பகுப்பு பேச்சு:மூலிகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பகுப்பில் மூலிகைகள் குறித்து இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்டுரைகளும் தரமுயர்த்தப்பட வேண்டும் எனத்தோன்றுகிறது. குறைந்த பட்சம் நம்பத்தகுந்த ஆதாரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். மூலிகைகளின் புகைப்படங்களை சேர்த்தல் நன்று. வெறும் மேம்போக்கான மருத்துவக்குறிப்புகள் மட்டும் இடம் பெற்றிருப்பது சரியெனத்தோன்றவில்லை.--ரவி (பேச்சு) 08:53, 14 நவம்பர் 2005 (UTC)

உதாரணம் http://ta.wikipedia.org/wiki/வேம்பு ! --Natkeeran 11:42, 14 நவம்பர் 2005 (UTC)

Key Links[தொகு]

துப்பரவாக்க வேண்டிய பகுப்பு[தொகு]

கோபி, சுந்தர் மருத்துவ குணங்களை நீக்கியதை நானும் பார்த்தேன். எனக்கும் விளங்க வில்லை. தவறுதலாகவும் நிகழ்ந்திருக்கலாம். தற்போதைக்கு மூலிகைகள் கட்டுரையில் மருத்துவ குணங்களை மாற்றி எழுதச் சிரம பட வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன். (பின்னர், ஆதாரங்களின்றி போனால், உங்கள் பங்களிப்பையும் நீக்க வேண்டி வரும்..!)இக்கட்டுரைகள் அனைத்தும் சிங்கப்பூர் பள்ளி சிறுவர் ஒருவரால் கட்டுரை எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவை. மொத்தப் பகுப்புக்குமே பெரிய அளவில் துப்புரவு தேவைப்படுகிறது. என்னால் இயன்ற அளவு உதவுகிறேன். இதில் உள்ள பல தாவரங்களை மூலிகைகள் என்ற குறுகிய பகுப்பில் அடக்குவது பிழை. பலவும் முக்கியத்துவம் வாய்ந்த விரித்து எழுதப்பட வேண்டிய தாவரங்கள்.--ரவி 16:58, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

உண்மைதான். தாவரங்கள் தொடர்பான கட்டுரைகளில் அவற்றின் மருத்துவ குணங்களைச் சிறு பகுதியாக இடுவதே பொருத்தமானது. பல கடுரைகளின் பெயர்கள் சரியான விதத்தில் நகர்த்தப்பட வேண்டும். --கோபி 17:05, 28 ஆகஸ்ட் 2006 (UTC)
குறைந்த பட்சம் செடிகள், கொடிகள், மரங்கள் என்ற பகுப்புக்களுள் தான் இத்தாவரங்கள் தொடர்பான கட்டுரைகள் வர வேண்டும். மேலும் நான் ஆதாரமாகக் கொண்ட தமிழ்நாட்டு மூலிகைகள் (க. ரத்னம்) நூலுடன் இங்குள்ள சில கட்டுரைகளில் தாவரங்களின் அறிவியற் பெயர்களும் வேறுபடுவதை அவதானித்தேன். எதனை நம்பகமானதாகக் கொள்வதெனத் தெரியவில்லை. --கோபி 17:08, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

இந்தப் பகுப்பில் பூக்கள் தொடர்பான கட்டுரைகளை நீக்கப் பரிந்துரைத்தேன். எவரும் இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்காததால் நீக்கப்படும் என்றே தெரிகிறது. அவற்றை நீக்கிய பின்னரும் பெருமளவு மிகச் சிறு கட்டுரைகள் இருக்கும். இவற்றில் தகவல்கள் மிகக் குறைவாக உள்ளவற்றை ஒரு பட்டியலில் இட்டு விட்டு அவற்றை அப்பட்டியற் பக்கத்துக்கு வழிமாற்றினால் என்ன? --கோபி 18:16, 5 செப்டெம்பர் 2006 (UTC)

இப்பகுப்பில் உள்ள செடிகளின் உயிரியற் பெயர்களை கூகுளில் இட்டுத் தேடினால் கணிசமான விவரங்கள் கிடைக்கின்றன. தமிழ் பெயரை இட்டுத் தேடினால் தான் விவரங்கள் குறைவாக இருக்கின்றன. வளரும் நாடு, தட்பவெட்பம், செடியின் படம், பயன்படும் பாகங்கள், மருத்துவக் குறிப்புக்கள் ஆகியவை ஆதாரத்துடன் எளிதில் சேர்க்க வல்லதாய் இருக்கிறது. ஆர்வமுடைய பயனர்கள் முயலலாம்--ரவி 21:47, 9 அக்டோபர் 2006 (UTC)

ஆங்கில விக்கியின் பல பகுப்புகள் தேவையா?[தொகு]

தாவரங்களை மருத்துவத்திற்கு பயன்படுத்துதல் என்பது மேற்கத்திய நாடுகளில் அதிகம் இல்லை எனலாம். கிழக்கத்திய நாடுகளில் தான் அதிகம் உள்ளது. நமது தமிழ் கலச்சாரத்தில் அவற்றை மூலிகைகள் என்கிறோம். அதன் வளர்ச்சியையே சித்தமருத்துவம் என்கிறோம். அப்படி இருக்க ஆங்கில விக்கிப்பீடியாவில் இது குறித்து பல பகுப்புகள் உள்ளன. நாம் அவற்றை பின்பற்ற வேண்டாமென்றே எண்ணுகிறேன். இலை மூலிகைகள், வேர் மூலிகைகள், தாவரவியல் பெயர் தெரியா மூலிகைகள், அழிந்து வரும் மூலிகைகள்(RedList), நாடு வாரியாக மூலிகைகள் என பல உட்பிரிவுகளை, மூலிகைகள் பகுப்பு வளரும் போது உண்டாக்கலாம் என்றே கருதுகிறேன்.

  1. en:Category:Herbs
  2. en:Category:Medicinal herbs and fungi
  3. en:Category:Medicinal plants

--உழவன் (உரை) 04:55, 23 பெப்ரவரி 2017 (UTC)