பகுப்பு பேச்சு:நாட்டார் இலக்கியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • நாட்டார் வழக்காற்றியல்

"இந்தக் கட்டுரையுடன் கூடவே டி தருமராஜனின் 'கதையாடல் ' கட்டுரையும் வாசிக்கத்தக்கது. செயபதியின் கருத்துக்கு நேர்மாறாக ஒரு பதிவைச் செய்கிறது, இந்தக் கட்டுரை. அதற்கு நடைமுறை வலுவும் சேர்த்துக் கொள்கிறார் தருமராஜன். அதாவது நாட்டார் இலக்கியம் என்ற வரையறைக்குள் செய்யப் படும் ஆய்வுகள், நாட்டார் வழக்காற்றில் உள்ள சாதியம் மற்றும் இனமேன்மைகளை மறந்து போகின்றன. நாட்டார் இலக்கியம் ஒரு ரொமாண்டிக் தளத்தில் இப்போது வைக்கப் படுகிறது என்பது தான் காரணம். இதுவும் தொடர்ந்து விவாதிக்கப் பட வேண்டும். "

கோபி, நீங்கள் சுட்டிய கருத்து முக்கியமானது. நாட்டார் என்றால் எல்லாம் நன்றாக இருந்தது போன்ற கருத்துரு இப்பொழுது உண்டு. உண்மையில் நாட்டார் என்பது பொது மக்கள் என்று, அதாவது நாம் என்று பார்க்க தலைப்பட்டு, அதன் வரலாற்று வெளிப்படுத்தல்களில் சிக்கி, இப்போதைய வெளிப்படுத்தல்களை துலைக்கின்றோமா அல்லது கவனம் செலுத்த தவறுகின்றோமா என்றும் எண்ண தூண்டகின்றது. சாதியப் பார்வையை தவறுதல் அந்த குறைப்பாடுகளில் ஒன்று எனலாம். --Natkeeran 14:35, 22 ஏப்ரல் 2007 (UTC)

நற்கீரன், மேலுள்ள கருத்து என்னுடையதல்ல. வெளி இணைப்பொன்றையே நான் இணைத்தேன். உண்மையில் மேலுள்ள கருத்தை இட்டவர் நீங்கள்தான் :) ஆனால் அவசியம் கவனத்தில் எடுக்க வேண்டிய கருத்துத்தான். --கோபி 14:49, 22 ஏப்ரல் 2007 (UTC)