பகுப்பு பேச்சு:நச்சுநுண்ம நோய்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த.வி. யில் Virus ஆனது தீ நுண்மம் என்றே வழங்கப்பட்டு வந்திருப்பதால், நச்சுநுண்ம நோய்கள் என்பதை தீ நுண்ம நோய்கள் என்று மாற்றலாமா?--கலை 20:42, 12 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

த.வியில் virus "தீ நுண்மம்" என்று அழைக்கப்படும் அதே சந்தர்ப்பத்தில், viral (adjective) என்பது நச்சுநுண்மம் சார்ந்த; நச்சுயிரி சார்ந்த; நச்சுயிரி பாதிப்பால்; அதிநுண்ணுயிரால் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உண்மையிலேயே "தீ நுண்மம்" சிறப்பாக இருந்தாலும், நான் virus எனும் இலத்தீன் சொல்லின் மூலப் பொருளைக் கருதினேன், virus என்பது இலத்தீனில் "நஞ்சு" எனப்பொருள்படுகிறது. எனவே மூலச்சொல்லிற்கேற்ப நச்சுநுண்மம் என்பது சிறப்பாக அமைகிறது என்பது எனது கருத்தாக அமைந்தது. --சி. செந்தி 05:20, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

அப்படியானால் சரி. இந்தப் பெயர்களையும் கட்டுரையில் சேர்த்து விடுகிறேன்.--கலை 14:15, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
ஆம் நச்சுநுண்மம் எனலாம். உயிரி என்பது சேராமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். நச்சுநுண்மம், பிரையான் (prion) போன்றவை (இன்னும் சில புரதத்துண்டுகளும் உண்டு) உயிரி எனக் கருதப்படுமா? --செல்வா 14:23, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  • இதன் பொதுவான பெயராக "தீ நுண்மம்" என்று அழைப்பதாக இருந்தால் "நச்சு நுண்மம்" என்பதனை நீக்கிவிடலாமே? இரண்டில் ஒன்று இருப்பதே சிறந்தது என்பதாலும் "தீ நுண்மம்" வேறு கட்டுரைகளில் பயன்படுத்தப்படுவதாலும் "தீ நுண்மமே" இருப்பது நன்று. பேச்சு:தீ நுண்மம் பகுதியில் செல்வாவின் உரையாடலில் "தீ நுண்மி" என்பது மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. உயிரி என்று அழைப்பது சரியல்ல என்பது எனது கருத்தும் கூட. மேற்கொண்டு எழுதப்படும் கட்டுரைகளில் தீ நுண்மம் எனும் சொல் அமைவதாக இருந்தால் இந்தப் பகுப்பை நீக்கி "தீ நுண்மம் " என்றே மாற்றலாம். --சி. செந்தி 07:09, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]