பகுப்பு பேச்சு:தீவிரவாதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தீவிரவாதிகள் என்ற பகுப்பு எந்த அடிப்படையில் தீவிரவாதிகள் என வகைப்படுத்துகிறது? இப்பட்டியலில் ஏன் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாத்தையா, தமிழ்ச் செல்வன், அன்ரன் பாலசிங்கம் போன்ற தமிழீழ விடுதலைப்புலித் தலைவர்கள் உள்ளடக்கப்படவில்லை?--பாஹிம் 07:09, 6 சூன் 2011 (UTC)

பன்னாட்டு அளவில் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டோரை மட்டுமே இப்பகுப்பு கொண்டுள்ளது. மற்றபடி நீங்கள் குறிப்பிடும் நபர்கள் பகுப்பு:புரட்சியாளர்கள் என்ற பகுப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:17, 6 சூன் 2011 (UTC)
பாஹிம் சொல்வதைக் கருத்தில் கொள்ளவேண்டும். ”ஒரு தரப்பால் தீவிரவாதி என்பபடுபவர் இன்னொரு தரப்பின் விடுதலை வீரர்/புரட்சியாளர்” என்பது யதார்த்தம். யார் தீவிரவாதிகளாக அறிவித்தார் என்றில்லாமல் ”தீவிரவாதி” என்று சொல்வது நடுநிலை பிறழ்வு. ஆங்கில விக்கியில் இது குறித்து நிகழ்ந்த நீக்கல் உரையாடல் இங்குள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் நமக்கும் பொருந்தும். ”ஐநா தீவிரவாதிப் பட்டியலில் இடம்பெற்றவர்கள்” என்ற வேற்றுப் பகுப்பில் மாற்றலாம். பிறரது கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன். எதிர்ப்பேற்படவில்லையெனில் மாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:32, 6 சூன் 2011 (UTC)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்களும் பல்வேறு நாடுகளில் தீவிரவாதிகளாக அல்லது பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, ஒன்றில் தீவிரவாதிகள் என்ற பகுப்பை நீக்கிவிட வேண்டும். அல்லது அவ்வாறு குறிப்பிடப்பட்ட பலரையும் இந்தப் பகுப்புக்குள் உள்ளடக்க வேண்டும்.--பாஹிம் 08:08, 6 சூன் 2011 (UTC)

பாஹிம் உணர்வுகளுக்கும் சோடாபாட்டில் கருத்துக்கும் உடன்படுகிறேன். "ஐநா தீவிரவாதிப் பட்டியலில் இடம் பெற்றவர்கள்" என்பது கட்டுரை ஆக்குனரின் பக்கச்சார்பின்றி அமையும். இஃதே போல "இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கதினர்" என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளை பகுக்கலாம். --மணியன் 08:30, 6 சூன் 2011 (UTC)

இன்னும் இந்தக் குறை தீர்க்கப்படவில்லை. தீவிரவாதிகள் என்ற பகுப்பை நீக்க வேண்டும் அல்லது பல்வேறு நாடுகளிலும் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்ட வேறு பலரையும் இங்கு சேர்க்க வேண்டி வரும்.--பாஹிம் 14:45, 10 சூன் 2011 (UTC)

“இங்கு சேர்க்க வேண்டி வரும்” என்பது போன்ற தோனி சரியானதல்ல. பரிந்துரை செய்து நான்கு நாட்களே ஆகியுள்ளன. உங்கள் கருத்தையே உரையாடியோரில் பெரும்பான்மை ஆமோதித்துள்ளனர். பின் ஏன் இந்த தோனி? எதிர்ப்பில்லையென்றால் நீக்குகிறேன் என்றொரு குறிப்பினை இட்டு விட்டு தாராளமாகச் செய்யலாம். அதை விடுத்து “இது செய்ய வில்லையென்றால் அதைச் செய்ய வேண்டி வரும்” என்பது நன்றாக இல்லை.
கட்டுரைகளில் இருந்து பகுப்பினை நீக்கி விடுங்கள். நான் பகுப்பினை நீக்குகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 14:53, 10 சூன் 2011 (UTC)

நன்றி, சோடாபாட்டில். சேர்க்க வேண்டி வரும் என்று கூறியது யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலன்று. தவறெனின், மன்னித்தருள வேண்டுகிறேன்.--பாஹிம் 15:12, 10 சூன் 2011 (UTC)