பக்டீரியா இலைவெளிறல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பக்டீரியா இலைவெளிறல்(Bacteria leafblight) எனப்படுவது நெல்லில் தாக்கும் ஒரு நோய் ஆகும். நோய்காரணி சாந்தோமோனசு ஒறைசே (Xanthomonus orizae) எனும் பக்டீரியா. இந்நோய் பெரும்பாலும் நாற்று நட்டு 3-4 வாரங்களிலிருந்து தோன்றும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறிப் பின் வெளிறியது போர் மாறும்.

நோய்த்தாக்கம்[தொகு]

  • ஆரம்ப நிலையில் இலேசான பச்சைநிற நீர்க்கசிவு அல்லது மஞ்சள் நிறக் கசிவு இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றும்.
  • நுனிப்பகுதியிலிருந்து தாக்கம் இலையுறை வரைப் பரவும். இலைப்பரப்பு கருகிய திட்டுக்களாக மாறும்.இலைப்பரப்பு விரலால் தடவும் போது கரடுமுரடாகக் காணப்பபடும்.

நோய் பரவும் முறை[தொகு]

  • முதல் போகத்தில் எஞ்சிய தாவரப் பாகங்களில் நோய்க்காரணியின் வித்திகள் காணப்படும்.
  • காற்று நீர் மூலமும் பரவும்.
  • நாற்றின் சேதமடைந்த வேரிலிருந்துதம் வித்திகள் பரவும்.