பக்த் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்த் கான் யூசுப்சாய்
பிறப்பு1797[1]
பிஜ்னோர், ரோகில்கண்ட், முகலாயப் பேரரசு[1]
இறப்பு1859[1]
தெராய், நேபாளம்[2]
பணிபிரிட்டிசு கிழக்கிந்திய கம்பெனியின் சுபேதார், முகலாய பேரரசரின் கீழ் இந்திய சுதந்திர போராளிகளின் தளபதி[1]
அறியப்படுவதுஇந்தியன், சுதந்திரப் போராளி

பக்த் கான் (Bakht Khan) (1797-1859) இவர் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக 1857 ஆம் ஆண்டு இந்திய கிளர்ச்சியின் போது தில்லி பிராந்தியத்தில் இந்திய கிளர்ச்சிப் படைகளின் தளபதியாக இருந்தார். [1] [2]

வாழ்க்கை கதை[தொகு]

பக்த் கான் தனது தந்தைவழியில் ரோகில்லா பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் அயோத்தியின் இளவரசியாவார். [3] [4] வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடமேற்கு பகுதியான ரோகில்கண்டில் உள்ள பிஜ்னோரில் பிறந்த இவர் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் தலைமை அதிகாரியாக இருந்தார். வங்காள குதிரைப் படையில் நாற்பது வருட அனுபவத்தைப் பெற்றிருந்தார். மேலும் முதல் ஆங்கிலேய-ஆப்கான் போர் நடவடிக்கைகளில் பங்கேற்றார் . [2] .

கிளர்ச்சிக்கு முன்னர் சுபேதார் பக்த் கான் 1857இல் தில்லி முற்றுகையின்போது இவருக்கு எதிராக பணியாற்றவிருந்த பலர் உட்பட பல பிரிட்டிசு அதிகாரிகளுக்கு நன்கு அறிமுகவானர். ஒரு கர்னல் இவரை "மிகவும் புத்திசாலித்தனமானவர்" என்று விவரித்தார். இவர் "ஆங்கில சமுதாயத்தை" மிகவும் விரும்பினார்". [5]

கிளர்ச்சி[தொகு]

1857 ஆம் ஆண்டின் இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி தொடங்கியது, சிப்பாய்களின் ஒரு குழு பன்றிக்கொழுப்பு தடவப்பட்டதாகக் கூறப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களை அறிமுகப்படுத்தியதற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது. பன்றியின் இறைச்சியை இஸ்லாத்தில் சாப்பிட அனுமதிக்காததால் முஸ்லீம் வீரர்களை புண்படுத்தியது. இது சைவ உணவு உண்ணும் இந்து வீரர்களையும் புண்படுத்தியது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் எழுச்சி வேகமாக பரவியது. [2] [6]

பரேலியில் கலகம் வெடித்தவுடன், சுபேதார் பகதூர் கான் சம்பந்தப்பட்ட சிப்பாய்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீரட்டில் நடந்த கிளர்ச்சி குறித்து பக்த்கான் கேள்விப்பட்டதும், முகலாய பேரரசர் பகதூர் சா சாபரின் இராணுவத்தை ஆதரிப்பதற்காக தில்லிக்கு செல்ல முடிவு செய்தார். 1857 சூலை 1 ஆம் தேதி பக்த்கான் தில்லிக்கு வந்தபோது, ஏராளமான ரோகில்லா சிப்பாய்களுடன், நகரம் ஏற்கனவே கிளர்ச்சிப் படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. முகலாய ஆட்சியாளர் பகதூர் சா சாபர் இந்தியப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். [2] பக்த் கான் தலைமையிலான பரேலி படைப்பிரிவில் வங்காள பூர்வீக காலாட்படையின் நான்கு படைப்பிரிவுகள், குதிரைப்படை ஒன்று மற்றும் பீரங்கி படைகள் ஆகியவை இருந்தது. இந்த கணிசமான எண்ணிக்கையிலான படைபலத்தால் தில்லியை முற்றுகையிட்ட ஆங்கிலேயர்களைக் கலங்கடித்தது. மேலும் பகதூர் சா சாபரைக் கவர்ந்தது. பேரரசரை சந்திக்க பக்தும் இவரது அதிகாரிகளும் விரைவாக வரவழைக்கப்பட்டனர். [7]

மிர்சா சாகீருதீன் என்றும் அழைக்கப்படும் பேரரசரின் மூத்த மகன், மிர்சா முகலால், , தலைமைத் தளபைதியாக் இருந்தார். ஆனால் அவருக்கு இராணுவ அனுபவம் இல்லை. புதிதாக மீட்டெடுக்கப்பட்ட முகலாய வம்சம் ஏற்கனவே நகரத்தில் உள்ள சிப்பாய்களிடையே கொள்ளை மற்றும் ஒழுக்கமின்மை பிரச்சினைகளை எதிர்கொண்டது. [8] பக்த்கான் தனது படைகளுடன் தில்லிக்கு வந்த தருணம் இது. அவரது வருகையால், தலைமை நிலை மேம்பட்டது. பக்த்கானின் நிர்வாக திறன்கள் விரைவாகத் தெரிந்தன. மேலும் பேரரசர் இவருக்கு உண்மையான அதிகாரத்தையும் சாகேப்-இ-ஆலம் பகதூர் அல்லது தலைமை ஆளுநர் என்ற பதவியை கொடுத்தார். மிர்சா சாகிருதீன் தளபதியாக இருந்தபோதிலும் கான் சிப்பாய் படைகளின் மறைமுகத் தளபதியாக இருந்தார். [2]

தில்லி 1857 சூன் 8 அன்று முற்றுகையிடப்பட்டது. செப்டம்பர் 14 அன்று, ஆங்கிலேயர்கள் காஷ்மீர் வாயிலைத் தாக்கினர். பகதூர் சா 1857 செப்டம்பர் 20 அன்று பக்த்கானின் வேண்டுகோளுக்கு எதிராக ஆங்கிலேயர்களிடம் சரணடைவதற்கு முன்பு உமாயூனின் கல்லறைக்கு ஓடிவிட்டார். பின்னர், பேரரசர் கைது செய்யப்பட்டார். பிரிட்டாசார் முன்னிலையில் முகலாய இளவரசர்கள் தூக்கிலிடப்பட்டனர். [2] [9]

பக்த்கான் தில்லியை விட்டு வெளியேறி லக்னோ மற்றும் ஷாஜகான்பூரில் கிளர்ச்சிப் படைகளுடன் சேர்ந்தார். [1] பின்னர், பகதூர் சா சாபர் மீது தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு யங்கோனுக்கு நாடுகடத்தப்பட்டார். அங்கு அவர் 1862இல் இறந்தார். [6] [9]

இறப்பு[தொகு]

தில்லியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, கலகத்தின் கடைசி காலத்தில் ஆங்கிலேயர்களால் அவர் படுகாயமடைந்தார். அதன்பிறகு 1859 இல் நேபாளத்தின் தெராய் சமவெளியில் இறந்தார்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Profile of Bakht Khan on GoogleBooks Retrieved 1 January 2018
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Bakht Khan: shrouded by the sands of time The Express Tribune (newspaper), Published 27 January 2011, Retrieved 1 January 2018
  3. Hussain, Sayyid Mahdi. Bahadur Shah II and the war of 1857. பக். 230. 
  4. William, Dalrymple. The last Mughal : the fall of a dynasty, Delhi, 1857. பக். 284. 
  5. Dalrymple, William. The Last Mughal. பக். 285. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7475-8726-2. https://archive.org/details/lastmughalfallof0000dalr/page/285. 
  6. 6.0 6.1 Time check: British India War of independence Dawn (newspaper), Published 17 December 2011, Retrieved 1 January 2018
  7. David, Saul (2003). The Indian Mutiny. பக். 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-141-00554-8. https://archive.org/details/indianmutiny18570000davi. 
  8. Dalrymple, William. The Last Mughal. பக். 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7475-8726-2. https://archive.org/details/lastmughalfallof0000dalr/page/287. 
  9. 9.0 9.1 Time check: British India: Bahadur Shah Zafar Dawn (newspaper), Published 6 January 2012, Retrieved 1 January 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த்_கான்&oldid=3583411" இருந்து மீள்விக்கப்பட்டது