பகுப்பு பேச்சு:நோய் எதிர்ப்பு முறைமைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதிர்ப்பியல்[தொகு]

இங்கே சேர்க்கப்பட்டுள்ள பக்கங்களை ஏற்கனவே உள்ள பகுப்பான பகுப்பு:நோய் எதிர்ப்பு முறைமைகள் என்ற பகுப்பிற்கு நகர்த்தலாமா? அப்படியில்லாவிடினும் இந்தத் தலைப்பு நோய் எதிர்ப்பியல் என இருத்தலே சரியென நினைக்கின்றேன். --கலை (பேச்சு) 22:14, 3 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நோய் எதிர்ப்பியல் (Infection and Immunity) என்பது சரியில்லை என்பது என் கருத்து. ஏனெனில், தன்னெதிர்ப்பு நோய்கள் (autoimmune diseases), தன்னுடல் தாக்குமை (autoimmunity) போன்றவை நோய் வருவதால் ஏற்படுவதில்லை. தன்னெதிர்ப்பினால் இத்தகு நோய்கள் வருகின்றன. எனவே, எதிர்ப்பியல் (immunology) என்ற பொதுத் தலைப்பு தேவைப்படுகிறது.
நோய் எதிர்ப்பு முறைமைகள் (immune system) என்பதும் ஒரு உடற்கூறியலைக் குறிக்கிறது. அதனால் ஏற்படும் நோய்களை உள்ளடக்காது என்றே கருதுகிறேன். இதுவும் ஒரு பொதுத் தலைப்பாக இல்லை என்பதே என் எண்ணம். --நந்தகுமார் (பேச்சு) 09:49, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

Immunology என்பதற்கு எதிர்ப்பியல் என்ற பொதுப்பதம் சரிதானா? எதிர்ப்பியல் எனும்போது, பொதுவாக எதனையும் எதிர்ப்பதான அர்த்தத்தைத் தருவதுபோல் உள்ளது. நோய்க்கான தொடர்பைத் தரும் சொல்லாகத் தெரியவில்லை. Immunity நோய்த் தடுதிறன், அல்லது நோய் எதிர்ப்புத்திறன் என்றுதானே கூறுகின்றோம். அதேபோல் Immune system நோய் எதிர்ப்பு மண்டலம் அல்லது நோய் எதிர்ப்புத் தொகுதி என்றும், Immunology யை நோய் எதிர்ப்புத் திறனியல் கூறுகின்றோம். எதனை எதிர்ப்பது பற்றிய விடயம் என்பது முக்கியமில்லையா? தவிர Infection என்னும்போது தொற்றுநோய்களைத்தானே குறிக்கின்றது. பொதுவான நோய்கள் அனைத்தையும் குறிப்பதில்லையே. ஆனால் autoimmune diseases, autoimmunity என்பன தொற்றுநோய்கள் இல்லையே தவிர, அவையும் நோய்கள்தானே. எனவே அவற்றை நோய் எதிர்ப்பியல் என்பதில் தவறுள்ளதா? தொற்றுநோய் எதிர்ப்பியல் என்று சொன்னால் பொருத்தமற்றதாக இருக்கலாம். ஆனால் நோய் எதிர்ப்பியல் என்பது பொருந்தவில்லையா?--கலை (பேச்சு) 10:57, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தமிழில் எதிர்ப்பியல் என்பது ஒரு பொதுவான சொல். பொதுவான எதிர்ப்புப் போராட்டம் பற்றியதாகும். immunology என்ற கருத்தைத் தரவில்லை.--Kanags \உரையாடுக 11:30, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
"எதனை எதிர்ப்பது பற்றிய விடயம்" என்பது முக்கியமே. ஆனால் நோய் எதிர்ப்பியல் என்பது பொருந்தவில்லை. ஏனெனில், தன்னெதிர்ப்பு நோய்களை நோய் எதிர்ப்பியல் என்னும் சொல் கருத்தில் கொள்ளவில்லை. எதிர்ப்பியல் வேண்டாமெனில் இங்கு Immunology என்பதற்கு வேறு ஒரு பொதுச்சொல் தேவை.--நந்தகுமார் (பேச்சு) 11:32, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நோய்த் தடுப்பாற்றலியல்; நோய்த் தடுப்பாற்றியல்; அல்லது நோய்த் தடுப்புத்திறனியல். அல்லது வெறுமனே தடுப்பாற்றலியல் எனவும் கூறலாமா? அல்லது அதுவும் பொதுப்படையான சொல்லா எனத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 12:05, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நோய்த் தடுப்பாற்றலியல், நோய்த் தடுப்பாற்றியல், நோய்த் தடுப்புத்திறனியல், தடுப்பாற்றலியல் என்பவை Vaccinology-ஐக் குறிக்கும் என்பது என் கருத்து.--நந்தகுமார் (பேச்சு) 12:10, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

autoimmune diseases, autoimmunity என்பவை தொற்றுநோய்கள் தொடர்பானவை அல்ல. ஆனால் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது (Immune system), தன்னுடல் பகுதிகளையே ஒரு வெளிக்காரணியாக / நோய்க்காரணியாகக் கருதுவதனால், அவற்றிற்கு எதிராகத் தவறாகத் தொழிற்பட்டு, அல்லது மிகையாகத் தொழிற்பட்டு ஏற்படுத்தும் நிலைகளே autoimmune diseases ஆக இருக்கின்ற அல்லவா? நோய் எதிர்ப்பாற்றல் முறைமைத் தொழிற்பாடே இந்நோய்களுக்குக் காரணமாக இருப்பதனால், அவை நோய் எதிர்ப்பாற்றல் முறைமை பகுப்பினுள் சேர்க்கப்படலாம் என கருதுகின்றேன். மேலும், Immunity என்ற சொல்லுக்கு நோய் எதிர்ப்பாற்றல், நோய் எதிர்ப்புத்திறன் என்ற சொற்களே பல இடத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. Immunology க்கு தமிழ் விக்சனரியிலும் நோய் எதிர்ப்புத் திறனியல் என்று கொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பாற்றலியல் என்றும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது நந்தகுமார் கூறியுள்ளதுபோல் Vaccinology க்கே அதிகம் பொருந்தும் என்பதனால், அதனைத் தவிர்க்கலாம். மிகப் பொதுப்படையான சொல்லான எதிர்ப்பியல் என்பது இக்குறிப்பிட்ட இடத்தில் எதிர்பார்க்கும் பொருளைத் தரவில்லை.--கலை (பேச்சு) 14:41, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நோய் எதிர்ப்பாற்றல் முறைமை பகுப்பினுள் சேர்த்துவிடுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 14:45, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]