பக்க விளைபொருள்
Appearance
யாதாயினுமொரு பொருளின் உற்பத்திச் செயன்முறையின் போது அல்லது ஒரு வேதியியல் தாக்கச்செயற்பாட்டின் போது அதன் இடைநடுவில் அல்லது முடிவில் தோன்றும் முதன்மை உற்பத்திப்பொருள் அல்லாத ஏனைய விளைபொருள்கள் பக்கவிளைபொருள்கள் எனப்படும். பக்கவிளைபொருள்கள் பயன்பாடுடையாதாகவோ, சந்தைப் பெறுமதி கொண்டதாகவோ அல்லது பயனற்ற கழிவாகவோ இருக்கலாம்.
அனைத்துலக சக்தி முகவரகம (International Energy Agency) வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு வரைவிலக்கணத்தில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுகின்றது.[1]
- ... முதன்மை உற்பத்தி, துணை உற்பத்தி (முதன்மை உற்பத்திக்கு நிகரான வருமானத்தை தருவது) பக்கவிளைபொருள் (சிறிதளவு வருமானத்தைத் தருவது), கழிவு உற்பத்தி (மிகச்சிறிய வருமானம் அல்லது வருமானம் தராதது).
சில பக்க விளைபொருள்கள்
[தொகு]விலங்கு மூலம்
[தொகு]- குருதி உணவு- விலங்குகள் அறுக்கும் மடுவங்களில் உற்பத்தியாக்கப்படுவது.
- இறக்கைகள்- கோழி முதலான பறவைகள் அறுக்கப்படுதல்
- விலங்கு உரம்- விலங்கு வளர்ப்பின் போது
தாவர மூலங்கள்
[தொகு]- குருனல், தவிடு - தானியங்கள் உமி நீக்கப்படும் போது
- வைக்கோல்- தானிய அறுவடையின் போது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BIOMITRE Technical Manual, Horne, R. E. and Matthews, R., November 2004" (PDF). Archived from the original (PDF) on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-30.