பகுப்பு பேச்சு:வீட்டு விலங்குகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீட்டு விலங்குகளில் எலியும் வருமா?--கலை (பேச்சு) 11:11, 20 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

எலியை வீட்டு விலங்கு என்பதா? பல்லியையும் சேர்க்க வேண்டுமா? வீட்டு விலங்குகள் என்பவை வீடுகளிற் பொதுவாக வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய், பூனை போன்ற விலங்குகள் அன்றோ. ஒரு சிலர் மானையும் மரையையும் எலியையும் புலியையும் வீடுகளில் வளர்க்கலாம். அதற்காக, அவற்றை வீட்டு விலங்குகள் என ஏற்றுக்கொள்ள முடியாது.--பாஹிம் (பேச்சு) 11:25, 20 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
பகுப்பு இடுதலின் நோக்கம் ஒரு பயனர் எளிதாக தனது இலக்கை அடையவே தவிர, வகைப்பாட்டியல் ஆய்வுக்கு அல்ல. பகுப்பின் பெயரை மாற்றி, பொருளை மாற்றலாமென்றாலும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது ஒரு குறிச்சொல். நாம் விக்கித்திட்டங்களில் பயன்படுத்தும் உயிரிய வகைப்பாட்டியில் கூட, 2 நூற்றாண்டுகளுக்கு முந்தையது. அன்று புற உடலமைப்பு வேறுபாடுகளை வைத்து வேறுபடுத்தினர். இன்று மரபியலை அடிப்படையாகக் கொண்டு, பல அணுகுமுறைகள் நடைமுறைபடுத்தப்படுகின்றன. எனவே, மொழியியல் கண்கொண்டு மட்டுமே, உயிரியலை ஆய்தல் தவறு. உயிரியலில் இல்லாதவற்றை இங்கு வளர்த்தெடுப்போம். ஒன்றிற்கு மேற்பட்ட ஒரே நோக்கமுடைய பகுப்புகளையும், கட்டுரைகளையும், குழப்பம் தவிர்க்கக் களைவோம். -- உழவன் +உரை.. 08:34, 21 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]