பக்தி யூதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்தி யூதத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம்.

பக்தி யூதம் (Hasidism /Hasidic Judaism, எபிரேயம்: חסידות‎) என்பது ஒரு யூத சமயப்பிரிவு ஆகும். இது ஆன்மீக இயக்கமாக எழுச்சி பெற்று, சமகால மேற்கு உக்ரைனில் 18-ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பரவியது. இன்று அமெரிக்க ஐக்கிய நாடு, இசுரேல், பிரித்தானியா ஆகிய இடங்களில் முக்கியமாக அங்கீகரிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இதன் நிறுவுநராகவும் பிதாவாகவும் இஸ்ரேல் பென் எலியேசர் காணப்படுகிறார்.[1] தற்கால பக்தி யூதம் நெறி வழுவா ("பக்தி ") யூதத்தினுள் ஒரு துணைக்குழுவாக உள்ளதோடு, அதனுடைய சமய பரிபாலனத்திற்காகவும் சமூகத் தனிமைப்படுத்தலுக்காகவும் அறியப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. "Orthodox Judaism: Hasidism". http://www.jewishvirtuallibrary.org/jsource/Judaism/Hasidism.html. பார்த்த நாள்: 13 அக்டோபர் 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hasidic Judaism
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_யூதம்&oldid=3554582" இருந்து மீள்விக்கப்பட்டது