பகுப்பு பேச்சு:தளபாடங்கள்
Jump to navigation
Jump to search
கோபி, தளபாடம் என்றால் furniture தான? இத்தனை நாள் furnitureக்கு தமிழ்ப் பெயர் தெரியாமல் இருந்தேன். இது இலங்கை வழக்கா? தமிழ்நாட்டில் நான் கேள்விப்பட்டதில்லை. தளபாடம் தமிழ் சொல்லாக இருக்கும் பட்சத்தில் இதையே பயன்படுத்தலாம். இராணுவத் தளவாடங்கள் என்றும் ஒன்று உண்டு. அந்த தளவாடத்துக்கு ஆங்கிலப் பெயர் என்ன?--Ravidreams 19:54, 4 மார்ச் 2007 (UTC)
- தளபாடம், தளவாடம் என்பது ஒரு பணியைச் செய்யத் தேவைப்படும் கருவிகளைக் குறிக்கும். படை, படையாளிகள் பற்றிய தளவாடம் என்றால் ஆயுதங்கள் முதலியனவற்றைக் குறிக்கும். பிற பொருள், வினைகளைக் குறிப்பின், அவ்வவ் வினைக்குத் தேவையான கருவிகளையும் பொருட்களையும் குறிக்கும். பணிமுட்டு என்பதும் அதுவே. அதாவது ஒரு பணி செய்யத்தேவையான பொருளும், கருவிகளும் பணிமுட்டு எனப்படும். தட்டுமுட்டுச் சாமான்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளுக்குப் பூசை செய்யத் தேவைப்படும் பொருட்களுக்குத் (சாமான்களுக்குத்) திருமுட்டு என்றும், கோயில் திருப்பணிக்ள் செய்யும் சாமான்களுக்குத் திருப்பணிமுட்டு என்றும் பெயர். --செல்வா 20:52, 4 மார்ச் 2007 (UTC)
செல்வா, தட்டுமுட்டுப் பொருட்கள் அன்றாடம் புழங்கும் சொல். பிற முட்டுப் பொருட்கள் குறித்த தகவல்களுக்கு நன்றி. தளவாடம், தளபாடம் இரண்டுமே ஒன்றைக் குறிப்பனவா? போலி , மரூஉ -வா?--Ravidreams 21:06, 4 மார்ச் 2007 (UTC)