பகுப்பு பேச்சு:தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பில் உள்ள குறிப்பிடத்தக்க கட்டுரைகள் முழுவதும் தமிழிலேயே உள்ளன. இருப்பினும் இவற்றில் வார்ப்புரு:translate காணப்படுகிறது. இப்படி முழுவதுமாக தமிழில் உள்ள கட்டுரைகளில் இருந்து இந்த வார்ப்புருவை நீக்கிவிடலாமா ? அல்லது ஆங்கிலத்தில் இருந்து மேலதிக தகவல்கள் இணைப்புக்காக இந்த வார்ப்புரு இன்னும் இடப்பட்டுள்ளதா ? βινόδ  வினோத் 17:18, 27 பெப்ரவரி 2008 (UTC)

வெளி இணைப்புக்களுக்கான பெயர்கள் உட்பட அனைத்தும் தமிழில் உள்ள கட்டுரைகளிலிருந்து மொழிபெயர்ப்பு வார்ப்புருவை நீக்கலாம். மேலும் இங்குள்ள பல கட்டுரைகளின் சிறு பகுதிகளே ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 2004-05 காலத்தில் தொடங்கப்பட்டவை. போதிய கவனம் பெறாமையாலேயே மொழிபெயர்க்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளன. கோபி 01:55, 28 பெப்ரவரி 2008 (UTC)