பகுப்பு பேச்சு:பாளையங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாளையங்கள் என்றால் என்ன? ஊர், சிற்றூர், பேரூர், நகரம், பெருநகரம் இவ்வாறு தானே பகுப்போம். பட்டி, குடி, பாளையம் என்பதை பகுக்க வேண்டுமா?--இராச்குமார் (பேச்சு) 11:47, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

பாளையங்கள் என்பது நாயக்கர் காலத்தில் மதுரை 72ஆக பகுதிகளாக பிரிக்கப்பட்ட போது வந்தவை. எந்த ஒரு பின்னொட்டிலும் முடியலாம். இதிலுள்ள 72ம் பட்டியிலடப்படுகின்றன. அதாவது இவர்களில் நிறைய பேர் சுதந்திர போராட்டத்தின் மூலமான பாளையக்காரர் போர்கள் பங்களித்த பாளையக்காரர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:54, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

தாங்கள் முன்பு பாளையப் பகுதிகளாக இருந்த ஊர்களின் பெயர்களில் பாளையம் எனும் பகுப்புவைச் சேர்த்து வருகிறீர்கள். உதாரணமாக, போடிநாயக்கனூர் எனும் ஊரில் பாளையம் எனும் பகுப்பைச் சேர்த்திருக்கிறீர்கள். இது போடிநாயக்கனூர் நகராட்சிப் பகுதித் தகவல்களைக் கொண்டதாக இருக்கும். தாங்கள் போடிநாயக்கனூர் (பாளையம்) எனும் புதுக் கட்டுரையை உருவாக்கி, அதில் போடிநாயக்கனூர் பாளையப் பகுதிகளில் இருந்த ஊர்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களைச் சேர்க்கலாம். அதைப் பாளையம் எனும் பகுப்பின் கீழ் கொண்டு வரலாம். தற்போதுள்ள ஊர்களை பாளையத்துடன் சேர்த்துக் குழப்பம் செய்ய வேண்டாம். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:16, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]
இது தற்போதுள்ள நிர்வாகத்தில் அவ்வாறு குறிப்பிடாவிடில், இதனை விஜயநகரப் பாளையங்கள் என பகுக்கலாமே.--இராச்குமார் (பேச்சு) 15:20, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]
தென்காசி சுப்பிரமணி தமிழ்நாட்டின் தற்போதைய உள்ளாட்சி அமைப்பிலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற அமைப்புகளின் பெயரிலுள்ள ஊர்களில் பாளையங்கள் பகுப்பைச் சேர்த்திருந்தார். அவை அனைத்தும் நீக்கப்பட்டன. நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட பாளையங்கள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட எல்லை இருந்திருக்கும். அந்த எல்லையுள்ள பகுதிகளைக் கொண்டு தனியாக ஒவ்வொரு பெயரிலும் பாளையங்கள் குறித்த கட்டுரையைப் புதியதாகத் தொடங்கலாம். தற்போது போடிநாயக்கனூர், கண்டமனூர் என்று இரு பாளையங்கள் குறித்த கட்டுரை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில பாளையங்கள் குறித்த தனிக் கட்டுரைகள் உள்ளன. இது போல் பிற பாளையங்களுக்கும் தனி கட்டுரையைத் தொடங்கலாம். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:39, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறியதே சரி எனத் தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:48, 20 சூலை 2012 (UTC)[பதிலளி]