பகுப்பு பேச்சு:மற்போர் வீரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மற்போராளர்கள் என்று பெயர் மாற்றலாம். சுருக்கமாக இருக்கும்--ரவி 14:42, 21 ஆகஸ்ட் 2008 (UTC)

மல்லர்கள் என்பது இதைக் குறிக்குமா? (எ.கா. மாமல்லன்)--சிவக்குமார் \பேச்சு 00:45, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
ஆம் மல்லர் என்பது சரியாக இருக்கும். மல்லர்கள் என்பதற்கு மாறாக மல்லர் என்றே இருக்கலாம். மல்லர் என்பதே பன்மைதான். மல்லன் சரி, மல்லள் என்று கேள்விப்ப்ட்டதில்லை :) --செல்வா 00:49, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
மற்போர் விளையாட்டு வீரர்கள் என்ற தலைப்பு அப்படியே இருக்கட்டும். மல்லர் என்பது பொதுச் சொல். கட்டாயம் மற்போர் செய்பவர்கள் தான் மல்லர்களாக இருக்க வேன்டும் என்பதில்லையே. மற்போர் வீரர்கள் என்றிருக்கலாம்.--Kanags \பேச்சு 02:54, 22 ஆகஸ்ட் 2008 (UTC)

//முல் எனும் பொருந்தற் கருத்து அடிவேரில் இருந்து, மல் என்னும் கிளைவேர் பிறக்கும். மல்தல் = பெருகுதல், திரள்தல், பொதுவாகத் திரண்ட சதையை மல் என்று குறித்தார்கள். இன்னும் விதப்பாக குறிப்பிட்டுச் சொல்லும் படி, பருத்துத் திரண்ட மார்புச் சதை, மல் என்று அழைக்கப் பட்டது. திரண்ட சதை கொண்டவன் மல்லன் என்று அறியப் பட்டான். மல்லன்>மள்ளன் என்றும் திரியும்.. மல்லம் = மற்போர், வலிமை., வளம். மல்லகச் சாலை = மல்வித்தைச் சாலை. மல்லரங்கம் = மற்போர்ச் சாலை. மல்லாத்தல் = முதுகு கீழாக, மார்பு மேலாக, ஆக்கிப் போடுதல். அதாவது மல்லை உயர்த்தி வைத்தல், மல்லுக் கட்டுதல். = மற்போர். மல்லுப் பிடித்தல் என்பது மல்லுக் கட்டுதலையும் குறிக்கும்.// - வளவு வலைப்பதிவில் இருந்து.


+வீரர்கள், +கருவிகள் என்று நீட்டுவதை இயன்ற வரை தவிர்க்கலாம் என்பதே என் நிலைப்பாடு. ஆசிரியர் என்பது போல் மல்லர் என்பதும் பொதுப்பால் பெயரா? மல்லன் ஆண் பால் போல் இருப்பதால் பெண் பால் என்ன என்று நினைக்கத் தோன்றுகிறது--ரவி 12:34, 22 ஆகஸ்ட் 2008 (UTC)