பகுப்பு பேச்சு:புதிய பொதுப் பட்டியல் பொருட்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:கி.மூர்த்தி, தமிழில் பெயர்ச்சுருக்கங்களை எழுதும் போது இடையில் புள்ளி வைத்து எழுதுவது வழமை. புபொப என்று எழுதுவதற்குப் பதில் பு. பொ. ப. என்று எழுத வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:46, 24 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இங்கு அது கட்டாயம் இல்லை என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் NGC என்று தான் தருகிறார்கள். பு. பொ. ப. என்றால் குழப்பமாக இருக்கும். ஆங்கில விக்கியில் மட்டுமல்ல, பொதுவான பயன்பாடும் NGC தான்.--Kanags \உரையாடுக 12:50, 24 சனவரி 2015 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கி வழமையையோ இத்துறை வழமையையோ மறுக்கவில்லை. ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகள் இருப்பதால் சுருக்கங்களை அவற்றைக் கொண்டு எழுதும் போது, இது ஒரு பெயர்ச்சுருக்கம் என்று புரிந்து கொள்ள முடியும். தமிழில் பெரிய எழுத்துகள் இல்லை என்பதால் தான் புள்ளி வைத்து எழுதும் வழமை. பல்வேறு தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் இவ்வாறு புள்ளி வைத்து தான் எழுதுகிறோம். புள்ளி வைக்காமல் விட்டால் வேறு பொருள் தரக்கூடிய குழப்பங்களும் வரும். புபொப என்று எழுதினால் என்னால் puboba என்று தான் வாசிக்க முடியும். அது என்னவென்று புரியவும் இல்லை. பு. பொ. ப. என்று எழுதினால் pu. po. pa என்று சரியாக ஒலிக்க முடியும் என்பதுடன் அது ஒரு பெயர்ச்சுருக்கம் என்பதனையும் சுட்டி முழு பெயரை அறியத் தூண்டும். --இரவி (பேச்சு) 13:00, 24 சனவரி 2015 (UTC)[பதிலளி]