதமிழ்

பக்த நந்தனார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹாலிவுடில் பயிற்சி பெற்ற மணிக்லால் டாண்டன் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.[1][2][3][4][5][6]

திரைக்கதை[தொகு]

கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

சில துணுக்குகள்[தொகு]

நந்தனார் திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாள், மகாராஜபுரம் விசுவநாத ஐயர் தோன்றும் காட்சி
  • பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் சுந்தராம்பாள் மட்டும் 19 பாடல்களைப் பாடியிருந்தார்.
  • அக்காலத்தில் கருநாடக இசையில் மிகவும் புகழ்பெற்றிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும்.[1]
  • இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் தற்போது கிடைப்பதற்கில்லை.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]