பகுரைன் அஞ்சல் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுரைன் அஞ்சல் துறை (Bahrain Post) அந்நாட்டில் அஞ்சல் சேவையில் ஈடுபட்டுள்ள ஒர் அரசாங்க நிறுவனம் ஆகும். பகுரைன் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பகுதியாக பகுரைன் அஞ்சல் துறை செயல்படுகிறது[1].

வரலாறு[தொகு]

மனாமா அஞ்சல் நிலையம்.

பகுரைன் அஞ்சல் துறை அமைப்பு முதன் முதலில் மனாமா அஞ்சல் அலுவலகம் நிறுவப்பட்டு 1884 ஆம் ஆண்டு தொடங்கியது. பின்னர் இருபதாம் நூற்றாண்டில் இத்துறை அதிரடியாக விரிவாக்கப்பட்டது. இரண்டாவது தபால் அலுவலகம் 1946 ஆம் ஆண்டு, முகர்ரக் தீவில் கட்டப்பட்டது. மூன்றாவது தபால் அலுவலகம் அவாலி என்ற புலம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த நகரத்தில், பகுரைன் பெட்ரோலிய நிறுவனத்தால் அமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது.

1971 ல் சுதந்திரம் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர், பகுரைன் 1973 டிசம்பரில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தில் இணைந்தது. பகுரைன் அஞ்சல் பின்னர் மே 1986 இல் அரபு தபால் ஒன்றியத்தில் சேர்ந்தது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Bahrain Post". Ministry of Transportation. Archived from the original on July 6, 2011. பார்க்கப்பட்ட நாள் 28 May 2015.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுரைன்_அஞ்சல்_துறை&oldid=3587406" இலிருந்து மீள்விக்கப்பட்டது