பகுப்பு பேச்சு:சாதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம்

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள அந்த 109 சாதிகளுடைய மொத்த மக்கள் தொகை 1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரத்து 987 பேர். இதிலே வன்னியர் மாத்திரம் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர்.

இது தவிர மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, அப்பநாடு, கொண்டயம் கோட்டை மறவர், அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரிïர் கள்ளர், செம்பநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர். எஞ்சியுள்ள 41 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேரில் எத்தனை சாதியினர் தெரியுமா? சலவை தொழிலாளிகள் 4 லட்சத்து 45 ஆயிரத்து 637 பேர். மருத்துவர், நாவிதர், மங்களா என்று சொல்லப்படுகின்ற வகுப்பினர் 4 லட்சத்து 26 ஆயிரத்து 427 பேர். போயர், ஒட்டர் 4 லட்சத்து 9 ஆயிரத்து 567 பேர். ஆண்டிப் பண்டாரம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 770 பேர். இசை வேளாளர் 58 ஆயிரத்து 327 பேர். குலாலா 3 லட்சத்து ஆயிரத்து 179 பேர். குரும்பர் 1 லட்சத்து 83 ஆயிரத்து 689 பேர். மீனவர் 2 லட்சத்து 71 ஆயிரத்து 164 பேர். தொட்டிய நாயக்கர் 2 லட்சத்து 71 ஆயிரத்து 318 பேர். வேட்டுவ கவுண்டர் 1 லட்சத்து 25 ஆயிரத்து 886 பேர். டொம்மாரா 4 ஆயிரத்து 436 பேர். எரவல்லர் 1,377 பேர். கொரச்சா 3,429 பேர். குருகினிசெட்டி 4,225 பேர். நோக்கர் 7,559 பேர். முக்குவர் அல்லது முகயர் 4,358 பேர்.

பண்ணையார் 9,758 பேர். தொண்டமான் 14 ஆயிரத்து 36 பேர். பட்டு துர்காஸ் 441 பேர். டோம்ஸ் 260 பேர். தொங்க போயா 238 பேர். கொங்க ஊர் கொரச்சார் 287 பேர். தேவகுடி தலையாரி 1,955 பேர். தொப்பை கொரச்சாஸ் வெறும் 51 பேர். குடு தாசரிகள் 482 பேர். மொண்ட கொறவர் 196 பேர். மொண்ட கொல்லா 64 பேர். சேலம் மேல்நாடு கொறவர் 1,839 பேர். சேலம் உப்புக் கொறவர் 2,782 பேர். சாரங்க பள்ளி கொறவர் 54 பேர். தோகமலை கொறவர் அல்லது கேப்மாரிகள் 512 பேர். வயல்பாடு அல்லது நாவல்பேடா கொரச்சாஸ் 15 பேர். வடுவார்பட்டிக் கொறவர் 381 பேர். வரகனேரி கொறவர் 313 பேர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற 109 சாதிகளின் மொத்த மக்கள் தொகை 1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரத்து 987 பேரில், வன்னியர் மாத்திரம் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர்.

ஆதாரம்[தொகு]