பக்தி குல்கர்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்தி குல்கர்னிBhakti Kulkarni
நாடுஇந்தியா
பிறப்பு1992 மே 19
கோவா, இந்தியா
தலைப்புகிராண்டு மாசுட்டர் (2012)

பக்தி குல்கர்ணி (Bhakti Kulkarni) என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார் [1]). கோவாவைச் சேர்ந்த இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் பிறந்தார். 2012 ஆம் ஆண்டு இவர் ஒரு பெண்கள் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆனார் [2].

வாழ்க்கை வரலாறு[தொகு]

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் குல்கர்னி வெற்றி பெற்றார் [3].. 2013 இல் செக் குடியரசின் விசோனியாவில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தார் [4].. 2016 ஆம் ஆண்டிலும் ஆசிய பெண்கள் சதுரங்கச் சாம்பியன் பட்டத்தை இவர் வெற்றி கண்டார் [5].

2009, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய குழு சாம்பியன் பட்டப் போட்டியில் இந்திய அணியின் சார்பாக குல்கர்னி கலந்து கொண்டு விளையாடினார். 2009 ஆம் ஆண்டு தனிநபர் பிரிவில் மட்டும் வெண்கலப் பதக்கத்தை இவர் கைப்பற்றினார் [6].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_குல்கர்ணி&oldid=2959880" இருந்து மீள்விக்கப்பட்டது