பக்கூ விலங்குக் காட்சிச்சாலை
![]() பக்கூ விலங்குக் காட்சிச்சாலை வாயில் | |
திறக்கப்பட்ட தேதி | 1928 |
---|---|
இடம் | பக்கூ, அசர்பைஜான் |
பரப்பளவு | 4.25 ha (10.5 ஏக்கர்கள்) |
அமைவு | 40°23′35″N 49°50′56″E / 40.3930°N 49.8490°Eஆள்கூறுகள்: 40°23′35″N 49°50′56″E / 40.3930°N 49.8490°E |
விலங்குகளின் எண்ணிக்கை | 1200 |
உயிரினங்களின் எண்ணிக்கை | 168 |
பக்கூ விலங்குக் காட்சிச்சாலை (Baku Zoo, அசர்பைஜான்: [Bakı zooloji parkı] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்பது பக்கூவில் அமைந்துள்ள அரச விலங்கியல் பூங்கா ஆகும். 1928 இல் திறக்கப்பட்ட இது அசர்பைஜான் நாட்டின் மிகப் பழைய விலங்குக் காட்சிச்சாலை ஆகும். இது அசர்பைஜான் கலாச்சார, உல்லாசத்துறை அமைச்சுக்கும் பக்கூ நகரின் மாநகராட்சிக்கும் சொந்தமானதாகும். அவ் விலங்குக் காட்சிச்சாலை 4.25 எக்டேர்கள் (10.5 ஏக்கர்கள்) பரப்பைக் கொண்டுள்ளது.[1]
தோற்றம்[தொகு]
1928 ஆம் ஆண்டு, இச்சாலைத் தொடங்கப்பட்டது. இரசிய மார்க்கசிய ஆதரவாளரான அனடோலி லூனாசார்சுகி (உருசிய மொழி: Анато́лий Лунача́рский) பெயரை முன்பு பெற்றிருந்தது. தற்போது, நிசாமி (பாரசீக மொழி:ظامی گنجوی) பெயருடன் விளங்குகிறது. இளஞ்சிவப்பு பூநாரையின் உருவமானது, இக்காட்சிசாலையின் இலச்சினையாக 1990களில் முதன்முதலாக வந்தது. இங்குள்ள குடிமக்கள், ஒரு காயமடைந்த, இறக்கும் தருவாயில் இருந்த, ஒரு பூநாரையைக் கொண்டுவந்தனர். இச்சாலையின் பணியாளர்கள், அப்பொழுது புகழ்பெற்ற தலைமை கால்நடை மருத்துவரான சின்கிசு சுல்டானாவிடம் ( Chingiz Sultanov) கவனிக்கும் படி, அந்நாரையை ஒப்படைத்தனர். அதனால் தற்போது. 28 பூநாரைகள் இச்சாலையில் உள்ளன.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ В бакинском зоопарке будет увеличена площадь вольеров для хищников
- ↑ "Баку зоопарк". 2016-09-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
வெளி இணைப்பு[தொகு]
பொதுவகத்தில் பக்கூ விலங்குக் காட்சிச்சாலை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.