பகுப்பு பேச்சு:தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காண்க:விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்

இராமநாதபுரம் கல்வி மாவட்டம் தானே?[தொகு]

இராமநாதபுரம் கல்வி மாவட்டம் இப்படியலில் விடுபட்டுள்ளது தானே?அது கல்வி மாவட்டத்தின் கீழ் அமையாதா?--உழவன் (உரை) 12:35, 26 சூன் 2017 (UTC)

தவறுதலாக விடுபட்டிருந்தது. புதிய பகுப்பை உருவாக்கியுள்ளேன். இரவி (பேச்சு) 12:46, 26 சூன் 2017 (UTC)

வேண்டுகோள்:துப்புரவு பணிகள்[தொகு]

  • தற்போது நாம் அனைவரும் இப்பகுப்பில் உள்ள கட்டுரைகளுக்கு துப்புரவு பணிகளை மேற்கொண்டுள்ளோம். எனவே இது குறித்தவைகளை இங்கு குறிப்பிடக் கேட்டுக்கொள்கிறேன். வெவ்வேறு பக்கங்கள் இருப்பதால் எம்மாற்றம் எங்கு நிகழ்த்தப்படுகிறது என்பது புரியவில்லை. எனவே உரிய இணைப்புகளைத் தருக.
  • நான் தலைப்புகளில் வரும் புள்ளி எழுத்துக்களை சீர்படுத்த உள்ளேன். அதாவது, தலைப்பு எழுத்துகளில் புள்ளி இருப்பின், அதற்கு அடுத்து ஒரு இடைவெளி வருமாறு அமைப்பேன். அவ்விதம் நகர்த்தும் நிரலானாது, தலைப்பின் உள்ளடக்கத்தை, முனையத்தில் காட்டாது என்பதால், இரண்டாம் சுற்றில் தான் உள்ளடகத்தினை மேற்பார்வை செய்ய இயலும்.--உழவன் (உரை) 02:30, 17 சூலை 2017 (UTC)
கட்டுரையைத் திருத்துபவரே அதனைத் தகுந்த தலைப்புக்கு நகர்த்தலாமே. எதற்கு இரண்டு வேலைகள்?--Kanags \உரையாடுக 02:41, 17 சூலை 2017 (UTC)
தொடக்கநிலை பயனர்களுக்கு இதுபோன்று பல உதவிகள் தேவைப்படுகின்றன. மற்றொன்று, வழிமாற்று இல்லாமல் அவர்களால் நகர்த்த முடியாது தானே?--உழவன் (உரை) 03:19, 17 சூலை 2017 (UTC)

ஒருங்கிணைப்பாளர்கள் கவனிக்க[தொகு]

@Ravidreams, Selvasivagurunathan m, மற்றும் Info-farmer: ஆசிரியப் பயனர் ஒருவர் தான் எழுதிய முன்னேறு அலை என்ற ஒரு வரிக் கட்டுரையை விக்கித்தரவில் அலை என்ற பழைய கட்டுரையை நீக்கி விட்டு தனது கட்டுரையை சேர்த்திருக்கிறார். இவ்வகையான செயற்பாடுகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இவரது ஏனைய கட்டுரைகளையும் மிகக் கவனமாக பரிசோதிக்க வேண்டி உள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 06:29, 18 சூலை 2017 (UTC)

இப்பயனர் இவ்வாறு பல ஒரு வரிக் கட்டுரைகள் எழுதி விக்கித்தரவில் மாற்றியுள்ளார்.--Kanags \உரையாடுக 06:39, 18 சூலை 2017 (UTC)
எப்பயனர்? உரிய தொடுப்புகளைத் தாருங்கள்--உழவன் (உரை) 06:41, 18 சூலை 2017 (UTC)
பார்க்க. --Kanags \உரையாடுக 06:49, 18 சூலை 2017 (UTC)
இவர் இவ்வாறு பல கட்டுரைகளை மாற்றியுள்ளார். தெரிந்தே செய்துள்ளார் போல் தெரிகிறது. அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கவனித்து மாற்றி வருகிறேன். இவரது ஒரு-வரிக் கட்டுரைகளை நீக்கி வருகிறேன். வேறு எவரும் இவ்வாறு செய்கின்றனரோ தெரியாது. எனினும், பொதுவான எச்சரிக்கை தருவது நல்லது.--Kanags \உரையாடுக 07:01, 18 சூலை 2017 (UTC)

ஒருங்குறியில் ர்[தொகு]

@Ravidreams மற்றும் Tshrinivasan: பெரும்பாலான ஆசிரியப் பயனர்கள் ஒருங்குறியில் எழுதும்போது ர் எழுதும் போது (உதாரணம்) சிறார் என்பதற்குப் பதிலாக சிறாா் என எழுதுகிறார்கள். இச்சொல்லில் கடைசி இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தே வருவதை அவதானியுங்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது? ஒவ்வொரு சொல்லாகக் கவனித்துத் திருத்த வேண்டியுள்ளது.. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 10:55, 19 சூலை 2017 (UTC)

பார்க்க - பாமினி விசைப்பலகை வழு. இது தவிர வேறு காரணங்கள் உள்ளனவா என்று ஆய வேண்டும். எதிர்வரும் சென்னை நிரல் திருவிழாவில் இத்தகைய பக்கங்களைச் சீராக்க முன்னுரிமை தரலாம். விசைப்பலகையில் உள்ள சிக்கலையும் தீர்க்க வேண்டும். --12:15, 19 சூலை 2017 (UTC)

கிராமங்கள் கட்டுரைகளை இணைப்பது குறித்து[தொகு]

பயனர்:Hibayathullah துப்பரவுப் பணியில் ஈடுபடும்போது கிராமங்கள் குறித்து எழுதப்பட்ட பல கட்டுரைகளை அந்த கிராமத்தின் பெயரில் உள்ள ஊராட்சி கட்டுரையுடன் இணைக்க வார்புரு இட்டு வருகின்றார்கள். எடுத்துக் காட்டாக சாக்கோட்டை கிராமம் பற்றிய கட்டுரையைக் குறிக்கலாம் இந்தக் கட்டுரையானது சாக்கோட்டை என்ற ஒற்றை ஊராக் குறிப்பிடும் ஒரு கட்டுரை மட்டுமே ஆனால் சாக்கோட்டை ஊராட்சி என்ற கட்டுரையோ நான்கைந்து கிராமங்களை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அமைப்பைக் குறித்த கட்டுரை ஆகும். ஒரு ஊராட்சியில் ஒரே ஒரு கிராமம் இருந்தால் இது போல கட்டுரைகளை இணைத்துவிட்டு அந்த கிராமத்தின் பெயரை அக்கட்டுரையின் வழிமாற்றாக வைத்துவாடலாம். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ள ஒரு ஊராட்சி கட்டுரையில் இந்த ஊரின் பெயரில் உள்ள கட்டுரையை இவ்வாறு இணைப்பது சரியாக இருக்காது என்பது என் கருத்து. இது குறித்து மற்றவர்களின் நிலைப்பாட்டை அறிந்த பிறகு கட்டுரைகளை இணைக்கும் பணியினை மேற்கொள்ளுங்கள்--Arulghsr (பேச்சு) 04:19, 26 சூலை 2017 (UTC)

Arulghsr நீங்கள் சொல்வது சரி. ஊராட்சி வேறு, ஊர் வேறு. பயனர்:Hibayathullah கவனிக்க.--Kanags \உரையாடுக 09:08, 26 சூலை 2017 (UTC)

ஊராட்சிகளில் உள்ள சிற்றூர்கள் என்பது சுமாராக 50. 100 வீடுகள் உள்ள பகுதியாகும். இவைகளுக்கு தனி கட்டுரை எழுதும் அளவுக்கு தகவல்கள் இருந்தால் எழுதுவதில் தவறில்லை.அப்படி இல்லையெனில் ஊராட்சி கட்டுரையிலோ,கிராமத்தின் பெயர் கொண்ட கட்டுரையில் இணைப்பதே சரி.தமிழ் விக்கியில் கிராம கட்டுரைகள் அதிகம் இயற்றியுள்ளேன். ஆகவே இதுபற்றிய நல்ல புரிதலுடனே செயல் படுகிறேன். இது பற்றி இரவிஅவர்கள் வாடஸ்அப் குழுமத்தில் தகுந்த விளக்கம் தந்த பின்பும் இங்கு விவாதமும் கனகு அவர்களின் மீளமைப்பும் தேவையா இங்கு உதாரணத்திற்கு குறிப்பிட்டுள்ள சாக்கோட்டையிலிருந்து பத்து கி.மீக்குள் வசிப்பவன் நான் சாக்கோட்டையே கும்பகோணம் நகரின் புறநகர்.ஆகவே ஊராட்சி திட்டம் குறித்து அறிந்தவர்கள் தகுந்த விளக்கம் தரவும்.ஹிபாயத்துல்லா 13:38, 26 சூலை 2017 (UTC)

கவனத்திற்கு[தொகு]

@Jagadeeswarann99: தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளில் துப்புரவு செய்துவருவதற்கு நன்றிகள். துப்புரவு செய்த பிறகு, துப்புரவு முடிந்த xxxxxxx மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பினை 2017ஆம் ஆண்டு செய்தோம். இந்த பகுப்பு மறைக்கப்பட்ட பகுப்பாக இருக்கும். இந்த நடைமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் (அல்லது) ரவியைக் கேட்கவும். தரவுகளுக்காக இதனைச் செய்தார்கள் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:04, 25 சனவரி 2019 (UTC)‎

@Jagadeeswarann99: பகுப்பு:துப்புரவு முடிந்த தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்பதனைக் கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:05, 25 சனவரி 2019 (UTC)

@Jagadeeswarann99: இந்த மாற்றத்தைக் கவனியுங்கள் 'தொகு' என்பதில் தெரியும் பகுப்பு, கட்டுரையைப் பார்க்கும்போது தெரியாது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:09, 25 சனவரி 2019 (UTC)

@Ravidreams: துப்புரவு முடிந்த xxxxxxx மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பு பேணப்பட வேண்டுமா?--Kanags (பேச்சு) 06:18, 25 சனவரி 2019 (UTC)

@Jagadeeswarann99: முன்பு நாம் செய்த நடைமுறையை இப்போதும் பின்பற்றுவதற்கு நன்றி! @Ravidreams: இரவி என்ன சொல்கிறார் என்பதனையும் பார்ப்போம். அதன்பிறகு இறுதி முடிவு எடுப்போம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:44, 25 சனவரி 2019 (UTC)

தொடர்ந்து வழிகாட்டுவதற்கு நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:53, 25 சனவரி 2019 (UTC)