பகுப்பு பேச்சு:தமிழ்க் கணினி உள்ளீட்டு மென்பொருள்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளீடு, உள்ளீட்டு - எது சரி? உள்ளீட்டு மென்பொருள் என்று சொல்வது தான் சரி என நினைக்கிறேன்--Ravidreams 08:55, 9 டிசம்பர் 2006 (UTC)

உள்ளிடு மென்பொருள் என்பதும் சரியாக இருக்கக்கூடும். Mayooranathan 10:16, 9 டிசம்பர் 2006 (UTC)

உள்ளீட்டு மென்பொருள் என்றே புழக்கத்தில் இருக்கிறது. உண்மையில் ஆங்கிலத்தில் இது input method. உள்ளிடும் முறை. என்ன சொல் பயன்படுத்தலாம்? --மு.மயூரன் 14:19, 9 டிசம்பர் 2006 (UTC)

உள்ளீடு என்பது பெயர்சொல்லாகவும்,உள்ளீட்டு எனும் சொல் அடைமொழியாகவும் பாவிக்கப்படுகின்றது என்பது என் எண்ணம்.உள்ளீட்டு மென்பொருள் என இருப்பது சால சிறந்தது--கலாநிதி 16:59, 9 டிசம்பர் 2006 (UTC)

பகுப்பு பேச்சு:தமிழ்க் கணிமையாளர்கள் என்பதன் அடிப்படையில் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.--உழவன் (உரை) 02:15, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]