பகுப்பு பேச்சு:செட்டியார்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் அகரம் வெள்ளாஞ் செட்டியார், ஆயிர வைசியர், செட்டு அல்லது செட்டி, தேவாங்கர்,கற்பூர செட்டியார், காசுக்கார செட்டியார், பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தமச் செட்டியார், சாதுச் செட்டி, தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டியார், சுந்தரம் செட்டி, வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட), வெள்ளாஞ்செட்டியார், வயநாடு செட்டி, கொங்குச் செட்டியார், குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட), குறு உறனி செட்டி, மவுண்டாடன் செட்டி, சோழிய செட்டி, தெலுங்குப் பட்டி செட்டி, அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்), ஆரிய வைசியச் செட்டியார் (கோமுட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்), பலிஜா செட்டியார், பேரி செட்டியார், சோழபுரம் செட்டியார், காயல் செட்டி, கொங்குச் செட்டியார், கோட்டைப்புரச் செட்டியார், கோட்டைப்புர வைசியச் செட்டியார், மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்), நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்), சைவச் செட்டியார் , திருவெள்ளறைச் செட்டியார் என பல சாதியினர் தங்கள் பெயருக்குப் பின்னால் செட்டியார் எனும் பொதுப் பெயரைச் சேர்த்து வருகின்றனர். தமிழ்நாடு சாதிகள் பட்டியல் பார்க்க. இந்தப் பகுப்பு தேவையில்லை என்பது என் கருத்து. இப்படி ஒரு பகுப்பு இருந்தால் அடுத்து பிள்ளை, தேவர் என பல பகுப்புகள் உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் பல கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கக் கூடும். இந்தப் பகுப்பை நீக்கம் செய்ய வேண்டுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:02, 7 மே 2012 (UTC)[பதிலளி]

பிள்ளைகள், தேவர் எனப் பகுப்புகள் தொடங்கினால் என்ன பிரச்சினை ஏற்படும்?--Kanags \உரையாடுக 13:13, 7 மே 2012 (UTC)[பதிலளி]