பக்கோவைட்டு
Appearance
பக்கோவைட்டுBukovite | |
---|---|
![]() பக்கோவைட்டு: இரண்டு சிவப்பு புள்ளிகளாக சாம்பல் பழுப்பு மணிகள் காட்டப்பட்டுள்ளது. | |
பொதுவானாவை | |
வகை | செலீனைடு கனிமம்-பக்கோவைட்டு குழு |
வேதி வாய்பாடு | Tl2(CuFe)4Se4 |
இனங்காணல் | |
நிறம் | சாம்பல் பழுப்பு |
படிக அமைப்பு | நாற்கோணம் |
பிளப்பு | தனித்துவம்/நன்று: {001} இல் சரி பிளவு {100} இல் ஒழுங்கற்றது |
மோவின் அளவுகோல் வலிமை | 2 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 7.40 (கணக்கிடப்பட்ட்து) |
மேற்கோள்கள் | [1][2] |
பக்கோவைட்டு (Bukovite) என்பது Tl2Cu3FeSe4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரிய செலீனைடு கனிமமாக இது கருதப்படுகிறது. கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் நாற்கோண படிகமாக இது படிகமாகிறது [1]. 1971 ஆம் ஆண்டு செக் குடியரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மொராவியா [2] பகுதியிலுள்ள பக்கோவ் யுரேனியம் சுரங்கத்தில் இக்கனிமம் முதன் முதலாக கண்டறியப்பட்டது. சுவீடன், பிரான்சு, அர்கெந்தினா [1]போன்ற நாடுகளின் சில பகுதிகளிலும் காணப்படுவதாக அறியப்படுகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பக்கோவைட்டு கனிமத்தை Bko[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 http://www.mindat.org/min-797.html Mindat
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.